ஜம்மு: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை திருமணம் செய்துகொண்டார். இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் பத்திரிகையாளர்களில் ஒருவரான நிதி ரஸ்தானின் சொத்து மதிப்பு, அவரது கணவர் உமர் அப்துல்லாவை விட பல மடங்கு அதிகம்.
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, மூத்த பத்திரிகையாளரும், தனது நீண்ட நாள் தோழியுமான நிதி ரஸ்தானை முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து உமர் அப்துல்லா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் "புதிய பயணம் தொடங்கியுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
நிதி ரஸ்தான் தனது சமூக வலைதள பக்கத்தில், "திருமணம் முடிந்துவிட்டது" எனக் கூறி திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவர்களது திருமணம் அக்.30 ஆம் தேதி ஸ்ரீ நகரில், நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் புடைசூழ நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, 31 ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜம்மு காஷ்மீர் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. உமர் அப்துல்லாவுக்கு ஏற்கனவே பாயல் என்பவருடன் கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தம்பதிகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். கடந்த ஜூலை மாதம் இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. அதைத் தொடர்ந்து உமர் அப்துல்லாவும், நிதி ரஸ்தானும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். நிதி ரஸ்தான் இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர்களில் ஒருவர். 1974-ல் டெல்லியில் பிறந்த நிதி ரஸ்தான், ஐஐஎம்சி-யில் இதழியல் பட்டம் பெற்றவர். தேசிய அரசியல் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்கியதன் மூலம் இவர் தேசிய அளவில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பத்திரிகையாளர்களில் ஒருவர். கடந்த 2005 ஆம் ஆண்டு, நிலேஷ் மிஸ்ராவை திருமணம் செய்தார் நிதி. அவர்கள் 2007ல் விவாகரத்து செய்து கொண்டனர். இந்நிலையில், தற்போது, 56 வயதாகும் உமர் அப்துல்லாவை கரம் பிடித்துள்ளார் 53 வயதாகும் நிதி ரஸ்தான். ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனக்கு எந்த அசையா சொத்தும் இல்லை எனவும், தனது சொத்து மதிப்பு மொத்தம் ரூ. 55.24 லட்சம் எனவும், அதில் ரூ. 95,000 ரொக்கமாக கையில் இருப்பதாகவும், 23.50 லட்சம் நிலையான வைப்புத் தொகை இருப்பதாகவும், ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளதாகவும் கடந்த 2024 தேர்தலின்போது தெரிவித்திருந்தார். முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் மகனும், தற்போதைய முதலமைச்சருமான உமர் அப்துல்லா கோடீஸ்வரர் கூட இல்லை. அவரது தந்தை பரூக் அப்துல்லா, 2019 மக்களவைத் தேர்தலின்போது, தனக்கு 12.19 கோடி மதிப்புள்ள மொத்த சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உமர் அப்துல்லாவை திருமணம் செய்துகொண்டுள்ள பத்திரிகையாளர் நிதி ரஸ்தானின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ. 45 கோடி. ஊடக நிறுவனத்தில் தொகுப்பாளராக ஆண்டுக்கு ரூ. 10 கோடி சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது மாத சம்பளம் ரூ. 83.33 லட்சம் வரை சென்றது. நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி தொகுப்பாளராக அறியப்பட்டவர் நிதி ரஸ்தான். அவரது தினசரி வருமானம் ரூபாய் 4.75 லட்சத்திற்கும் மேல்.உமர் அப்துல்லா - நிதி ரஸ்தான் திருமணம்
யார் இந்த நிதி ரஸ்தான்?
உமர் அப்துல்லா சொத்துகள்
நிதி ரஸ்தான் சொத்து மதிப்பு