பிரதமர் மோடி மாதிரி மிமிக்ரி.. வெடித்து சிரித்த ராகுல் காந்தி.. காங்கிரஸ்- பாஜக இடையே மோதல்!

  • இந்தூர்: பிரதமர் நரேந்திர மோடியை பிரபல காமெடி நடிகர் புல்கித் மணி மிமிக்ரி செய்த விவகாரம் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கைகளையே தாங்கள் விமர்சிப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. மறுபுறம், பிரதமர் மோடியின் தாயாரை ராகுல் காந்தி விமர்சிப்பதாக பாஜக சாடியுள்ளது.

    Advertisement

    மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியுடன் காமெடியன் புல்கித் மணி என்பவரும் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியின் பேச்சு மற்றும் உடல்மொழியை போல புல்கித் நடித்து காட்டினார். அப்போது ராகுல் காந்தியும் அவருடன் மேடையில் இருந்தார்.

    Advertisement

    மை பிரண்ட்

    வெளிநாட்டுத் தலைவர்களை சந்திக்கும்போது மோடி பயன்படுத்தும் "மை பிரண்ட்" என்ற வார்த்தை, அவரது பேச்சு முறை, வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்புகள் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து புல்கித் மணி கமெடி செய்தார். "மை பிரண்ட், ஹவ் ஆர் யூ" என்று அவர் மோடியை போல பேசியபோது, அதற்கு ராகுல் காந்தி "நான் நன்றாக இருக்கிறேன். ஹவ் ஆர் யூ மோடி ஜி" என்றார். தொடர்ந்து மோடியின் பேச்சு மற்றும் அவரது ஸ்டைலை மிகைப்படுத்தி புல்கித் காமெடி செய்தார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

    Advertisement

    இந்த நிகழ்ச்சியின் போது மோடியின் தாயை குறிப்பிட்டும் புல்கித் மணி பேசியிருந்தார்.. இந்தியாவில் நடந்த ஏஐ மாநாட்டில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோ இந்திய ரோபோ போல காட்சிப்படுத்தப்பட்டது சர்ச்சையானது. அதையும் நக்கல் செய்யும் விதமாக புல்கித் நடித்து காட்டினார். மேலும், குழந்தைகளை சந்திக்கும் போகு, பிரதமர் மோடி செய்வதையும் புல்கித் மணி மிமிக்ரி செய்தார். தனது நெற்றியில் நாணயத்தை வைத்துக்கொண்டு அவர் நடித்திருந்தார்.

    டிரெண்டிங்

    இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தது. இது சமூக வலைத்தளங்களில் உடனடியாக டிரெண்டாது. வெறும் சில மணி நேரத்தில் பல லட்சம் வியூஸ்களை பெற்றது. காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் அந்த வீடியோவை ரீட்வீட் செயத்னர். அது உடனடியாக ட்ரெண்டானது. இதற்கிடையே இந்த வீடியோவுக்காக பாஜக தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக, பிரதமரின் மறைந்த தாயை குறிப்பிட்டு நகைச்சுவை செய்யப்பட்டதாக கூறி பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.

    Advertisement

    பாஜக

    பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "ஒருபுறம் பிரதமர் மோடி வயதான தாயிடம் மரியாதையுடனும் அன்புடனும் நடந்து கொண்டார். மறுபுறம் ராகுல் காந்தி அதையே தனது கேலி செய்தார்" என்று எதிர்ப்பை பதிவிட்டுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவனும் ராகுல் காந்தியை விமர்சித்தார். பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமதிக்கும் வகையிலான பேச்சுகளுடன் இதுபோல செய்வது எதிர்க்கட்சி தலைவருக்கு அழகில்லை என விமர்சித்திருந்தார். மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியை மிக கடுமையாக விமர்சித்தனர்.

    ராகுல் காந்தி

    இதற்கிடையே அதே நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமரின் வெளிநாட்டு கொள்கையை விமர்சித்தார். அப்போது அவர், "நீங்கள் நண்பரின் வீட்டுக்கு போவது போல பிரதமர் நடந்து கொள்ளக்கூடாது. இந்தியாவின் பிரதமராக இருக்கும் ஒருவர் வெறும் நட்பை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. நாட்டை பாதுகாப்பதே அவரது பணி" என்றார்.

    English Summary

    Comedian Pulkit Mani’s mimicry of Prime Minister Narendra Modi at Rahul Gandhi’s event in Indore(ராகுல் காந்தியை மிக கடுமையாக சாடிய மோடி): Rahul Gandhi vs Modi Latest news in tamil.