அமெரிக்காவை அச்சுறுத்தும் அதிபயங்கர புயல் ஃபுளோரன்ஸ்.. 10 லட்சம் பேர் வெளியேற்றம்!!


நியூயார்க்: அமெரிக்காவை அச்சுறுத்தும் ஃபுளோரன்ஸ் புயலால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வடக்கு அட்லாண்டிக் கடலில் அதி பயங்கர புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு ஃபுளோரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் அதிபயங்கரமானது என அந்நாட்டு தேசிய வானியல் மையம் தெரிவித்துள்ளது. தற்போது 4ஆம் நிலையில் உள்ள இந்த புயல் விரைவில் 5 ஆம் நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த சேதம் ஏற்படும்
மக்களுக்கு அறிவுறுத்தல்
மக்களுக்கு அறிவுறுத்தல்

இந்த புயலால் அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்கரை பகுதி பலத்த சேதத்தை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரட்டும் ஃபுளோரன்ஸ் புயலால் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, மற்றும் விர்ஜினியா பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10 லட்சம் பேர்

50 செமீ மழை கொட்டும்

இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த புயலால் கனமழை பெய்து வெள்ள பெருக்கு ஏற்படும் என அமெரிக்க வானியல் மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் 50 சென்டி மீட்டருக்கு மேல் மழை கொட்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெர்முடா - பஹாமஸ் இடையே

வடக்கு கரோலினாவின் வில்மிங்டன்

முதலில் வடக்கு அட்லாண்டிக் கடலை கடக்கும் இந்த புயல் பின்னர் பெர்முடா தீவு மற்றும் பஹாமாஸை வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கடக்க உள்ளது. பின்னர் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை கடக்க உள்ளது. முதல் வடக்கு கரோலினாவின் வில்மிங்டன் நகரை இந்த ஃபுளோரன்ஸ் புயல் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்மிங்டன் பல்கலை. மாணவர்கள்
ட்ரம்ப் வலியுறுத்தல்
ட்ரம்ப் வலியுறுத்தல்

இதையடுத்து வில்மிங்டன் பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தொடர்ந்து டிவிட்டரில் வலியுறுத்தி வருகிறார்.

215 கிமீ காற்று

மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஃபுளோரன்ஸ் புயல் காரணமாக மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று அமெரிக்க வானியல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடல் பகுதியில் 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

A Hurricane Florence threatening US. More than a million people in North Carolina, South Carolina and Virginia have been told to leave their homes.