பலாத்கார புகார் கூறிய கன்னியாஸ்த்திரிக்கு உறவினர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது.. இயேசு சபை பகீர்


திருவனந்தபுரம்: பிஷப் மீது பலாத்கார புகார் கூறிய கன்னியாஸ்த்திரிக்கு உறவினர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது என இயேசு சபை குற்றம்சாட்டியுள்ளது.

கேரள மாநில பாதிரியார்கள் 5 பேர் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பலாத்கார புகார் கொடுத்தார்.

பிஷப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக நியாயம் கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பிஷப் மீது புகார்

ஆனால் இதுவரை பிஷப் மீது எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் தெரியவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவிடம் பலாத்காரம் குறித்து புகார் அளித்துள்ளார்.

பலதடவை பலாத்காரம்

அதாவது கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை, பேராயர் முலக்கல், என்னை பலதடவை பலாத்காரம் செய்தார். அச்சமும், அவமானமும் இருந்ததால், நான் வெளியே சொல்லவில்லை. தற்போது நான் புகார் கொடுத்த பிறகும், திருச்சபை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

பணபலத்தை பயன்படுத்தி

பேராயர் முலக்கலை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருகிறார். ஆகவே, தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கன்னியாஸ்த்திரி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கன்னியாஸ்த்திரிக்கு கள்ளஉறவு

இந்த நிலையில் இயேசு சபையின் மிஷனரிகள், பிஷப்பை குற்றம் சாட்டியிருந்த கன்னியாஸ்த்திரி தனது உறவினர்களில் ஒருவருடன் கள்ள உறவு வைத்து இருந்தார். அது குறித்து புகார் அளித்ததால் பிஷப் பிராங்கோ மீது கன்னியாஸ்த்திரி பாலியல் பலாத்கார புகார் சுமத்தி உள்ளார் என தெரிவித்துள்ளனர்.

உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்

கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்ட போராட்டம் தேவாலயத்தையும் சபையையும் அழிக்கும் திட்டம் என்றும் இயேசு சபை குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று இயேசு சபை தெரிவித்துள்ளது.

தொடரும் சர்ச்சைகள்

பாதிரியார்களால் பலாத்காரம், கன்னியாஸ்த்திரீகள் போராட்டம், கன்னீயாஸ்த்திரி மர்ம மரணம், பிஷப் மீது பலாத்கார புகார், வாடிகன் திருச்சபைக்கு புகார் கடிதம் போன்றவற்றால் கேரளாவில் மீண்டும் அனல் பறக்க தொடங்கியுள்ளது.

Read more about: கேரளா

Have a great day!
Read more...

English Summary

The Nun has illicit relationship with her relative says Kerala Iyesu sabha.The Nun given rape complaint against a bishap in Kerala.