இனி மேற்குவங்காளம் என்ற பெயர் கிடையாது.. மாநிலத்தின் பெயரை மாற்ற ரெடியான பாஜக அரசு! பின்னணி

  • கொல்கத்தா: மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்றம் செய்ய அந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான மசோதாவை அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள நிலையில் புதிய பெயர் என்ன? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    Photo Credit:

    மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

    Advertisement

    இந்நிலையில் தான் மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளது. மேற்கு வங்காளத்தின் பெயரை 'பஸ்சிம் பங்கா' என்று மாற்றம் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதனை மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சாரியா உறுதி செய்துள்ளார். வாரணாசியில், 'பச்சிம் பங்கா' என்ற பெயரில் பவன் அமைப்பது பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,''இனி நீங்கள் 'பங்களா' அல்லது 'மேற்கு வங்காளம்' என்ற பெயரை உச்சரிக்க வேண்டியிருக்காது. ஏனென்றால் மாநிலத்தின் வரலாற்றுக்கு ஏற்ப 'பச்சிம் பங்கா' என்று பெயர் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை மாநில அரசு அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய உள்ளது'' என்றார்.

    Advertisement

    இதில் 'பச்சிம்' என்றால் வங்க மொழியில் மேற்கு என்று பொருள்படும். 'பங்கா' என்றால் வங்காளம் என்று பொருள்படும். தங்களது மாநிலத்தின் பெயரை வங்க மொழியிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக ஆளும் பாஜக அரசு இந்த பெயர் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது.

    மேற்கு வங்காளத்தின் பெயரை 'பச்சிம் பங்கா' என்று மாற்றம் செய்ய வேண்டும் என்பது அங்குள்ள ஒரு தரப்பு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். ஆனால் இதற்கு ஆளும் கட்சிகளாக இருந்த கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை. மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்யும் முயற்சியை முடக்கி போட்டன. தற்போது மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில் பெயர் மாற்றத்துக்கான முன்னெடுப்புகள் தீவிரமாகி உள்ளன.

    Advertisement

    மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்றம் செய்யும் முயற்சி கடந்த 1999ல் தொடங்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜோதி பாசு அரசு இதனை முன்னெடுத்தது. ஆனால் அது நடக்கவில்லை. பிறகு 2011-ல் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வராக இருந்த மம்தா பானர்ஜி அரசு மேற்கு வங்காளத்தின் பெயரை 'பச்சிம் பங்கா' என்று மாற்ற முடிவெடுத்தது. அனைத்து கட்சி கூட்டத்திலும் ஆதரவு கிடைத்தது. ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. 2016ல் மீண்டும் மம்தா பானர்ஜி இந்த விவகாரத்தை கையில் எடுத்த நிலையில் அதுவும் நடக்கவில்லை. தற்போது மத்தியிலும் பாஜக, மாநிலத்திலும் பாஜக என்பதால் எளிதாக பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    West Bengal Name Change: The BJP government ruling West Bengal has decided to rename the state to ‘Paschim Banga'. As a bill to this effect is planned to be introduced in the upcoming legislative assembly session, let us look at the meaning and background of the new name here.