உடலில் துணி இல்லை.. புருஷனை ஏமாற்றி கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த புதுப்பெண்! சிக்கியது எப்படி?

  • லக்னோ: திருமணமாகி ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில் இளம்பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்தபோது கணவரிடம் சிக்கிய சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    உத்தர பிரதேச ஜான்சி மாவட்டம் சிர்கான் கிராமத்தை சேர்ந்தவர் 28 வயது வாலிபர். இவருக்கும் மத்திய பிரதேச மாநிலம் பாந்தர் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி திருமணம் நடந்தது.

    Advertisement

    இந்நிலையில் தான் மனைவி சமைக்கும் உணவை சாப்பிடும்போதெல்லாம் அந்த வாலிபருக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவர் சந்தேகம் அடைந்தார். தனது மனைவி ஏதோ தவறான செயலில் ஈடுபடுவதாக அவர் சந்தேகித்தார்.

    இதற்கிடையே தான் வாலிபர் வீட்டில் இல்லாதபோது இளைஞர் ஒருவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வது தெரியவந்தது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரிடம் தெரிவித்தனர். இதனால் தனது மனைவி கள்ளக்காதலில் இருக்கலாம் என்று சந்தேகித்தார் அந்த வாலிபர். இதுபற்றி மனைவியிடம் கேட்டார். ஆனால் மனைவி சரியாக பதிலளிக்கவில்லை. இது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    Advertisement

    அதுமட்டுமின்றி, தனது மனைவியின் நடத்தையை தீவிரமாக கண்காணிக்க தொடங்கினார். கடந்த 23ம் தேதி வாலிபர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அந்த சமயத்தில் அவரது மனைவியை பார்க்க இளைஞர் வீட்டுக்கு வந்தார். இருவரும் கதவை பூட்டியபடி வீட்டுக்குள் சென்றனர். இதுபற்றி கணவரான அந்த வாலிபருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அந்த வாலிபர் வீடு திரும்பினார். தன்னிடம் இருந்த இன்னொரு சாவியை பயன்படுத்தி வீட்டு கதவை திறந்து உள்ளே பார்த்தார். அப்போது அவரது மனைவி, வீட்டுக்கு வந்த இளைஞருடன் நிர்வாணமாக உல்லாசமாக இருந்தார். இதனை பார்த்து அந்த வாலிபர் அதரி்ச்சியடைந்தார். உடனடியாக அவர் சத்தம் போட்டார். இதில் பதறிப்போன மனைவி அவரது வாயை பொத்தினார். அதுமட்டுமின்றி மனைவியின் கள்ளக்காதலன் வாலிபரின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார்.

    Advertisement

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். உடனடியாக கள்ளக்காதலில் இருந்த இளைஞரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதுபற்றி அறிந்து போலீசார் வந்து இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்தார். அதில், ''எனது மனைவி கள்ளக்காதலில் இருக்கிறார். இதனால் திருமணமாகி ஒன்றரை மாதத்தில் பால், உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டேன்.

    இப்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இருந்ததை பார்த்துவிட்டேன். என்னுடைய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரால் எனது உயிருக்கும், எனது குடும்பத்தினர் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English Summary

    A shocking incident has come to light where a young woman, married just a month and a half ago, was caught by her husband while engaging in an intimate encounter with her lover at home. Startling details regarding the background of this incident have now emerged.