“அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” - டிரம்ப் கிளப்பிய சந்தேகம்.. நிலைப்பாட்டில் ட்விஸ்ட்!

  • வாஷிங்டன்: அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ள நிலையில், தேர்தலின் நேர்மை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளையும் தன்வசப்படுத்தியுள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    Advertisement

    அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை (100 இடங்கள்), பிரதிநிதிகள் சபை (435 இடங்கள்) ஆகிய இரு அவைகளைக் கொண்டது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். செனட் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுக. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறைவடையும்.

    பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் செனட் சபையின் 35 இடங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. அதிபரின் 4 ஆண்டு பதவிக்காலத்தின் நடுவில் இத்தேர்தல் வருவதால், இது இடைக்காலத் தேர்தல் என அழைக்கப்படுகிறது. இந்த இடைக்காலத் தேர்தல் நவ. 3ம் தேதி நடைபெற்றது. இதோடு, பல்வேறு மாகாணங்களின் ஆளுநர், மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது.

    Advertisement

    இந்த தேர்தலில், பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 253 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. ஆளும் குடியரசு கட்சி 157 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. தேர்தல் முடிவுகளின்படி, செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் பலம் 54 ஆக உயர்ந்து பெரும்பான்மை கிடைத்துள்ளது.

    அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்துள்ளது. டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு எதிராக வாக்காளர்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தலின் நேர்மை குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முன்கூட்டிய வாக்குப்பதிவில் வழக்கத்திற்கு மாறாக ஒரே நேரத்தில் பதிவான அதிகப்படியான வாக்குத் தொகுப்புகளே குடியரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பறித்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், "இந்தத் தேர்தல் நேர்மையாக நடைபெற்றது என்று யாராவது உண்மையிலேயே நம்புகிறார்களா? தேர்தல் கருத்துக்கணிப்புகள் எப்படி இவ்வளவு தவறாகப் போக முடியும்?

    சில இடங்களில் முன்கூட்டியே வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், எத்தனை பேர் வாக்களிக்க வந்தாலும் வெற்றி பெறுவது சாத்தியமில்லாமல் போய்விட்டது. அனைத்தும் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பொறுத்தே உள்ளது. அவை வாக்காளர்களை விட மிக முக்கியமானவையாக மாறிவிட்டன" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    முன்னதாக, தேர்தல் தோல்விக்குப் பிறகு அளித்த நேர்காணலில் பேசிய அதிபர் டிரம்ப், தமது நிர்வாகத்தின் தீவிரமான சட்டவிரோதக் குடியேற்றக் கொள்கை குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கலாம் என்றும், தமது நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மிகக் கடுமையானதாக அமைந்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

    English Summary

    US president Donald Trump has questioned the legitimacy of the midterm election results, reviving claims about electoral fraud that he repeatedly made after losing the 2020 presidential election.