பாலி: தாய்லாந்தில் விடுமுறையை மனைவியுடன் கழிக்க சென்ற பிரிட்டிஷ் நைஜீரிய தொழிலதிபரும் இன்புளூயன்சருமான இகோ 'டைனி' உபிரிபோ, காஸ்மடிக் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்துள்ளார். 43 வயதான அவர் தனது ஆணுறுப்பை பெரிதாக்கி கொள்ள காஸ்மடிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான இன்புளூயன்சராக இருந்தவர் இகோ 'டைனி' உபிரிபோ.! பிரிட்டிஷ் நைஜீரிய தொழிலதிபரும் இன்புளூயன்சருமான இவர் கடந்த மார்ச் மாதம் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது இகோ ஆணுறுப்பை பெரிதாக்கும் அழகுசாதன சிகிச்சையை மேற்கொண்டுள்ளாராம். கடந்த மார்ச் மாதம் அவர் தாய்லாந்து சென்றிருந்த நிலையில், அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒரு மருத்துவ நிலையத்தில் அவரது ஆணுறுப்பை பெரிதாக்கும் சிகிச்சையை எடுத்துள்ளார். இதற்காக அவரது அந்தரங்க உறுப்பில் 40 மில்லிலிட்டர் லிடோகைன் மற்றும் ஹைலூரோனிக் அமிலம் செலுத்தப்பட்டதாக தெரிகிறது. அப்போது இகோவும் அவரது மனைவி டேனியல் சிம்பா ஆலனும் பாங்காக்கில் உள்ள மேரியட் ஹோட்டலில் தங்கியிருந்தனர். சிகிச்சைக்கு பிறகு இருவரும் மசாஜ் செய்து கொண்டிருந்தபோது, இகோவுக்கு மார்பில் பிரச்சினை ஏற்பட்டதுடன், அவர் இரண்டு முறை மயங்கி விழுந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவசர மருத்துவ சேவை மூலம் இகோ சுகும்விட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் மருத்துவமனைக்கு சென்ற போது, அவர் சுயநினைவில் தான் இருந்துள்ளார். மருத்துவர் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதிலும் அளித்துள்ளார். அவருக்கு இதயத்தில் என்ன சிக்கல் என்பதை கண்டறிய அவருக்கு சிடி ஸ்கேன் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அப்போது தான் டேனியல் மருத்துவர்களிடம் சிகிச்சையின்போது ஃபில்லர் ஊசி செலுத்தப்பட்ட தகவலை தெரிவித்தார். இதை சொல்லும்போதே சுயநினைவை இழந்த அவர் மீண்டும் மயக்கமடைந்தார். மருத்துவர்கள் அவருக்கு நுரையீரலில் ஏற்படும் pulmonary embolism ஏற்பட்டிருப்பதாக கண்டறிந்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். நுரையீரலுக்கு செல்லும் ரத்தக் குழாயில் ரத்தக்கட்டி அடைப்பை ஏற்படுத்தும்போது இந்த நிலை ஏற்படும். இதையடுத்து அவரது உயிரை காப்பாற்ற கடந்த மார்ச் 6 அதிகாலை, மருத்துவர்கள் 100 நிமிடங்களுக்கும் மேலாக சிபிஆர் எனப்படும் இதய நுரையீரல் புத்துயிர் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனில்லாமல் இகோ உயிரிழந்தார். இகோவின் மரணம் குறித்து பிரிட்டனில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவரது நுரையீரலில் சில செல்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த செல்கள் அவருக்கு காஸ்மடிக் சிகிச்சையின்போது ஆணுறுப்பில் செலுத்தப்பட்ட ஹைலூரோனிக் அமிலத்துடன் பொருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்தே அந்த காஸ்மடிக் சிகிச்சையால் ஏற்பட்ட நுரையீரல் தக்கையடைப்பே இகோவின் மரணத்துக்கு காரணம் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இகோ உபிரிபோ ஆடம்பரமான வாழ்க்கை முறைக்காகவும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்தார். அவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 1.85 லட்சம் பேர் அவரை பாலோ செய்கிறார்கள். லண்டனில் சுமார் 6 லட்சம் டாலர் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பும், லாஸ் ஏஞ்சல்ஸின் கிரென்ஷா பகுதியில் சுமார் 11 லட்சம் டாலர் மதிப்பிலான வீடும் அவருக்கு இருந்தது. 2022ஆம் ஆண்டு ஃபேஷன் டிசைனரும் சமூக பிரபலமுமான டேனியல் என்பவரை இகோ திருமணம் செய்துகொண்டார். ஜிம்பாப்வேயில் நடைபெற்ற இவர்களது திருமண விழாவு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதேபோல இகோவின் இறுதிச்சடங்கும் அவரது ஆடம்பர வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்றது. லண்டனில் சுமார் 7.45 லட்சம் டாலர் மதிப்பிலான தங்க நிற சவப்பெட்டியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆணுறுப்பை பெரிதாக்கும் சிகிச்சை
மயங்கினார்
என்ன நடந்தது
பிரம்மாண்ட இறுதி சடங்கு