பிரேசில் அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆட்சியை தக்க வைத்தார் இடதுசாரி தலைவர் லுலா!

  • பாலோ: பிரேசிலில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தார் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா. பிரேசில் நாட்டு அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரும், இடதுசாரி தலைவருமான லுலா டா சில்வா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

    Advertisement

    லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் இடதுசாரி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, முன்னாள் அதிபரின் மகனும், வலதுசாரி வேட்பாளருமான ஃப்ளாவியோ போல்சனாரோ உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

    Advertisement

    பிரேசில் முதற்கட்ட அதிபர் தேர்தல் முடிவின்படி ஃப்ளாவியோ போல்சனாரோ 47.03% வாக்குகள் பெற்றார். அதிபர் லூலா டா சில்வா 45.16% வாக்குகள் பெற்றார். பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறவேண்டும். எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெறாத பட்சத்தில் அதிக வாக்குகளை பெறும் முதல் 2 வேட்பாளர்கள் மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்.

    எந்த வேட்பாளரும் 50% பெரும்பான்மை பெறாத நிலையில், லுலா டா சில்வா, ஃப்ளாவியோ போல்சனாரோ ஆகியோருக்கு இடையே அக்டோபர் 25 ஆம் தேதியான நேற்று இறுதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 16 கோடி பேர் வாக்களித்தனர்.

    Advertisement

    இந்நிலையில், பிரேசில் அதிபராக நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் தற்போதைய அதிபரும், இடதுசாரி தலைவருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா. ஃபிளாவியோ போல்சனாரோ 48.25% வாக்குகளைப் பெற்ற நிலையில், லுலா டா சில்வா 51.75% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

    லத்தீன் அமெரிக்கா முழுவதும் வலதுசாரி அலை வீசி வருவதாகக் கருதப்படுகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர், லத்தீன் அமெரிக்காவின் நாடுகளில் நடந்த தேர்தல்களில் வலதுசாரி, பழமைவாத வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், பிரேசிலில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளார் இடதுசாரி அதிபராக வென்றுள்ள லுலா டா சில்வா.

    Advertisement

    2003, 2007, 2023 அதிபர் தேர்தல்களில் ஏற்கனவே வெற்றி பெற்ற லுலா டா சில்வா, தற்போது 4வது முறையாக அரியணை ஏறுகிறார். புதிய பதவிக்காலம் 2027 ஜனவரி 5 ஆம் தேதி தொடங்குகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரித்த ஃப்ளாவியோ போல்சனாரோ தோல்வியடைந்துள்ளார்.

    English Summary

    Brazil's leftist President Luiz Inacio Lula da Silva pulled off a dramatic comeback as he clinched election victory against right-wing senator Flavio Bolsonaro, who trounced him in the first round.