செங்கடலில் மூழ்கிய இந்திய கொடியுடன் சென்ற கப்பல்! 13 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு.. என்ன நடந்தது?

  • வாஷிங்டன்: இந்திய கொடியுடன் செங்கடலில் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏவுகணை கொண்டு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏமன் மேற்கு கடல் பகுதியில் சென்ற போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. MSV Faize Noore Oliya என்ற அந்த கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 14 மாலுமிகள் இருந்துள்ளனர்.

    Advertisement

    தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக ஏமன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விரைந்து வந்த ஏமன் குழுவினர் கப்பலில் இருந்த அனைவரையும் மீட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான கப்பல் செங்கடலில் மூழ்க தொடங்கியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பட்டில் உள்ள ஹோடைடா துறைமுக நகரத்திற்குத் தெற்கே சுமார் 13 கடல் மைல் தொலைவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

    Advertisement

    இந்திய கொடியுடன் சென்ற கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா கண்டித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கூறுகையில், "இந்திய கப்பல் மீது ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், தலைகுப்புற கவிழ்ந்த கப்பல் மூழ்கியுள்ளது. இந்திய சிப்பந்திகளின் நலனை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய கடல்சார்நிர்வாகத் தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து நிலமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், இந்திய சிப்பந்திகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏமன் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மிகுந்த கவலையை தருகிறது.

    Advertisement

    வணிக கப்பல்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச சட்டத்தை பின்பற்றி சர்வதேச கடல் பாதையில் தடையற்ற மற்றும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தையும் வர்த்தகத்தையும் விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

    ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக உள்ளது. இதனால் செங்கடலில் அவ்வப்போது ஈரானுக்கு எதிராக செயல்படும் நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம், சவுதி அரேபியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கடலில் கடல் முற்றுகையை அறிவித்தது. இதனால் சர்வதேச அளவில் எண்னெய் விநியோகம் மற்றும் வர்த்தகம் வளைகுடா நாடுகளுக்கு அப்பாலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.

    Advertisement

    செங்கடலின் நுழைவுப்பகுதி என்று சொல்லக்கூடிய பாப்-எல்-மண்டேப் ஜலசந்தியையும் வட ஏமன் பகுதியையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கேட் ஆஃப் டியர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ஜலசந்தி, செங்கடலை ஏடன் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது. மிக முக்கியமான வர்த்தக பகுதியாக உள்ள கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படுவது சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகத்தை பாதிப்பதாக அமையும். உலகின் சுமார் 12 சதவிகித வர்த்தக போக்குவரத்து செங்கடல் வழியாகவே நடைபெறுகிறது.

    English Summary

    Indian sailors rescued safely: A ship flying the Indian flag has been attacked in the Red Sea. The vessel was struck by a missile while sailing off the western coast of Yemen. There were 14 crew members on board the ship, named MSV Faize Noore Oliya, including 13 Indians.