அவ்வளவு சீக்கிரத்துல முடிக்க முடியாது! பிரிக்ஸ் பேங்கில் புது பாட்னர்! பீனிக்ஸ் பறவையாக வரும் ஈரான்!

  • தெஹ்ரான்: ஈரானின் மிக முக்கியமான இடங்கள் மீது தாக்குதல் நடத்தி, வெளிநாடுகளில் உள்ள ஈரானின் சொத்துக்களை முடக்கி, மொத்தமாக கதையை முடித்துவிட வேண்டும் என்று அமெரிக்கா தீவிரமாக முயன்றது. ஆனால், இப்போது பிரிக்ஸ் அமைப்பின் மூலம் ஈரான் மீண்டு முளைக்க தொடங்கியிருக்கிறது.

    Advertisement

    ஈரான் விஷயத்தில் அமெரிக்கா நடந்துக்கொண்டது கொஞ்சம் கூட சரியே இல்லை. உலக நாடுகள் இதை சொல்லியும் கூட, ஆயுத தாக்குதலை தாண்டி பொருளாதார ரீதியிலான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியது.

    Advertisement

    அமெரிக்கா செஞ்சது என்ன?

    ஈரான் கச்சா எண்ணெய்யை விற்றுதான் பணத்தை சம்பாதிக்கிறது. இதை புரிந்துக்கொண்ட அமெரிக்கா.. ஈரானிடம் எண்ணெய் வாங்கினால் எங்களை பகைத்தக்கொண்டதாக அர்த்தம்! எங்க நாட்டுடன் வர்த்தகம் செய்ய முடியாது.. என சொல்லிவிட்டது. இது ஈரானின் அடி மடியில் கை வைக்கும் கதை. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயந்த இந்தியா உள்ளிட்ட நாடுகள், ஈரான் எண்ணைய்யை வாங்குவதை நிறுத்திவிட்டன. இதனால், ஈரான் கஜானா காலியாக தொடங்கியது.

    முதலீடுகள் இல்லை

    அதேபோல ஒரு நாடு, இன்னொரு நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் எனில், அதற்கு SWIFT எனப்படும் பணப்பரிவர்த்தனை சிஸ்டம் தேவை. கூகுள் பே மாதிரி இதை புரிஞ்சுக்கலாம். இந்த SWIFT சிஸ்டத்தை அமெரிக்காதான் கையில் வைத்திருக்கிறது. எனவே, இந்த அமைப்பிலிருந்து ஈரானை தூக்கிவிட்டது. இதனால் ஈரானுக்குள் அந்நிய நேரடி முதலீடுகள் வரவில்லை.

    Advertisement

    சொந்தமா வர்த்தகமும் செய்ய முடியல.. வெளிநாட்டு முதலீடுகளும் வரல.. கையில இருக்குற காசும் செல்லா காசாக மாறிவிட்டது. இப்படி ஈரானை எல்லா பக்கமும் சுத்துப்போட்டது அமெரிக்கா. நிலைமை இப்படி இருக்கையில்தான், பிரிக்ஸ் வங்கியில் ஈரான் உறுப்பினராகும் முடிவை எடுத்திருக்கிறது ஈரான்.

    பிரிக்ஸ் வங்கியில் பாட்னர்

    நம்மூர் ரிசர்வ் பேங்க் மாதிரி.. ஈரானில் சென்ட்ரல் பேங்க் இருக்கிறது. இந்த வங்கியின் ஆளுநர் அப்துல்நாசர் ஹேமதி, பிரிக்ஸ் வங்கியுடன் ஈரான் இணைய இருப்பதை உறுதி செய்திருக்கிறார். கடந்த 2024ல் ஈரான் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துவிட்டது. எனவே, பிரிக்ஸ் வங்கியில் இணைவதும் ரொம்ப ஈஸி. இந்தியா, சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இந்த பேங்கில் உறுப்பினராக இருக்கின்றன.

    Advertisement

    டாலருக்கு ஆப்பு

    இந்த வங்கியில் இணைந்தால், மற்ற நாடுகளுடன் வியாபாரம் செய்ய அமெரிக்க டாலர் வேண்டியதில்லை. சொந்த கரன்சியில் பொருட்களை வாங்கலாம், விற்கலாம். எனவே ஈரானின் கரன்சியான 'ரியால்' மதிப்பு அதிகரிக்கும். மறுபுறம் புதியதாக சேரும் நாடுகளுக்கு பிரிக்ஸ் வங்கி கடன் கொடுக்கும். ரோடு போட, துறைமுகங்கள் அமைக்க, மின்சார உற்பத்தி.. இப்படி அடிப்படை விஷயங்களை செய்துக்கொள்ள ரொம்பவும் குறைஞ்ச வட்டியில பிரிக்ஸ் பேங்க் கடன் கொடுக்கும். இந்த கடனுக்கு ஆயிரத்தி எட்டு கையெழுத்தெல்லாம் தேவையில்லை. ரொம்ப சிம்பிளான பிராசசஸ்தான்.

    பொருளாதார ஸ்டெபிலிட்டிக்காக ஈரான், பிரிக்ஸ் வங்கியில் இணைகிறது என்றாலும்.. இது அமெரிக்காவுக்குதான் பேக் ஃபயராக இருக்கும். ஏனெனில் பிரிக்ஸ் வங்கியின் நோக்கம் அமெரிக்க கரன்சியான டாலரை காலி செய்வதுதான். ஏற்கெனவே இந்த வங்கியில் பெரிய கைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது.. எண்ணெய் சப்ளையை கையில் வைத்திருக்கும் ஈரான் உள்ளே வருவது.. டிரம்புக்குதான் சிக்கல்.

    Topics: #brics #iran #bank

    English Summary

    BRICS: The United States had aggressively sought to put an end to the matter by striking Iran's key sites and freezing its overseas assets. However, Iran is now beginning to re-emerge through the BRICS alliance.