சக்சஸ்! 470 கிமீ உயரத்தில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்ட 2 SpaDeX செயற்கைகோள்கள்! இஸ்ரோ விஞ்ஞானிகள் குஷி
ஸ்ரீஹரிகோட்டா: விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்தன. இதையடுத்து, பூமியில் இருந்து 470 கி.மீ உயரத்தில் 2 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ராக்கெட் செயல்பாடுகள் திட்டமிட்டபடி நடப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு மையத்தை நிறுவ இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் SPACE DOCKING பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, ஸ்பேடெக்ஸ் திட்டத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்தனர்.

SPADEX (Space Docking Experiment) திட்டத்தின் கீழ், இரு தனித்தனி விண்கலங்களை விண்வெளியில் இணைக்கும் "டாக்கிங்" எனப்படும் தொழில்நுட்பம் சோதனை நடத்தப்பட உள்ளது. இது வெற்றிகரமாக முடிந்தால், இந்த சாதனையை படைக்கும் நான்காவது நாடாக இந்தியா இடம்பெறும்.
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இரவு 10 மணியளவில் விண்ணில் பாய்ந்தது. PSLV-C60 ராக்கெட் மூலம் 220 கிலோ எடை கொண்ட SDX-1 மற்றும் SDX-2 எனப்படும் இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் விண்ணில் பாய்ந்தன. இவை 220 கிலோ எடை கொண்டவை. இவை 470 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்படும்.
இந்த 2 ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்கள் உட்பட மொத்தம் 24 ஆய்வுக் கருவிகள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் இடம்பெற்றுள்ளன. ராக்கெட்டின் போயம்-4 எனப்படும் நான்காம் நிலையில் இந்த ஆய்வுக் கருவிகள் இருக்கும். இதில் 14 ஆய்வுக் கருவிகள் இஸ்ரோ தயாரித்தவை. எஞ்சிய 10 கருவிகளும் கல்வி நிறுவனங்களும் பிற தனியார் நிறுவனங்களும் தயாரித்தவை.
விண்ணில் ஏவப்பட்டுள்ள 2 ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்கள் விண்ணில் 20 கி.மீ தூரத்தில் வெவ்வேறு திசையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 2 விண்கலங்களில் ஒன்று Chaser மற்றொன்று Target. முதலில் இலக்கில் நிலைநிறுத்தப்படும் விண்கலத்துடன் Chaser விண்கலம் இணைக்கப்படும். சில மாதங்களுக்கு பிறகு அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த செயல்முறை தான் டாக்கிங் எனப்படுகிறது.
நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பவும், விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும், இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், இங்கிருந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும். அங்கு இருப்பவர்களை இங்கு அழைத்து வர முடியும்.
இந்நிலையில், இன்று இரவு 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி60 ராக்கெட், திட்டமிட்டபடி செயல்பாடுகளை மேற்கொண்டது. ராக்கெட்டின் முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்தன. இதையடுத்து, பூமியில் இருந்து 470 கி.மீ உயரத்தில் புவி வட்டப் பாதையில் 2 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
2 ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். PSLV C60 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, பி செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் இந்த 2 செயற்கைக்கோள்களையும் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த செயற்கைக்கோள்களும் பயணிக்கும் வேகத்தை இங்கிருந்தபடியே மாற்றி 2 செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் இணைப்பார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications