இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது.. மம்தா பானர்ஜி கட்சிக்கு புதிய பெயர் - சின்னம் ஒதுக்கீடு

  • கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வரும் 6ம் தேதி அம்மாநிலத்தில் நடக்கும் இடைத்தேர்தலுக்காக மம்தா பானர்ஜி தலைமையிலான அணி மற்றும் அரூப் ராய் தலைமையிலான அணிக்கு தனித்தனியாக பெயர், சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக முதல் முறையாக வென்று ஆட்சியை கைபபற்றியது. 3 முறை தொடர்ந்து ஆட்சியை பிடித்த முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.

    Advertisement

    இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு தரப்பினரும், அரூப் ராய் தலைமையில் இன்னொரு தரப்பினரும் (ரிதப்ரதா பானர்ஜி டீம்) செயல்பட்டு வருகின்றன. உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யார் என்பதில் இருதரப்புக்கும் போட்டி உள்ளது.

    இதற்கிடையே தான் மேற்குவங்கத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதன்பிறகு அக்டோபர் 9 ம் தேதி ரிசல்ட் வெளியாக உள்ளது.

    இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி மற்றும் அரூப் ராய் தரப்பினர் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். அதோடு இருவரும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அந்த கட்சியின் சின்னமான புல்லுடன் கூடிய இரட்டை மலர் சின்னத்தை கோரினார். இதையடுத்து தேர்தல் ஆணையம் கட்சியின் பெயர், சின்னத்தை முடக்கம் செய்தது.

    Advertisement

    அதுமட்டுமின்றி இருஅணியினரும் புதிய சின்னம் மற்றும் கட்சியின் பெயருக்கு விண்ணப்பம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனை இன்று காலை 11 மணிக்குள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து இருதரப்பும் தங்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் எதுவென்ற விவரங்களை வழங்கினர்.
    அதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் இருதரப்புக்கும் கட்சியின் சின்னம், பெயர் ஆகியவற்றை வழங்கி உள்ளது.

    அதன்படி முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி அணி வரும் இடைத்தேர்தலில் 'மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்' என்ற பெயரில் போட்டியிட உள்ளது. இவர்களுக்கு கால்பந்து விளையாடும் வீரர் என்ற சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மம்தா பானர்ஜியின் அதிருப்தி அணி அரூப் ராய் என்பவர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த அணி 'டெமாக்கிரட்டிக் திரிணாமுல் காங்கிரஸ்' என்ற பெயரில் களமிறங்க உள்ளது. இந்த அணியின் வேட்பாளர்களுக்கு 'கடிதம்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மேற்கு வங்கத்தை பொறுத்தவரை கால்பந்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் சின்னத்தை எளிதாக மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்பது மம்தா பானர்ஜி அணிக்கு பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது. தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட 3 மாநிலங்களும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக உள்ளது. இதனால் இந்த 3 மாநிலங்களும் மம்தா பானர்ஜி மற்றுமு் அதிருப்தி அணியான அரூப் ராய் டீம் இந்த பெயர் மற்றும் சின்னத்தில் போட்டியிடும்.

    தற்போது இரு அணிகளுக்கும், இந்த தனிப்பெயர் மற்றும் சின்னம் ஆகியவை தற்காலிகமானது தான். இந்த இடைத்தேர்தலையொட்டி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இருதரப்பினரும் தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தை நாடி உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாங்கள் தான் என்பதை நிரூபித்தால் அவர்களுக்கு அதற்கான உரிமையும் புல்லுடன் கூடிய இரட்டை பூக்கள் சின்னமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    A split has occurred within the Trinamool Congress party, resulting in the freezing of the party's name and symbol. Amidst this situation, the Election Commission of India has announced that for the by-election scheduled in the state on the 6th, the faction led by Mamata Banerjee will operate under the name "Mamata All India Trinamool Congress" and has been allotted the "footballer" symbol.