இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை!

  • இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் மற்றும் உலகளாவிய பொருளாதார உறவுகளில் தற்போது ஒரு புதிய பதற்றம் உருவாகியுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சில பொருட்கள் 'கட்டாய உழைப்பு' அதாவது Forced-labour முறைகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் தற்போது இருக்கும் வரிகளுக்கு மேல், கூடுதலாக 10 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை புதிய வரிகளை (Tariffs) விதிக்க அமெரிக்கா தற்போது திட்டமிட்டு வருகிறது.

    Advertisement

    அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (United States Trade Representative - USTR) அலுவலகம் நடத்திய சுமார் 60 வகையான 'செக்ஷன் 301' (Section 301 investigations) புலனாய்வு விசாரணையின் முடிவுகளில் இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதிலும், அந்தத் தடையைச் சட்டப்பூர்வமாக முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலும் இந்தியா உள்ளிட்ட 54 நாடுகள் தவறிவிட்டதாக அமெரிக்காவின் USTR அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

    இரட்டை அடுக்கு வரி விதிப்பு

    அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த புதிய கூடுதல் வரி விதிப்பிற்கு இரண்டு அடுக்கு முறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி, ரெசிப்ரோக்கல் வரி குறைப்பது தொடர்பாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள நாடுகள், தங்களின் நாட்டில் கட்டாய உழைப்பு இறக்குமதித் தடையை ஓரளவாவது அமல்படுத்தியிருந்தால் 10 சதவீதக் கூடுதல் வரி விதிக்கபடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Advertisement

    ஆனால், அமெரிக்காவுடன் ரெசிப்ரோக்கல் வரி தொடர்பான வர்த்தக ஒப்பந்தம் செய்யாத இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு 12.5 சதவீதக் கூடுதல் வரி (Additional duty) விதிக்க USTR திட்டமிட்டுள்ளது.

    திருப்பூர் தப்பித்தது

    மேலும் இந்த 12.5% வரி விதிப்புப் பட்டியலில் உள்ள சில குறிப்பிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஆடை மற்றும் ஜவுளிப் பொருட்களுக்கு செக்ஷன் 301 வரி விகிதத்தில் இருந்து ஓரளவு சலுகை அளிக்கும் வகையில் ஒரு பிரத்யேக ஜவுளி உள்கட்டமைப்பு வழிமுறையையும் (Textile mechanism) அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.

    இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்

    இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை (Bilateral Trade Agreement - BTA) இறுதி செய்வதற்காக, அமெரிக்காவின் முதன்மைப் பேச்சுவார்த்தையாளர்கள் டெல்லியில் தற்போது மூன்று நாட்கள் தங்கி இந்திய அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    இந்த ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்தப் வரைமுறைகள் இறுதி செய்யப்பட்டவுடன், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer) நேரடியாக இந்தியாவிற்கு வருகை தர வாய்ப்புள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மறுக்கும் இந்திய அரசு

    அமெரிக்கா தன் மீது சுமத்தியுள்ள இந்தக் 'கட்டாய உழைப்பு' சார்ந்த அவதூறு புகார்களையும் அனைத்தையும் இந்தியா மிகத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், இந்த ஒருதலைப்பட்சமான செக்ஷன் 301 புலனாய்வு விசாரணைகளை (Unilateral measures) அமெரிக்கா உடனடியாகத் தடுத்து நிறுத்தி ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசு அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளது.

    English Summary

    The United States is planning to impose additional 10% to 12.5% tariffs on Indian goods following Section 301 investigations alleging forced labour practices. Amid ongoing bilateral trade agreement talks in Delhi, India has strongly denied the charges and demanded termination of unilateral probes to secure fairer terms.