பக்ரீத் விடுமுறையை குறைத்த பாஜக.. மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி உத்தரவு

  • கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் பக்ரீத் பண்டிகைக்கு ஆண்டுதோறும் 2 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். இந்நிலையில் தான் தற்போது பாஜக அரசு அமைந்த நிலையில் பக்ரீத் பண்டிகைக்காக விடுமுறை 2 நாளில் இருந்து ஒரு நாளாக குறைத்து முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தை போல் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. 2 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த 4 ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக அமோக வெற்றி பெற்றது.

    Advertisement

    இதன்மூலம் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பாஜக சார்பில் மம்தா பானர்ஜியை தோற்கடித்த சுவேந்து அதிகாரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

    வரும் 28ம் தேதி நாடு முழுவவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இது இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாகும். இந்த பக்ரீத் பண்டிகை நாள் என்பது அரசு விடுமுறை தினமாகும். மேற்கு வங்க மாநிலத்தை எடுத்து கொண்டால் பக்ரீத் பண்டிகைக்கு 2 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். பக்ரீத் மற்றும் அதற்கு முந்தைய நாள் என 2 நாள் விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 27 ம் தேதி பிறப்பித்தார்.

    Advertisement

    அப்போது 2026ல் பக்ரீத் மே 27 என்று கணிக்கப்பட்டு இருந்தது. இதனால் மே 26 (பக்ரீத் முந்தைய நாள்) மற்றும் மே 27 (பக்ரீத்) என 2 நாட்கள் மேற்கு வங்கத்தில் அரசு விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பக்ரீத் மே 28 ல் கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையே தான் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்துள்ளது. பாஜக ஆட்சியை பிடித்த நிலையில் பக்ரீத் பண்டிகைக்கான 2 நாள் விடுமுறை ஒரு நாளாக குறைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மேற்கு வங்க நிதி அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ''மே 28 ல் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் அன்றைய தினம் அரசு விடுமுறையாகும். மாறாக மே 26, மே 27 என 2 நாட்கள் விடுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட உத்தரவு திரும்ப பெறப்படுகிறது.

    English Summary

    West Bengal Bakrid Holiday: In the state of West Bengal, a two-day holiday is traditionally granted every year for the festival of Bakrid. Against this backdrop-and following the recent formation of a BJP government-Chief Minister Suvendu Adhikari has issued a decisive order, reducing the Bakrid holiday duration from two days to just one.