மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள்


  • கொல்கத்தா: மேற்கு வங்க அரசியலில் அதிரடியான திருப்பமாக, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மொத்தமாக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ ரிதாப்ரதா பானர்ஜி, தனக்கு 59 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி இன்று சட்டசபைக்கு வந்திருப்பது மம்தாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

    Advertisement

    சமீபத்தில் நடந்த மேற்கு வங்கச் சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. 294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்கச் சபையில், பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சுவேந்து அதிகாரி தலைமையில் தேர்தலைச் சந்தித்த பாஜக 207 இடங்களில் வென்ற நிலையில், அதிகாரி முதலமைச்சராகப் பதவியேற்றார். மறுபுறம் மம்தாவின் கட்சி வெறும் 80 எம்.எல்.ஏக்களுடன் சுருங்கியது. குறிப்பாக மம்தாவே தோல்வி அடைந்தார்.

    Advertisement

    எதிர்ப்பு குரல்

    ஆட்சியில் இருக்கும் வரை அமைதியாக இருந்த திரிணாமுல் எம்எல்ஏக்கள், ஆட்சியை இழந்தவுடனேயே கலகக் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். ஆட்சியை இழந்ததில் இருந்தே திரிணாமுல் கட்சிக்குள் அதிருப்தி புகைந்து வந்தது. இந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவர் சோபந்தேவ் சட்டோபாத்யாயாவை எதிர்க்கட்சித் தலைவராக மம்தா பானர்ஜி அறிவித்தார். இருப்பினும், என்டல்லி தொகுதி எம்எல்ஏ சந்தீபன் சஹா மற்றும் உலுபெரியா தொகுதி எம்எல்ஏ ரிதாப்ரதா பானர்ஜி ஆகியோர் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இதனால் டெஷ்னான மம்தா இருவரும் கட்சிக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லி கட்சியை விட்டு நீக்கினார்.

    Advertisement

    கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும் அசராத ரிதாப்ரதா பானர்ஜி, இன்று (புதன்கிழமை) ஆதரவுக் கடிதங்களுடன் சட்டசபைக்கு வந்து பரபரப்பைக் கிளப்பினார். மேலும், தன்னிடம் 59 திரிணாமுல் எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் இருப்பதாகக் கூறிய அவர், தன்னை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்க வேண்டும் என்று உரிமை கோரியுள்ளார்.

    59 பேர் ஆதரவு

    அவருடன் அருப் ராய், ஷியூலி சாஹா, அக்ருஜாமன் உள்ளிட்ட முக்கிய திரிணாமுல் தலைவர்களும் சட்டசபைக்கு வந்துள்ளனர். இன்று நாங்கள் முறைப்படி கூட்டம் கூட்டி எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க உள்ளோம் என்று எம்.எல்.ஏ சபினா யாஸ்மின் தெரிவித்தார். மற்றொரு எம்.எல்.ஏ-வான முஸ்தபிசூர் ரஹ்மான், தானும் அந்த கடிதத்தில் கையெழுத்து போட்டு இருப்பதாகவும் 59 பேர் ஆதரவு மம்தாவின் எதிர்த்தரப்பிற்கு இருப்பதாகவும் ஓப்பனாக உடைத்துள்ளார்.

    Advertisement

    போலி கையெழுத்து

    இந்த விவகாரத்தில் இன்னொரு பயங்கரமான குண்டையும் தூக்கிப் போட்டுள்ளனர் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள். அதாவது மம்தா பானர்ஜி தன் தரப்பு தலைவரான சோபந்தேவ் சட்டோபாத்யாயாவை எதிர்க்கட்சித் தலைவராக்க, பல எம்எல்ஏக்களின் கையெழுத்துக்களைப் போலியாகப் போட்டு கடிதம் தயாரித்தார் என்பது தான் இவர்களின் குற்றச்சாட்டு.

    முதல்வர் சுவேந்து அதிகாரி

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, "திரிணாமுல் கட்சியின் ஊழல் மேற்கு வங்க மக்களை மட்டும் பாதிக்கவில்லை, அவர்களின் சொந்த எம்.எல்.ஏ-க்களையே பாதிக்கிறது. மம்தா கட்சி தன் சொந்த எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்தையே திருடியுள்ளது. சி.ஐ.டி போலீசார் இப்போது எம்.எல்.ஏ-க்களின் உண்மையான கையெழுத்து மாதிரிகளைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது வரை பஹாருல் இஸ்லாம், அருப் ராய், சுபாஷிஷ் தாஸ் ஆகிய மூன்று திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் தாங்கள் அந்த கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்பதை சிஐடியிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்" என்றார்.

    Advertisement

    ஆட்சியில் இருந்த வரை மம்தாவுக்கு எதிராக கட்சிக்குள் ஒரு அதிருப்தி குரல் கூட இல்லாமல் இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத சூழலில், இப்போது 80 எம்எல்ஏக்களில் 59 பேரை இழந்திருக்கிறார். இது மம்தாவுக்கு மிக பெரிய ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    English Summary

    Rebel TMC MLA Ritabrata Banerjee claimed the support of 59 MLAs to challenge Mamata Banerjee's leadership(மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியில் ஏற்பட்ட பிளவு): West Bengal Political Crisis latest news in tamil.