டேய் மனசாட்சியே இல்லையாடா.. 8 மாதம் போராடி நதியை சுத்தப்படுத்திய இன்ஸ்டா பிரபலத்துக்கு அடுத்த அடி

  • போபால்: மத்திய பிரதேசத்தில் நதி என்று சொல்ல முடியாத அளவுக்கு குப்பைகளால் நிறைந்து இருந்த அஜ்னார் நதியை 'பிட்டு தபாஹி' என்பவர் 8 மாதம் போராடி தூய்மைப்படுத்தினார். ஆனால் அடுத்த ஒரு மாதத்துக்குள் அந்த நதியை பொதுமக்கள் மாசுப்படுத்திய நிலையில் தற்போது பிட்டு தபாஹிக்கு 2 அடி விழுந்துள்ளது. கரையோரத்தில்அவர் வைத்த குப்பை தொட்டியை கூட விடாமல் யாரோ திருடி சென்றுள்ளனர்.

    Advertisement

    மத்திய பிரதேச மாநிலம் பியாரோ நகரில் அஜ்னார் என்ற நதி ஓடுகிறது. இந்த நதி மாசடைந்து காணப்பட்டது.நதியில் தண்ணீரை மறைக்கும் அளவுககு குப்பைகள் தேங்கியிருந்தது. பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட ஏராளமான குப்பைகள் நதியையே மொத்தமாக மறைத்து இருந்தது.

    Advertisement

    இதனால் இந்த நதி தண்ணீரை யாரும் பயன்படுத்த முடியாத நிலை வந்தது. இதையடுத்து பியாரோ நகரில் வசிக்கும் சுரேந்திர சிங் சவுத்ரி என்ற பிட்டு தபாஹி இந்த நதியை சுத்தப்படுத்த தொடங்கினர்.

    தனி ஒருவன் நினைத்து விட்டால்! மாசடைந்த ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்த இந்திய இளைஞர்! யார் இந்த பிட்டு

    பிட்டு தபாஹிக்கு தற்போது 21 வயது ஆகிறது. கல்லூரியில் பிஎஸ்சி படிப்பை படித்து வரும் நிலையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நதியில் தூய்மை பணியில் ஈடுபட்டார். 8 மாதம் போராடி அவரை நதியை சுத்தமாக்கினார். ஒரு குப்பை கூட இல்லாதவாறு மாற்றினார். இது கவனம் பெற்றது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தது.

    Advertisement

    ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே பிட்டு தபாஹி நொந்துபோனார். ஏனென்றால் அவர் 8 மாதம் போராடி தூய்மைப்படுத்திய நதி அடுத்த 4 வாரத்தில் மாசடைந்தது. பொதுமக்கள் குப்பைகள், மாலைகளை நதியில் வீசினர். இதனால் மனம் நொந்த பிட்டு தபாஹி அதனை வீடியோ எடுத்து தனது கவலையை பகிர்ந்தார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பிட்டு தபாஹி நதிக்கரையில் 2 பேரல்களை வைத்தார். பொதுமக்கள் நதியில் குப்பைகளை கொட்டுவதை தடுப்பதற்காக அவர் இதனை செய்தார். நதியில் குப்பை கொட்ட வரும் மக்கள் இந்த பேரல்களில் அதனை தட்டுவார்கள் என்று நினைத்தார். ஆனால் யாரோ ஒருவர் பிட்டு தபாஹி வைத்த பேரல்களில் ஒன்றை திருடி சென்றுவிட்டனர்.

    Advertisement

    இதனால் பிட்டு தபாஹி மீண்டும் நொந்துபோய் உள்ளார். இதுதொடர்பாக வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில், ''நான் இங்கு குப்பை தொட்டிகளை எனது சொந்த பயன்பாட்டிற்காக வைக்கவில்லை. மாறாக மக்கள் தங்களின் குப்பைகளை போடுவதற்காக வைத்தேன். இதனால் நதி மீண்டும் மாசடைவது தடுக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் 2 குப்பை தொட்டியில் ஒன்றை திருடி சென்றுவிட்டனர்'' என நொந்தபடி பேசியுள்ளார்.

    இந்த வீடியோவை பார்க்கும் பலரும் மர்மநபரை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி நதியை சுத்தம் செய்து குப்பைகள் கொட்ட பேரல் வைத்த அவரது உணர்வை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்று அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர்.

    English Summary

    In Madhya Pradesh, a man named Bittu Tabahi spent eight months working to clean up the Ajnar River-a waterway that had become so choked with trash it could hardly be called a river anymore. However, within just a month, the public polluted the river once again. To make matters worse, Bittu Tabahi was recently beaten-receiving two blows-and someone even stole the trash bin he had placed along the riverbank.