சோயிப் அக்தருடன் நெருக்கமாக இருக்கும் பஹல்காம் பயங்கரவாதி.. சகோதரர் மறைவில் என்ன நடந்தது? வீடியோ

  • இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் சகோதரர் ஷாஹித் அக்தரின் இறுதி சடங்கில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியும், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சைஃபுல்லா கசூரி பங்கேற்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    Advertisement

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்.பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் கடந்த 2011ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது அவர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

    Advertisement

    இவரது சகோதரர் ஷாஹித் அக்தர் மறைந்தார். இவரது இறுதி சடங்கு தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஜுன் 24ல் நடந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது. இதில் சோயிப் அக்தரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர். இந்த இறுதி சடங்கில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் பங்கேற்றனர்.

    மும்பை 26/11 தாக்குதல் மற்றும் பஹல்காம் தாக்குதல் உட்பட இந்தியாவில் பல கொடிய பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதிகள் இந்த இறுதி சடங்கில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 2025ம் ஆண்டில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சைஃபுல்லா கசூரி பங்கேற்றுள்ளான். இந்த பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வெடித்தது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது.

    Advertisement

    கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நுழைந்த 4 பயங்கரவாதிகள் 25 சுற்றுலா பயணிகளை சுட்டு கொன்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் தான் இந்த சைஃபுல்லா கசூரி. இதற்குப் பதிலடியாக நம் நாடு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதுடன், 'ஆபரேஷன் சிந்துர்' மூலம் லஷ்கர் இ தொய்பாவின் தலைமையிடமான முரித்கே உட்பட முக்கிய பயங்கரவாத முகாம்களை அழித்தது. மேலும் ராவல்பிண்டி முதல் சுக்கூர் வரையிலான ராணுவ தளங்களையும் குறிவைத்து தாக்கியது. நம் நாட்டின் பதிலடியில் கலங்கிப்போன பாகிஸ்தான் மண்டியிட்டு சரணடைந்தது. இதையடுத்து தான் போர் முடிவுக்கு வந்தது.

    Advertisement

    அதன்பிறகும் கூட சைஃபுல்லா கசூரி திருந்தவில்லை. கடல் வழியாக பயங்கரவாதிகளை அனுப்பி மும்பை 26/11 பாணியில் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டி இருந்தான். இப்போது சோயிப் அக்தர் சகோதரரின் இறுதி சடங்கில் பங்கேற்றுள்ளான்.

    அதேபோல் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் அரசியல் முகமான பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக் (PMML) தலைவர் இனாம் உர் ரஹ்மானும் இந்த இறுதி சடங்கில் பங்கேற்றார். ஐநா சபையால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத், ஜமாத்-உத்-தவா (JuD) மற்றும் மில்லி முஸ்லிம் லீக் (MML) போன்ற தனது அமைப்புகளுக்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு தடைகளை தவிர்ப்பதற்காக பிஎம்எம்எல் கட்சி உருவாக்கப்பட்டு கடந்த 2024 பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தது.

    Advertisement

    சைஃபுல்லா கசூரி உள்பட பிற பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது என்பது இந்தியாவுக்கு எதிரான அந்த நாட்டின் நிலைப்பாட்டை வெளிப்படையாக காட்டுகிறது. மேலும் தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்குவதையும், பயங்கரவாதிகளால் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாட முடியும் என்பதையும் இந்த வீடியோ உணர்த்தி உள்ளது.

    English Summary

    Shahid Akhtar, the brother of former Pakistani cricketer Shoaib Akhtar, passed away. The participation of Lashkar-e-Taiba (LeT) terrorists and the group's deputy leader, Saifullah Kasuri, in his funeral rites caused a major stir.