நேபாளத்தில் மீண்டும் துயரம்.. 7,126 மீட்டர் உயரத்தில் உலுக்கிய பனிச்சரிவு.. 10 பேர் மாயம்!

  • காத்மாண்டு: நேபாளத்தின் மானாங் மாவட்டத்தில் திபெத் எல்லையை ஒட்டியுள்ள ஹிம்லுங் ஹிமால் மலையின் அடிவார முகாமில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டதில் மலையேற்ற வீரர்கள், அவர்களுக்கு உதவியாக இருந்த ஊழியர்கள் உட்பட குறைந்தது 10 பேர் மாயமாகியுள்ளனர். 7,126 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலையில் ஏற்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    நேபாளத்தில் சமீபத்தில் தான் மிக பெரிய வெள்ளம் ஏற்பட்டது. மலையின் மீது ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஏற்பட்ட தற்காலிக ஏரியில் இருந்து நீர் உடைந்து வந்ததே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. அந்த பேரழிவில் 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். அந்த துயரத்தில் இருந்து மீள்வதற்குள்ளாகவே நேபாளத்தில் மீண்டும் மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    10 பேர் மாயம்

    நேபாளத்தின் ஹிம்லுங் ஹிமால் மலையின் அடிவார முகாமில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. 7,126 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலையில் ஏற்பட்ட மோசமான பனிச்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாயமானவர்களில் பலர் அங்கு சுற்றுலா சென்றவர்கள் என கூறப்படுகிறது. பனிச்சரிவு நடந்தது உண்மை தான் எனவும் மாயமானவர்களை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக நேபாளம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    நிலைமை உன்னிப்பாக கவனித்து வருவதாக நேபாள சுற்றுலாத்துறையின் தலைமை இயக்குநர் ராம் கிருஷ்ணா லாமிச்சானே தெரிவித்துள்ளார். மாயமானவர்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதுடன், அவர்களை கண்டுபிடித்து மீட்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

    Advertisement

    மோசமான வானிலை

    கடந்த வாரமே மோசமான வானிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அப்பகுதியை சேர்ந்த மிங்மா கியால்ஜே ஷெர்பா தெரிவித்துள்ளார். இதனால் மலையேற்ற குழுக்களும், கயிறு பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த குழுக்களும் மலையில் இருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், சிலர் அங்கிருந்து வெளியேற தயக்கம் காட்டி அங்கேயே தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் தான் இப்போது சிக்கியதாக தெரிகிறது.

    மீட்பு பணிகளை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுத்தாலும் அதிலும் சில சிக்கல்கள் உள்ளன. பனிச்சரிவு ஏற்பட்ட மானாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹிம்லுங் ஹிமால் மலையை அடைவதில் மற்றொரு சிக்கலும் உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஹெலிகாப்டர்கள் இயக்குவது கூட சிக்கலானது. அதற்கும் கூடுதல் அனுமதி தேவைப்படுகிறது. இதனால் மாயமானவர்களை உடனடியாக சென்றடைந்து மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    பனிச்சரிவு

    இப்போது நேபாளம் முழுவதும் மோசமான வானிலை நிலவி வருகிறது. வங்கக் கடல் பகுதியில் உருவான வானிலை அமைப்பு காரணமாக மலைப்பகுதிகளில் கனமழையும், பல இடங்களில் தொடர்ந்து பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மலைச்சரிவும் கனமழையும் தொடர்ந்து வருகிறது. மேலும், மோசமான வானிலை காரணமாக பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில சாலைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

    உயிரிழப்பு

    நேபாளத்தில் கடந்த மாதம் தான் ராசுவா பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் ஏற்பட்டு இருந்தது. அந்த வெள்ளத்தில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 5,000க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. திரிஷூலி ஆற்றங்கரையோர குடியிருப்புகளை அந்த பேரழிவு அடித்துச் சென்றதுடன், நேபாளத்தின் சுற்றுலாத்துறைக்கும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. நேபாளம் அதில் இருந்து மீண்டு வருவதற்குள் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.

    English Summary

    At least 10 people are missing after a massive avalanche struck the base camp of 7,126-metre Himlung Himal(நேபாளத்தில் மோசமான வெள்ளம் 10 பேர் மாயம்): Nepal Avalanche latest news in tamil.