பிரதமர் மோடி மக்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்.. கங்காநகர் தெரியுமா? இந்தியாவை மிரட்டும் ஒரு விஷயம்

  • இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடப்பு 2026-ஆம் ஆண்டின் கோடைகால வெப்ப அலையின் தாக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

    Advertisement

    சர்வதேச காற்றுத்திறன் மற்றும் வானிலை தரவு அமைப்பான 'aqi.in' வெளியிட்டுள்ள 2026 மே 27 மதியம் 3:49 மணி வரையிலான உலகளாவிய ரியல் டைம் தரவுகளின்படி (Real-Time Data), உலகிலேயே மிக அதிக வெப்பநிலை பதிவாகியுள்ள முதல் 100 நகரங்களின் பட்டியலில், தொடர்ச்சியாக முதல் 78 இடங்களை இந்திய நகரங்களே ஆக்கிரமித்துள்ளன என்ற அதிர வைக்கும் உண்மை வெளியாகியுள்ளது.

    Advertisement

    டாப் 100 நாடுகள்

    டாப் 100 உலகளாவிய நகரங்கள் பட்டியலில் 96 நகரங்களில் 96 இந்திய நகரங்கள் உள்ளது. இப்பட்டியலில் 79-வது இடத்தில்தான் வெளிநாட்டு நகரமான ஈரானின் போரஸ்ஜன் (45 டிகிரி செல்சியஸ்) இடம் பிடித்துள்ளது. வட மாநிலங்களில் நிலவும் இந்த அதிரடி வெப்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான சில அவசர ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

    இந்தியாவின் டாப் 10 ஹாட்டான நகரங்கள்

    தற்போதைய ரியல்டைம் புள்ளி விவரங்களின்படி, இந்தியாவின் மிக வெப்பமான நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீ கங்காநகர் 49 டிகிரி செல்சியஸ் என்ற உக்கிரமாக வெப்பநிலையுடன் உலகிலேயே வெப்பமயமான நகரம் என்ற பெயரை பெற்று முதலிடத்தில் உள்ளது.

    Advertisement

    இதனைத் தொடர்ந்து பஞ்சாபின் பாதிந்தா, பரீத்கோட், உத்தரப் பிரதேசத்தின் பதேபூர், இடாவா, மிர்சாபூர், பிரயாக்ராஜ், ராஜஸ்தானின் பிகானேர், பரத்பூர் மற்றும் ஒடிசாவின் பலாங்கிர் ஆகிய ஒன்பது நகரங்களும் தலா 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் அடுத்தடுத்த இடங்களில் நிலவி வருகின்றன. இந்த அதீத வெப்ப அலையானது சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது.

    மோடியின் அட்வைஸ்

    நாட்டின் தற்போதைய கடுமையான சூழ்நிலையைக் குறித்துப் பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிகப்படியான வெயிலினால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை மக்கள் அலட்சியப்படுத்தக் கூடாது என எச்சரித்துள்ளார்.

    Advertisement

    திடீர் மயக்கம், வாந்தி, அல்லது கடுமையான உடல் சோர்வு மற்றும் தலைவலி போன்றவை ஏற்பட்டால், அது 'ஹீட் எக்ஸ்ட்ராஷன்' எனப்படும் கடுமையான வெப்ப சோர்வின் அறிகுறியாகும்.

    இதனை ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறினால், அது உயிருக்கே ஆபத்தான 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்ப பக்கவாதமாக மாறக்கூடும். எனவே, யாரேனும் பலவீனமாக உணர்ந்தால், அவர்களை உடனடியாக குளிர்ந்த நிழலான இடத்திற்கு மாற்றி, போதிய நீர் அல்லது ஓஆர்எஸ் (ORS) கரைசல் வழங்கி முதலுதவி அளிக்க வேண்டும் எனப் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

    முதியவர்கள் மற்றும் தொழிலாளர்கள்

    இந்தக் கடுமையான வெப்ப அலையின் போது, வீடுகளில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் (Outdoor Workers) ஆகியோர் மிக எளிதாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    Advertisement

    பகல் நேரத்தின் உச்சகட்ட வெயில் நேரத்திலும், மதிய வேளைகளில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வயதான பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களைத் தொலைபேசி மூலம் அவ்வப்போது அழைத்து, அவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்கிறார்களா மற்றும் ஓய்வெடுக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துவது இந்த நேரத்தில் மிகவும் அவசியமான ஒன்று எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

    இந்த இக்கட்டான கோடை காலத்தில் சக மனிதர்கள் மீதும், வாயில்லாப் பிராணிகள் மீதும் காட்டும் சிறு கருணை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் பிரதமர் தனது செய்தியில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எப்போதும் தேவையான அளவு குடிநீரைக் கையோடு எடுத்துச் செல்ல வேண்டும். அதேபோல், இந்த கடுமையான கத்திரி வெயிலில் தவிக்கும் பறவைகள் மற்றும் விலங்குகளின் தாகத்தைத் தீர்க்கும் வகையில், நமது வீட்டின் பால்கனிகள், மொட்டை மாடிகள், கடைகள் அல்லது அலுவலகங்களுக்கு வெளியே ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும் என்றும், இந்த இக்கட்டான நாட்களை நாம் அனைவரும் மனிதநேயத்துடனும் இரக்கத்துடனும் கடக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

    English Summary

    India is experiencing an extreme heatwave with Sri Ganganagar recording 49°C, topping the global list of hottest cities, while 78 Indian cities occupy the first 78 positions worldwide. Prime Minister Narendra Modi has urged citizens to stay hydrated, avoid peak afternoon sun, and take care of the elderly, children, and outdoor workers to prevent heatstroke and exhaustion. , பிரதமர் மோடி மக்களுக்கு வெப்ப அலையிலிருந்து பாதுகாக்கும் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.