இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி

  • டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது. அதனை மீறி பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா, சீனா உள்பட 4 நாடுகளின் கப்பல்கள் இனி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சுதந்திரமாக செல்லலாம். இந்த நாடுகளின் கப்பல்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்த 4 நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

    Advertisement

    ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் முடிவுக்கு வந்தாலும் கூட இன்னும் பதற்றம் தணியவில்லை. மீண்டும் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் பதற்றம் இருந்து கொண்டே இருக்கிறது.

    Advertisement

    இதனால் ஈரான் தனக்கு சொந்தமான கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. இதன்மூலம் கடல்வழி வர்த்தகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் ஈரான் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா, சீனா, கத்தார், ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கலாம். இந்த நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என அறிவித்துள்ளது.

    இதனை ஈரானின் சீனியர் அரசியல்வாதியான அமீர் ஹயாத் மொகத்தம் உறுதி செய்துள்ளார். இவர் ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை கமிட்டியின் துணை தலைவராக உள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக அமீர் ஹயாத் மொகத்தம் கூறுகையில், ''ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியா, சீனா, ஈராக், கத்தார் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விலக்கு கொடுத்துள்ளோம். இந்த நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக செல்கின்றன. இதனை அமெரிக்காவும் இடைமறிப்பது இல்லை'' என்று கூறியுள்ளார்.

    போர் பதற்றத்துக்கு மத்தியிலும் கூட ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து பழிவாங்கி வருகிறது. தனது எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி வழங்காத ஈரான் தனது நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி வருகிறது. அந்த வகையில் தான் தற்போது இந்தியா, சீனா, ஈராக், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி வங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் - ஓமன் இடையேயான குறுகிய கடல்வழிப்பாதையாகும். இந்த ஹார்முஸ் ஜலசந்தி தான் பெர்ஷியன் வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடலை இணைக்கம் பாலமாக உள்ளது. இந்த கடல் வழிப்பாதை வழியாக தான் அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய், கேஸ் உள்ளிட்டவை இந்தியா, சீனா உள்பட பிற ஆசிய நாடுகளுக்கு வருகிறது.

    எளிதில் புரியும்படி கூற வேண்டும் உலகளவில் நடக்கும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதமும், கேஸ் சப்ளையில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 35 சதவீதம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நடக்கிறது. இந்த ஹார்மஸ் ஜலசந்தி நம் நாட்டுக்கு மிகவும் முக்கியமாகும். இந்த ஆண்டு பிப்ரவரியில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் புரிந்தன.

    Advertisement

    இந்த போர் வெடிப்பதற்கு முன்பாக நம் நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணெயில் 45 சதவீதமும், எல்பிஜி எரிவாயுவில் 90 சதவீதமும் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் வந்தது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் நம் நாடு பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஈரான் நம் நாட்டுக்கான கப்பலை அனுமதிப்பதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Strait Of Hormuz: Iran has closed the Strait of Hormuz. However, it has made a surprise announcement stating that ships from India, China, Iraq, and Qatar will be permitted to pass through the Strait freely, and that these vessels will not be subjected to any attacks.