முதலமைச்சர் முன்னாடி லஞ்ச குற்றச்சாட்டு வைத்த மாணவி.. சட்டென அதிர்ந்துபோன அதிகாரிகள்!

  • டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தபோது, மாணவி ஒருவர் தைரியமாக லஞ்ச புகாரை கூறியிருந்தார். ஆனால், இது தொடர்பான வீடியோ லைவ் டெலிகாஸ்டில் நீக்கப்பட்டதாகவும், அரசின் மற்ற சோஷியல் மீடியா பக்கங்களில் டெலிட் செய்யப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.

    Advertisement

    டேராடூனில் உள்ள சிஎன்ஐ பெண்கள் பள்ளியில் இன்று 'முதலமைச்சர் இளைஞர் மாணவர் கலந்துரையாடல்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் தாமி பங்கேற்றிருந்தார்.

    Advertisement

    மாணவியின் புகார்

    இந்த நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் லஞ்ச புகார் குற்றச்சாட்டை முன்வைத்திருந்து பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. டேக்வாண்டோ விளையாட்டில் ஜம்முவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் தான் தங்கப் பதக்கம் வென்றதாகவும், ஆனால் சர்வதேச போட்டியில் விளையாட முயன்றபொது ரூ.1.5 லட்சம் லஞ்சமாக கேட்கப்பட்டதாகவும், அவ்வளவு பணம் தன்னிடம் இல்லாததால், சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தான் இழந்துவிட்டதாகவும் அவர் அழுதுக்கொண்டே கூறினார்.

    முதல்வரின் அலட்சியம்

    மாணவி உணர்ச்சிவசப்பட்டு அழுதபோது, இந்த குற்றச்சாட்டு குறித்து டீடெயில்களை முதல்வர் வாங்காமல், 'சரி பரவாயில்லை அமருங்கள்' என்று கூறியிருந்தார். இது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. கண்ணு முன்னாடி மாணவி அழுதுக்கொண்டே லஞ்ச புகார் கொடுக்கிறார்.. ஆனால் அதையெல்லாம் கண்டுக்காம.. சைஸா அந்த விஷயத்தை முதல்வர் மூடி மறைக்க பார்க்கிறார் என்று காங்கிரஸ் விமர்சித்திருக்கிறது.

    Advertisement

    எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

    இது போதாது என்று.. மாணவி பேசிய வீடியோவை லைவ் பேஜிலிருந்தும், அரசின் மற்ற சோஷியல் மீடியா பேஜலிருந்தும் டெலிட் செய்யப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. லஞ்ச புகார் குறித்து உடனடியாக அந்த மாணிவியிடம் தேவையான தகவல்களை சேகரித்து.. சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டும். மேலும் இது போன்று மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

    காங்கிரஸ் குற்றச்சாட்டு

    காங்கிரஸ் கட்சி தனது x பக்கத்தில், "உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு துணிச்சலான மாணவி, முதலமைச்சர் முன்னிலையில் ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறார். டேக்வாண்டோ விளையாட்டில் சர்வதேச அளவில் விளையாட ரூ.1.5 லட்சம் லஞ்சமாக கேட்கப்பட்டதாகவும், இதனால் விளையாட்டு வாய்ப்பு பறிபோனதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், முதல்வர் 'சரி பரவாயில்லை உட்காருங்கள்' என்று கூறிவிட்டார். பின்னர் இந்த வீடியோ முதல்வர் மற்றும் பாஜகவினரின் அனைத்து சோஷியல் மீடியா பக்கங்களிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    பாஜக ஆட்சியில் லஞ்சம், ஊழல் இளைஞர்களின் கனவுகளை நசுக்குகிறது. இது பற்றி புகார்கள் வரும்போது.. அதை அடக்குவதில்தான் முதலமைச்சர் மும்முரமாக இருக்கிறார்" என்று பதிவிடப்பட்டிருக்கிறது.

    English Summary

    Uttarakhand is currently ruled by the BJP. When Chief Minister Pushkar Singh Thami was having a discussion with the students, a student bravely made a bribe complaint. But the Congress has alleged that the related video was deleted in the live telecast and other social media pages of the government.