மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி.. வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்த பெண்ணால் பரபரப்பு

  • கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை வீடு புகுந்து கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. என்ன நடந்தது? அந்த பெண் யார்? என்பது பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

    மேற்கு வங்கத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சுவேந்து அதிகாரி உள்ளார். சமீபத்திய சட்டசபை தேர்தலில் பாஜக முதல் முறையாக வென்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன்மூலம் 3 முறை முதல்வராக இருந்த மம்தா பானர்ஜி ஆட்சி முடிவுக்கு வந்தது.

    தற்போது மம்தா பானர்ஜியின் கட்சி இரண்டு துண்டாக உடைந்து சிதறிப்போய் உள்ளது. தற்போது மம்தா பானர்ஜி எப்படியாவது பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் 'இந்தியா' கூட்டணியில் பிற கட்சிகளுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில் தான் இன்று துர்கா பூஜை தொடக்கவிழாவை தொடங்கி வைக்க வீட்டில் இருந்து மம்தா பானர்ஜி காரில் புறப்பட்டார். அப்போது திடீரென்று ஒரு பெண் குறுக்கே சென்று மம்தா பானர்ஜியை கடுமையாக திட்டினார். அதன்பிறகு அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மம்தா பானர்ஜியை குத்த முயன்றதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒன்றும் ஆகவில்லை.

    இதுதொடர்பாக மம்தா பானர்ஜியின் கட்சியை சேர்ந்த எம்பி டோலா சென் கூறுகையில்,''போதைப்பொருளுக்கு அடிமையான பெண் இன்று மம்தா பானர்ஜியின் வீட்டிற்கு வந்தார். அவர் மம்தா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்றார். 3 முறை முதல்வர் மற்றும் இசட் + பாதுகாப்பு இருந்தாலும் மேற்குவங்கத்தில் இதுதான் நிலைமை. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதில் டெல்லியில் மம்தா பானர்ஜி உறதியாக இருப்பதால் அவர்களின் திட்டமிட்ட சதியா? என்ற கேள்வி வருவதோடு இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது'' என கூறினார்.

    இதுதொடர்பாக மம்தா பானர்ஜி சார்பில் கலிகாட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து அந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணைில் அந்த பெண்ணின் பெயர் அனுசுய சகா. வயது 38 என போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று மம்தாபானர்ஜி கட்சியினர் கூறி வரும் நிலையில் அதனை இன்னும்போலீசார் உறுதி செய்யவில்லை.

    இதுபற்றிபோலீசார் கூறுகையில், ''இந்தசம்பவம் மம்தா பானர்ஜியின் வீட்டில் நடந்தள்ளது. அவர் தனது வீட்டை விட்டு வெளியே வந்தபோது அனுசுய சகா அவரை ிட்டி உள்ளார். தற்போது அவரை பிடித்து விசாரித்து வருகிறோம்'' என்று கூறியுள்ளனர்.

    மம்தாபானர்ஜியை குறிவைத்து இப்படியான சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறைநடந்துள்ளது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள சியாம் பஜார் பகுதியில் தனது காரின் மீது பெரிய கற் வீசப்பட்டதாக கூறினார். இதையடுத்து அவர் நெஞ்சுவலி என்று மருத்துவ சிகிச்சைபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Mamata Banerjee Stabbing Attempt: The incident in which an attempt was made to stab and kill former West Bengal Chief Minister Mamata Banerjee after entering her home has caused a shock. Sensational details have emerged regarding what happened and the identity of the woman involved.