சேலை குவியலுக்குள் புகுந்த திரிணாமுல் தலைவர்.. தட்டி தூக்கிய போலீஸ்.. அரங்கேறிய விசித்திர டிராமா!

  • கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இப்போது பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், திரிணாமுல் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான திரிணாமுல் தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் பிரமுகர் ஒருவர் போலீசாருக்கு பயந்து துணிக்கடை குடோனில் இருந்த சேலைக் குவியலுக்குள் ஒளிந்து கொண்ட கூத்து அரங்கேறியுள்ளது.

    Advertisement

    மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் இந்த முறை தோல்வி அடைந்தது. குறிப்பாக மம்தா கூட தனது சொந்தத் தொகுதியான பவானிபூரில் தோல்வி அடைந்தார். இதையடுத்து அங்கு சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்துள்ளது. அங்கு பாஜக ஆட்சி அமைந்தது முதலே திரிணாமுல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது.

    Advertisement

    மேற்கு வங்கம்

    அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம், உதய்நாராயண்பூர் பகுதியில் உள்ள பில்சாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரம்மானந்த சக்ரவர்த்தி. இவர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் பிரமுகர் ஆவார்.

    மத்திய, மாநில அரசுகளின் ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளிடம் இருந்து, பிரம்மானந்த சக்ரவர்த்தி சட்டவிரோதமாக கமிஷன் தொகையைக் கட்டாயமாக வசூலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏழைகளின் பணத்தை இப்படி அநியாயமாகச் சுருட்டி வந்த இவரது செயல், அப்பகுதி மக்களைக் கடும் கொந்தளிப்புக்குள்ளாக்கியது.

    Advertisement

    கொந்தளித்த மக்கள்

    நடந்த முடிந்த தேர்தலில் திரிணாமுல் படுதோல்வி அடைந்த நிலையில், மக்கள் இவருக்கு எதிராகக் கொந்தளித்தனர். கிராம மக்கள் அனைவரும் திரண்டு சென்று, உள்ளூர் காவல் நிலையத்தில் பிரம்மானந்த சக்ரவர்த்திக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடிப் பிடிக்க ஸ்பெஷல் ஆபரேஷனில் இறங்கினர்.

    புடவைக்குள் பதுங்கிய திரிணாமுல் தலைவர்

    போலீசார் தன்னை நெருங்குவதையும், கைது செய்ய வருவதையும் மோப்பம் பிடித்த பிரம்மானந்த சக்ரவர்த்தி, அங்கிருந்து நைசாக நழுவி அருகில் இருந்த ஒரு பெரிய துணிக்கடை குடோனுக்குள் நுழைந்தார். அங்கே கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சேலைகளுக்கு நடுவே, யாருக்கும் தெரியாமல் ஒரு குவியலுக்குள் புகுந்து தன்னை முழுமையாக மறைத்துக் கொண்டார்.

    Advertisement

    ஆனால், அவரது இந்த 'சேலை' ஐடியா சுத்தமாக வேலை செய்யவில்லை. குடோன் முழுக்க அங்குல அங்குலமாகத் தேடிய போலீசார், கடைசியில் அந்தச் சேலைக் குவியலை அள்ளிய போது உள்ளே ஒளிந்திருந்த பிரம்மானந்த சக்ரவர்த்தியை கச்சிதமாகக் கண்டுபிடித்தனர். சேலைகளுக்கு நடுவிலிருந்து அவரைப் போலீசார் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்து, ஸ்பாட்டிலேயே அதிரடியாகக் கைது செய்தனர்.

    டிரெண்டிங்

    அவர் சேலைக்குள் இருந்து வெளியே வரும் அந்த வினோதமான காட்சி, தற்போது சோஷியல் மீடியாக்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. போலீசுக்கு பயந்து சீலைகளுக்கு நடுவே ஒளிந்த அவரை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

    Advertisement

    ஏற்கனவே இதே மேற்கு வங்கத்தின் கோச் பெஹார் பகுதியில், ஷாஹிதுல் மியா என்ற மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரை, கோபமடைந்த கிராம மக்கள் துரத்திக் கொண்டு ஓட, அவர் பயந்துபோய் தனது வீட்டுப் படுக்கைக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரைப் படுக்கைக்கு அடியில் இருந்து தரதரவென இழுத்து வந்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    TMC leader Brahmananda Chakraborty was arrested by police after trying to hide under a pile of sarees(சேலைக்குள் பதுங்கிய திரிணாமுல் காங்கிரஸ்): Trinamool leader hides in Saree pile to evade arrest.