மொத்த ஐரோப்பாவையும்.. காக்கும் ரட்சகனாக உருவெடுத்த ஆசியா! இந்தியாவின் ஆட்டம் ஆரம்பம்!

  • கீவ்: ஐரோப்பிய நாடுகளிடம் பாதுகாப்பு ஏவுகணைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்திருக்கிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளை காக்கும் ரட்சகனாக ஆசிய நாடுகள் உருவெடுத்திருக்கின்றன. இதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியது.

    Advertisement

    உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து, ஏராளமான ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகள் காலி செய்திருக்கின்றன. உக்ரைனை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிக்கொண்டு மொத்த ஏவுகணைகளையும் ஜெலன்ஸ்கியிடம் ஐரோப்பிய நாடுகள் தூக்கி கொடுத்திருக்கின்றன. இப்படியாக ஏவுகணைகள் காலியாகிவிட்டன. ஐரோப்பிய நாடுகளில் உள்ள நேட்டோ படைகளிடம் ரொம்பவும் குறைவான அளவில்தான் ஏவுகணைகள் இருக்கின்றன.

    Advertisement

    ஏவுகணை பஞ்சம்

    இதையெல்லாம் வைத்து ரஷ்யாவை எதிர்க்கவே முடியாது. மட்டுமல்லாது ஏவுகணைகளை தயாரிக்கும் நிறுவனங்களான 'லாக்ஹிட் மார்ட்டின்', 'ரேதியான்' போன்ற அமெரிக்க நிறுவனங்கள் தங்களுடைய டெக்னாலஜியை உக்ரைனுடன் ஷேர் செய்துக்கொள்ள ரெடியாக இல்லை. மறுபுறம் ஈரான் போரில், அமெரிக்காவும் தனது ஏவுகணைகளை அதிக அளவில் இழந்துவிட்டது. எனவே உக்ரைனுக்கு ஏவுகணைகளை கொடுக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டது. ஆக.. மொத்த ஐரோப்பாவும் தற்போது ஏவுகணை பஞ்சத்தில் சிக்கியிருக்கிறது.

    ஆசியாவின் என்ட்ரி

    இந்த நேரத்தில்தான்.. தேவ தூதனாக.. ஆபத்திலிருந்து காப்பவராக ஆசியா மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறது. பாதுகாப்பு ஆயுதங்கள் உற்பத்தியில் கெத்து காட்டி வரும் தென் கொரியா.. ஐரோப்பிய நாடுகளுக்கு ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய ஓகே சொல்லியிருக்கிறது. ஒரு காலத்தில் பாதுகாப்புக்கு அமெரிக்காவை மட்டும் நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகள்.. தற்போது ஆசியாவை நம்ப தொடங்கியிருக்கின்றன. இங்குதான் இந்தியாவின் கேம் தொடங்குகிறது.

    Advertisement

    இந்தியாவின் கேம்

    அதாவது இந்தியா, ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களை தனியாருக்கு கொடுத்திருக்கிறது. இதன் மூலம் ஏவுகணை உற்பத்தி எகிற போகிறது. அதிக அளவில்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியா ஏவுகணைகளை உருவாக்க இருக்கிறது. இந்திய ஏவுகணைகளுக்கு ஏற்கனெவே பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் நல்ல மவுசு இருக்கிறது. எனவே, உற்பத்தியை அதிகரித்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு நாம்தான் பெஸ்ட் சப்ளையராக மாறுவோம்.

    இந்தியாவுக்கு ஜாக்பாட்

    2030க்குள் ஐரோப்பிய ஒன்றியம், தனது வான் பாதுகாப்பு அம்சத்தை மீண்டும் வலுப்படுத்த பிளான் செய்திருக்கிறது. இதற்காக பெரிய அமொவுண்ட்டை இறக்க இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏவுகணைகளுக்கு தேவையான வெடி பொருட்கள், உதிரி பாகங்களை விற்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது வெற்றி பெற்றால்.. இந்தியாதான் ஆசியாவில் அசைக்க முடியாத நாடாக உருவெடுக்கும்.

    Advertisement

    முதன்மை நாடாக இந்தியா

    ஐரோப்பிய நாடுகளிடம் ஏவுகணை தொழில்நுட்பத்தை பகிர்ந்துக்கொள்வதில் நமக்கு பெரிய சிக்கல் ஏதும் கிடையாது. ஏற்கெனவே பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன், தென்கொரியா போன்ற நாடுகளுடன் இணைந்து ஏவுகணை ஆராய்ச்சியை நாம் மேற்கொண்டு வருகிறோம். எனவே எதிர்காலத்தில் ஏவுகணை உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இந்தியாதான் டாப் டக்கராக மாறும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    Asian Savior: European nations currently face a shortage of defensive missiles. Against this backdrop, Asian countries have emerged as protectors of Europe, with India playing a major role.