திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் சீன இளைஞர்கள் செய்யும் விபரீத முயற்சி.. கடுமையாக எச்சரித்த அரசு

  • பீஜிங்: சீனாவில் மணப்பெண்கள் கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள், ஏமாற்றுக்காரர்களிடம் பணத்தை இழக்கிறார்களாம். குறிப்பாக வங்கதேச பெண்கள், சீன இளைஞர்களை ஏமாற்றி பல்க் ஆக அமவுண்ட்டை சுருட்டி விடுகிறார்களாம். இதனால், தங்கள் நாட்டு இளைஞர்களுக்கு சீனா வெளிப்படையாகவே ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Advertisement

    உலகில் அதிகம் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ள நாடு சீனா. கடந்த பல தசாப்தங்களாக முதலிடத்தில் இருந்த சீனா கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாட்டு விதிகளை கொண்டு வந்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது. இந்த கெடுபிடிகளால் பல இன்னல்களை சீனா தற்போது சந்திப்பது வேறு கதை..

    Advertisement

    பெண் கிடைக்காமல் திண்டாட்டம்

    அதாவது அங்கு ஆண்களுக்கு நிகரான பெண்கள் விகிதம் இல்லாததால், திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் சீன இளைஞர்கள் திண்டாடுகிறார்கள். நம்ம ஊரில்தான் 90 கிட்ஸ்களுக்கு சோதனை என்றால், சீனாவில் அதை விட நிலமை மோசமாக இருக்கிறதாம். கடந்த 2020 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சீனாவில் பெண்கள் எண்ணிக்கையை விட 2 கோடி ஆண்கள் அதிகமாக இருக்கிறார்களாம்.

    சீனர்களை ஏமாற்றும் வங்கதேச பெண்கள்

    இதனால்தான் இந்த நெருக்கடி நிலவுகிறதாம். எப்படியாவது திருமணம் செய்தாக வேண்டுமே என நினைக்கும் சீன இளைஞர்கள் ஏழை நாடுகளை சேர்ந்த இளம் பெண்களை திருமணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்களாம். குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். தங்களுக்கு ஏற்ற மணப்பெண்ணை கண்டுபிடிக்க சில இளைஞர்கள் சீன மதிப்பில் ஆயிரக்கணக்கான யுவான்களை செலவு செய்கிறார்கள்.

    Advertisement

    ஆனால், இதனை பயன்படுத்தி பயங்கரமான மோசடிகளும் அங்கே அரங்கேறுகிறதாம். அதாவது, திருமணம் செய்து கொள்கிறேன் என்று சீனர்களை ஏமாற்றும் வெளிநாட்டு பெண்கள், பணம் கிடைத்ததும் எஸ்கேப் ஆகிவிடுகிறார்களாம். இதனால், சீன இளைஞர்கள் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள். தொடர்ச்சியாக இத்தகைய சம்பவங்கள் நடப்பதால், சீனா தனது நாட்டு இளைஞர்களுக்கு அவசர அவசரமாக வார்னிங் ஒன்றை கொடுத்துள்ளது.

    அழகில் மயங்கி ஏமாந்துவிட வேண்டாம்

    அதாவது, வெளிநாடுகளில் நடக்கும் திருமண மோசடி, ஆட்கடத்தல் ஆகியவற்றில் சிக்கி கொள்ளாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சோஷியல் மீடியாக்களில் பழகியவர்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். சட்ட விரோத திருமணங்களை செய்ய வேண்டாம். குறிப்பாக வங்கதேச பெண்களின் அழகில் மயங்கி ஏமாந்துவிட வேண்டாம். வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்வது சட்டப்பூர்வ அங்கீகரிக்கப்பட்டது இல்லை.

    Advertisement

    எனவே, திருமண ஆசையுடன் மணப்பெண்களை தேடி புரோக்கர்கள் மூலமாகவோ, ஏஜென்சி மூலமாகவோ செல்பவர்கள் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம். வங்கதேச சட்டப்படி, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,00,000 டாக்கா அபராதமும் விதிக்கப்படும். மரண தண்டனை கூட விதிக்க அந்நாட்டு சட்டத்தில் இடம் உள்ளது.

    மற்ற நாடுகளும் எச்சரிக்கை!

    சர்வதேச திருமணங்கள் என்பது பரஸ்பர சம்மதம் மற்றும் உண்மையான ஈர்ப்பு அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும். மணப்பெண்ணை விலைக்கு வாங்குவது பெரும்பாலும் பணத்திற்காக மிரட்டிப் பறிப்பதற்கும் உடல்ரீதியான ஆபத்துகளுக்கும் வழிவகுக்கும்' என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக வியட்நாம், மியான்மர், லாவோஸ், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள சீன தூதரகமும் தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    English Summary

    Bangladeshi women: China has warned its citizens against illegal cross-border marriages after reports of foreign brides, including some from Bangladesh, allegedly fleeing with money. Authorities urged people to avoid unverified marriage brokers and online contacts, citing risks of fraud, trafficking, and legal violations.