மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா?

  • கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பூசல், தற்போது ஒட்டுமொத்தக் கட்சியையுமே அடியோடு காலி செய்யும் அளவுக்கு உருவெடுத்துள்ளது. சுமார் 50 எம்எல்ஏக்கள், 20 எம்பிக்கள் தங்கள் கட்சியில் சேர ரெடியாக இருப்பதாக பாஜக தரப்பு கூறியிருக்கிறது.

    Advertisement

    மேற்கு வங்கத்தில் இந்த முறை நடந்த தேர்தலில் திரிணாமுல் கட்சி தோல்வி அடைந்தது. சுமார் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்ற நிலையில், சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்றார். இதற்கிடையே திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் பாஜகவில் ஐக்கியமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    ராஜினாமா

    சுமார் 50 எம்எல்ஏக்கள், 20 எம்பிக்கள் தங்கள் கட்சியில் சேர ரெடியாக இருப்பதாக பாஜக தரப்பு கூறியிருக்கிறது. "பாஜக மத்திய தலைமை ஒரே ஒருமுறை பச்சைக்கொடி காட்டினால் போதும், திரிணாமுல் காங்கிரஸ் என்ற அரசியல் சக்தியே முற்றிலும் அழிந்துவிடும்" எனப் பாஜக எம்பி சௌமித்ரா கான் கூறியிருக்கிறார்.

    இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்பி சௌமித்ரா கான், "திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த கிட்டத்தட்ட 50 எம்எல்ஏக்களும், 20 எம்பிக்களும் தங்களின் சொந்தத் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் பாஜகவில் இணையத் தயாராகக் காத்திருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    திரிணாமுல்

    திரிணாமுல் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியை கடுமையாகச் சாடிய அவர், "2021ல் பாஜக தொண்டர்களின் வீடுகளை இடித்தவர்களின் வீட்டு வாசலில் இன்று புல்டோசர் வந்து நிற்கிறது. பாவிகள் அனைவரும் விரைவில் சிறைக்குச் செல்வதுடன், நரகத்தை அடைவார்கள்" என்று சாடினார். இருப்பினும், சௌமித்ரா கானின் இந்த வாதத்தை அடியோடு மறுத்துள்ள மூத்த திரிணாமுல் எம்பி சௌகதா ராய், "இதில் துளியும் உண்மையில்லை; பாஜக திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருகிறது" என்றார்.

    சௌகதா ராய் மறுத்தாலும், பாராசாத் தொகுதி எம்பி காகொலி கோஷ் தஸ்திதர் சமீபத்தில் லோக்சபா திரிணாமுல் தலைமைக் கொறடா பதவியிலிருந்து நீக்கப்பட்டதும், அவருக்கு மத்திய அரசு உடனடியாக 'Y' பிரிவு அதிரடிப் பாதுகாப்பை வழங்கியதும் பூசல் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. பாஜகவின் புதிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி நடத்திய முக்கிய அரசு நிர்வாகக் கூட்டத்தில், பல திரிணாமுல் எம்எல்ஏக்களுடன் எம்பி காகொலி கோஷ் தஸ்திதரும் நேரில் பங்கேற்றது, மம்தா பானர்ஜி தரப்பிற்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

    Advertisement

    உள்ளாட்சி

    கட்சித் தாவல் ஒருபுறமிருக்க, மேற்கு வங்கத்தின் பல்வேறு நகராட்சிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தங்களின் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். பட்ஸ்பாரா நகராட்சியில் தலைவர் ரேபா ரஹா உட்பட 35 கவுன்சிலர்களில் 30 பேர் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். ஊழியர்களுக்குச் சம்பளம் கூட வழங்க முடியாத அளவுக்குத் தலைமை தங்களை அலட்சியப்படுத்துவதாகத் துணைத் தலைவர் தேவஜோதி கோஷ் சாடியுள்ளார். ஹலிசஹரில் 16 கவுன்சிலர்களும், காஞ்ச்ராபாராவில் 14 கவுன்சிலர்களும் தங்களின் பதவிகளைத் தூக்கி எறிந்துள்ளனர்.

    கொல்கத்தா மாநகராட்சி மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீமும் தனது பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள், அடுத்த ஆண்டு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே பல நகராட்சி போர்டுகளை அடியோடு சரித்துவிடும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. நிலைமை கைமீறிப் போவதால் யாரும் ராஜினாமா செய்ய வேண்டாம் என மம்தா பானர்ஜி அவசரக்கால வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Advertisement

    காரணம் என்ன

    முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையிலான புதிய பாஜக அரசு, கடந்த கால உள்ளாட்சி நிர்வாக முறைகேடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளதே இந்த ராஜினாமாக்களுக்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். கவுன்சிலர்கள் பணிக்கு வராத நகராட்சிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப் போவதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அக்னிமித்ரா பால் எச்சரித்துள்ளார்.

    இதற்கிடையே, நிலக்கரி மற்றும் நகராட்சி வேலைவாய்ப்பு முறைகேடு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த புகாரில் சிக்கிய தெற்கு டம்டம் கவுன்சிலர் சஞ்சய் தாஸ் மே 23ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பதற்றத்தை அதிகரித்தே இருக்கிறது.

    English Summary

    Following Mamata Banerjee's assembly election defeat, Trinamool Congress faces severe internal friction(மேற்கு வங்கத்தில் வெடித்த அரசியல் குழப்பம்): West Bengal Political Crisis latest news in tamil.