தமிழ்நாடு இல்லை.. 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறிய சிக்கிம்.. 5வது மாநிலமாக சாதனை.. லிஸ்ட் இதோ

  • காங்டாக்: நம் நாட்டின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றாக உள்ள சிக்கிம் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் 5வது மாநிலமாக சிக்கிம் இணைந்துள்ளது.

    Advertisement

    இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த மாநிலமாக சிக்கிம் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் இந்த மாநிலத்தின் மக்கள்தொகை சுமார் 7 லட்சமாகும். இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் இந்த மாநிலத்தின் பங்களிப்பு 0.05 சதவீதமாக உள்ளது.

    Advertisement

    இந்நிலையில் தான் சிக்கிம் மாநிலம் புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது சிக்கிம் மாநிலத்தின் கல்வி துறையில் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

    அதாவது சிக்கிம் மாநிலம் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ULLAS (Understanding of Lifelong Learning for All in Society) திட்டத்தின் கீழ், சிக்கிம் முழு எழுத்தறிவு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சகத்தால் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-உடன் இணைந்து தொடங்கப்பட்ட ULLAS திட்டம், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தனிநபர்களுக்கு வயது வந்தோர் கல்வி, எழுத்தறிவு, வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுசெயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஜனாதிபதி திரெளபதி முர்மு தலைமையில் தலைநகர் காங்டாங்க்கில் உள்ள மனன் கேந்திராவில் நடந்த சிக்கிம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுபற்றி சிக்கிம் முதலமைச்சர் பிரேம்சிங் தாமாங் கூறுகையில், ''சிக்கிம் நாட்டின் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக சாதனை படைத்துள்ளது. இது மாநிலத்தின் கல்வி, அதிகாரம், தன்னம்பிக்கை, சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து முன்னேற்றத்திற்கு அடிப்படையானதாக அமையும்.

    ஜனாதிபதி திரெளபதி முர்முவின் முன்னிலையில் 100 சதவீதம் எழுத்தறிவு மாநிலமாக சிக்கிம் அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சாதனை உண்மையில் ஊக்கமிளக்கும். ஒவ்வொரு மக்களின் விடாமுயற்சியால் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் எனப் பலர் தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டனர். மாநில மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்'' என்றார். 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலம் என அறிவிக்கப்பட்டதால் அதன் பெருமையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    Advertisement

    நம் நாட்டில் இதுவரை மொத்தம் 4 மாநிலங்கள் தான் 100 சதவீதம் எழுத்தறிவு கொண்டவையாக உள்ளன. மிசோரம், கோவா, திரிபுரா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே இந்த பட்டியலில் இருந்த நிலையில் தற்போது சிக்கிம் 5 மாநிலமாக இணைந்துள்ளது. அதோடு வடகிழக்கு மாநிலங்களில் இந்த பெருமையை அடையும் மூன்றாவது மாநிலம் இதுவாகும். ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களான மிசோரம் ிரிபுராவை தொடர்ந்து சிக்கிம் இந்த சாதனையை படைத்துள்ளது.

    English Summary

    Sikkim Literacy: Sikkim has been declared a full literacy state under the ULLAS programme, advancing lifelong learning and social development. The achievement aligns with NEP 2020 aims and reflects strong leadership, widespread educational outreach, and inclusive progress across all communities.