‘ஜெயிலர் 2' நடிகருக்கு அரசு ஆலோசகர் பதவி.. முதல்வர் காட்டிய தாராளம்! யார் இந்த மிதுன் சக்கரவர்த்தி?

  • கொல்கத்தா: 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை மேற்கு வங்க அரசின் ஆலோசகராக நியமனம் செய்து அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இது கேபினட் அமைச்சருக்கு நிகரான பதவியாகும். இந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி யார்? பதவி கொடுக்கப்பட்டதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    மேற்குவங்கத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சுவேந்து அதிகாரி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் பிரபல நடிகராக இருக்கும் மிதுன் சக்கவர்த்திக்கு அம்மாநிலத்தின் அரசு ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதன்படி மிதுன் சக்கரவர்த்தி மேற்கு வங்க மாநில அரசின் கலாசார ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது சாதரண பதவி அல்ல. இந்த பதவிக்கு கேபினட் அமைச்சருக்கான ரேங்க்கில் வருகிறது.

    இந்த பதவியை பெறும் மிதுன் சக்கரவர்த்தி மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு வயது 76. இவர் இந்தி, வங்காள மொழிகளில் அதிகமான படங்களை நடித்துள்ளார். வங்காள மொழி திரைத்துறையில் முன்னணி நடிகராக ஜொலித்தார். இதுதவிர கன்னடம், ஒடியா, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.
    குறிப்பாக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி அக்டோபர் 15ம் தேதி வெளியாக உள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படித்தல் நடிகர் எஸ்ஜே சூர்யாவிற்கு அப்பாவாக நடித்துள்ளார். அதற்கு முன்பாக நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான 'யாகாவாராயினும் நாகாக்க' என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    English Summary

    West Bengal Chief Minister Suvendu Adhikari has issued an order appointing actor Mithun Chakraborty-who starred in the film ‘Jailer 2'-as an advisor to the state government. This position holds a rank equivalent to that of a Cabinet Minister. Who is Mithun Chakraborty, and what is the background behind this appointment? Let us find out here.