இஸ்ரோ இல்லை.. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த தனியார் நிறுவனத்தின் விக்ரம்-1 ராக்கெட்! இதுவே முதல்முறை

  • ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் இன்று புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இதுவரை இஸ்ரோ தயாரித்த ராக்கெட்கள் மட்டுமே ஏவப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் தயாரித்த விக்ரம்-1 ராக்கெட் இன்று (ஜூலை 18) விண்ணில் பாய்ந்தது. முதலில் இந்த ராக்கெட் காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது. இருப்பினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 35 நிமிடங்கள் தாமதமாக 12.05 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

    Advertisement

    கடந்த சில ஆண்டுகளாக விண்வெளி துறையில் இந்தியா அசுர வளர்ச்சியை அடைந்தது. யாருமே கனவிலும் எதிர்பார்க்காத அளவுக்கு மிக குறைந்த செலவில் தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வந்தது. இந்தச் சூழலில் தான் இந்தியா இப்போது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ரெடியாகி வருகிறது.

    Advertisement

    இஸ்ரோ

    அதாவது இத்தனை காலம் விண்வெளி துறையில் இஸ்ரோ மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. இந்தச் சூழலில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை மத்திய அரசு அனுமதித்தது. அதைத் தொடர்ந்து பல தனியார் நிறுவனங்கள் விண்வெளி துறையில் கவனம் செலுத்தின. குறுகிய காலத்தில் பல தனியார் நிறுவனங்கள் ஆய்வுகளைத் தொடர்ந்தன.

    இந்தச் சூழலில் தான் இன்று இந்தியாவின் தனியார் விண்வெளி துறையில் இன்று மாபெரும் புரட்சி நடந்துள்ளது. இதுவரை இஸ்ரோவின் ராக்கெட்கள் மட்டுமே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட நிலையில், இன்று முதல்முறையாக தனியார் நிறுவனத்தின் ராக்கெட் ஏவப்பட்டது. முழுமையாக இந்திய மண்ணில் இருந்து வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் முதல் ஆர்பிட்டல் ராக்கெட் இதுவாகும். இதன் மூலம் இந்தியாவின் விண்வெளி ஆய்வுகள் புதிய கட்டத்தை எட்டுகிறது.

    Advertisement

    தனியார் ராக்கெட்

    சுமார் ஏழு மாடி கட்டிட உயரம் கொண்ட விக்ரம்-1 ராக்கெட், 450 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள லோவர் எர்த் ஆர்பிட் பகுதிக்கு சாட்டிலைட்களை எடுத்து செல்ல உருவாக்கப்பட்டுள்ளது. 350 கிலோ வரை எடையுள்ள சாட்டிலைட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட இந்த ராக்கெட், கார்பன் காம்போசிட் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எஞ்சின்கள் மற்றும் உயர் சக்தி கொண்ட திட எரிபொருள் மோட்டார்களும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது.. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டு இருந்தது.. வானிலையும் தெளிவாக இருந்ததால் ராக்கெட் லாஞ்சில் எந்தவொரு கடைசி நேர சிக்கலும் ஏற்படவில்லை.

    Advertisement

    இருப்பினும், ராக்கெட் ஏவ 5 நிமிடங்கள் இருக்கும்போது. அதாவது 11.25 மணிக்கு ராக்கெட் கவுண்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில், விக்ரம் 1 ராக்கெட் சரியாக 12.05 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. விக்ரம் 1 வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது, தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கு மிக பெரிய பூஸ்ட்டாகவே இருக்கிறது.

    English Summary

    Skyroot Aerospace is set to launch Vikram-1, India's first privately developed orbital-class rocket(இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று ஏவப்படுகிறது): India Private rocket launch latest news in tamil.