ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'!

  • அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் அச்சம் ஓவர்நைட்டில் வழக்கம் போல் அமைதியானது, தற்போது யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தையை நோக்கி நகர்ந்துள்ளது. டிரம்ப் நேற்று, இன்று இரவு ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தப்போவதாக அச்சுறுத்தியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முடிவிலிருந்து திடீரென பின்வாங்கி, தாக்குதல்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்துள்ளார்.

    Advertisement

    மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையும், ஒப்பந்தைமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், வரும் சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமைக்குள் இந்த வரலாற்று ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த போர் முடிவுக்கு வந்தால் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சந்தையில் ஒரு மாபெரும் மறுசீரமைப்பை (Reset) உருவாக்கும்,

    Advertisement

    டிரம்ப் போட்ட புதிய பதிவு

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு மூலம் உலக நாடுகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. "ஈரான் அரசுடனான பேச்சுவார்த்தைகள் அந்நாட்டின் மிக உயரிய தலைமையிடம் ஒப்புதலுக்குக் கொண்டு செல்லப்பட்டு அப்ரூவல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று இரவு ஈரான் மீது நடத்தத் திட்டமிட்டிருந்த அனைத்து வான்வழி மற்றும் குண்டுவீச்சுத் தாக்குதல்களையும் அமெரிக்க அதிபர் என்ற முறையில் நான் ரத்து செய்துள்ளேன்" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மெகா அமைதி ஒப்பந்தத்தின் கண்டிஷன்கள் அனைத்தும் அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மற்றும் எகிப்து உள்ளிட்ட போரில் தொடர்புடைய அனைத்து சர்வதேச நாடுகளாலும் ஒட்டுமொத்தமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தம் கையெழுத்தாகும் தேதி மற்றும் இடம் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

    Advertisement

    ஈரானின் உச்ச தலைவர் முஜ்தபா கமேனி இந்த ஒப்பந்தத்திற்குத் தனது தனிப்பட்ட பச்சைக்கொடியைக் காட்டியுள்ளதாக வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள 5 முக்கிய அம்சங்கள்!

    சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) ஈரானுக்குச் சாதகமான பல்வேறு முக்கியச் சலுகைகள் மற்றும் 5 பிரதான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன:

    கடற்படை முடக்கம் நீக்கம்: இந்த அமைதி உடன்படிக்கை முறைப்படி கையெழுத்தான அடுத்த கணமே, ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்க ராணுவம் விதித்துள்ள கடுமையான கடற்படை முற்றுகை (Naval Blockade) முழுமையாக வாபஸ் பெறப்படும்.

    Advertisement

    ஈரானியத் தலைமையின் முழு ஒப்புதல்: இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளுக்கும் ஈரானில் உள்ள ஒட்டுமொத்த உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் தங்களின் அப்ரூவலை வழங்கியுள்ளனர்.

    கார்க் தீவு ஆக்கிரமிப்பு கைவிடப்பட்டது: ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் 'கார்க் தீவை' (Kharg Island) அமெரிக்கத் தரைப்படைகளைக் கொண்டு கைப்பற்றும் அதிரடித் திட்டம் தற்போது முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளது (Off the table).

    ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு: உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய நுழைவாயிலாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) முழுமையாகத் திறந்து, அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றி வான்வழி மற்றும் கடல்வழி வர்த்தகப் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் வரும் சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமைக்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    காலக்கெடு இல்லாத பேச்சுவார்த்தை: இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்ய அமெரிக்கா எவ்வித இறுதிக் கெடுவையும் (Deadline) விதிக்கவில்லை. ஈரான் தற்போதைய சூழலில் மிகவும் பகுத்தறிவுடனும், அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

    கச்சா எண்ணெய் சரிவு.. தங்கம் மீண்டும் பாயும்!

    மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதாக வந்த இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, உலகளாவிய கமாடிட்டி மற்றும் முதலீட்டுச் சந்தைகளில் வரலாறு காணாத அதிரடி மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. போர் அச்சுறுத்தலால் எகிறிக்கொண்டே சென்ற சர்வதேசக் கச்சா எண்ணெய் விலையானது, இந்த அமைதி பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் செய்தியால் முதலீட்டு சந்தையில் மாற்றங்கள் நிகழ துவங்கியுள்ளது.

    Advertisement

    எண்ணெய் விநியோகத் தட்டுப்பாடு நீங்கி சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதால், கச்சா எண்ணெய் விலை இன்று 1-2 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் மேலும் குறையும் என்று வர்த்தக வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதன் நேரடி விளைவாக, கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து வெளியேறும் பெரு நிறுவனங்களின் முதலீடுகள் அனைத்தும் மீண்டும் பங்குச்சந்தைகள் (Stock Markets) மற்றும் பாதுகாப்பான புகலிடமான தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மீது குவியத் தொடங்கும்.

    இதனால் கடந்த சில வாரங்களாகச் சரிவைச் சந்தித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான முதலீடுகள் மீண்டும் அதிகரித்து, அவற்றின் சந்தை மதிப்பு மிக பிரம்மாண்டமான புதிய உச்சங்களை நோக்கிப் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வளைகுடாப் போர் திங்கட்கிழமைக்குள் முடிவுக்கு வந்து, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால், அது இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைத்து ஒட்டுமொத்த விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும்.

    English Summary

    US President Donald Trump has suddenly canceled planned massive strikes on Iran and announced that peace talks have reached the final stage, with a historic agreement likely to be signed by Saturday or Monday. The deal includes lifting the naval blockade, dropping the Kharg Island seizure plan, and fully opening the Strait of Hormuz, which could lead to lower global oil prices and a major reset in investment markets.