கனடா சிறுவனுக்கு வந்த ஆசை.. ஏஐ சொன்னபடி மலையேறியாச்சு.. உச்சியில் கண்ட காட்சி.. அங்கேதான் ட்விஸ்ட்டே

  • ஒட்டாவா, கனடா: கனடாவை சேர்ந்த அந்த 16 வயது சிறுவனுக்கு மலையேற்றம் செய்வது மிகவும் பிடிக்குமாம்.. அப்படித்தான் ஒருநாள் ஒரு நாள் காலையில் மலையேற்றம் போகலாம் என்று ஆசைப்பட்டுள்ளான்.. இதற்காக அன்று காலை ஜரூராக கிளம்பிய அவன், க்ரூஸ் மலைக்கு சென்றிருக்கிறான். அங்கிருந்து க்ரவுன் மலைக்குப் போக வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறான்..

    Advertisement

    ஆனால், எந்த வழியில் போனால் சரியாக இருக்கும் என்று தெரியாததால், கிளாட் ஏஐயிடம் வழி கேட்டிருக்கிறான். அந்த ஏஐ-யும் ஒரு பாதையைச் சொல்லியிருக்கிறது. அதன்படியே சிறுவனும் நடக்க ஆரம்பித்திருக்கிறான்..

    Advertisement

    கனடா சிறுவனுக்கு வந்த ஆசை

    ஆரம்பத்தில் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால், போகப்போகத்தான் ஏதோ வித்தியாசமாக இருந்திருக்கிறது.. ஏஐ காட்டிய பாதை வேறு மாதிரியாக இருந்தது. இதை அந்தச் சிறுவன் கவனிக்கவே இல்லை.. அப்படியே முன்னாடி போய்க்கொண்டே கிரவுன் பாஸ் வழியாக க்ரேட்டர் ஸ்லாப்ஸ் மற்றும் க்ரவுன் கௌலியர் பகுதிக்குள் நுழைந்துவிட்டான்.. அங்கே போன பிறகுதான் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது..

    சுற்றிலும் கரடுமுரடான பாறைகள்.. செங்குத்தான பகுதிகள்.. திரும்பிப் பார்த்தால் வந்த பாதையும் சரியாக தெரியவில்லை. முன்னாடி போகவும் முடியவில்லை.. பின்னாடி திரும்பவும் முடியவில்லை. ஒரு கட்டத்தில், விடோமேக்கர் அரீட் என்ற பகுதியின் மலையுச்சியில் சென்று வசமாக மாட்டிக் கொண்டான். .

    Advertisement

    மலை உச்சியில் செம பீதி

    தான் வந்து மாட்டிக்கொண்டிருப்பது சாதாரண இடம் இல்லை என்பதை அப்போதுதான் அந்தச் சிறுவன் உணர்ந்திருக்கிறான்.. அங்கிருந்து கால் தவறினால் நேராக கீழே விழ வேண்டிய நிலைமை.. வெலவெத்து போன அந்தச் சிறுவன், உடனடியாக உதவி கேட்டு அழைப்பு விடுக்கவும், நார்த் ஷோர் ரெஸ்க்யூ மீட்புக்குழுவினர் விரைந்து சென்று சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து, மீட்புக்குழு மேலாளர் பால் மார்க்கி செய்தியாளர்களிடம் பேசும்போது, "கிளாட் ஏஐ அந்த குறிப்பிட்ட இடத்துக்கு நேரில் சென்றதில்லை.. எந்த மலைப்பாதையிலும் நடந்த அனுபவமும் ஏஐ-க்கு கிடையாது. அதனால், மலை ஏற்றம் போன்ற ஆபத்தான விஷயங்களில் ஏஐ சொல்வதை மட்டும் நம்பிவிடக்கூடாது. நாமாகவே நன்றாக ஆராய வேண்டும்.. சரியான பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.. அனுபவம் உள்ளவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்" என்று அட்வைஸ் தந்துள்ளார்.

    Advertisement

    க்ரூஸ் மலையேற்றம்

    ஆனால் இந்த சிறுவன் மீண்டு வந்தது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியம்.. காரணம், அக்டோபர் 4-ம் தேதி காலை 8 மணிக்கு க்ரூஸ் மலைக்கு சென்றுள்ளான் அந்த சிறுவன்.. சுமார் 20 பவுண்ட் எடையுள்ள பையையும் கையோடு எடுத்துச் சென்றிருக்கிறான்... அந்த பையில் ஷூ, பாதுகாப்பு கயிறு அணியும் உடை, 2 தண்ணீர் பாட்டில்கள், ஹெல்மெட் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன.

    Indoor எனப்படும் உள்ளரங்கில் சுவர் ஏறும் பயிற்சியில் அவனுக்கு நல்ல அனுபவம் இருந்திருக்கிறது. வாரத்துக்கு 4 முதல் 5 முறை இதற்காக செல்வானாம்.. க்ரவுன் மலைக்கும் இதற்கு முன்பு சென்றிருக்கிறான். ஆனால், இயற்கையான மலையில், அதுவும் இந்தப் பாதையில் ஏறுவது இதுதான் முதல்முறையாம்.

    Advertisement

    பாதை பற்றி தெரிந்து கொள்ள, ஏஐ மட்டும் நம்பாமல், கூகுள் மேப்ஸ், ஆல் டிரெயில்ஸ் உள்ளிட்டவற்றையும் பார்த்திருக்கிறான். ஆனால், ஏஐ காட்டிய பாதையைப் பின்பற்றி சென்றபோதுதான், இப்படி எசகுபிசகாக மாட்டி கொண்டுள்ளான்.

    5 அடி அகல திட்டு

    அப்படியொரு மலையுச்சிக்கு போனதுமே பயந்து போய், கை, , கால்களைப் பயன்படுத்தி பாறையில் ஏறியிருக்கிறான். மேலே செல்லச் செல்ல பாதை இன்னும் ஆபத்தானதாக மாறியதால் கீழே இறங்கவும் முடியாமல் போயிருக்கிறது. கடைசியில் சுமார் 5 அடி அகலமுள்ள ஒரு மண் திட்டில் நின்றுவிட்டான்..

    ஒரு பக்கம் செங்குத்தான பாறை.. இன்னொரு பக்கம் கீழே விழும் ஆபத்து... இதற்கு பிறகுதான், அம்மாவுக்கு உடனடியாக போனை போட்டு விஷயத்தை சொல்லியிருக்கிறான்.. பிறகு மீட்புக்குழுவை அழைத்திருக்கிறான். மதியம் 3.30 மணியளவில் மீட்புக்குழுவினருக்கு தகவல் கிடைத்து கிளம்பியிருக்கிறார்கள்..

    Advertisement
    நிதி நிபுணர்களுக்கும் ஆப்பு வைத்த ஏஐ.. பிரபல பொருளாதார நிபுணர் தகவல்

    அதற்குள் சிறுவன் சிக்கியிருந்த இடத்துக்கு அருகிலிருந்த 2 பாறை ஏறுபவர்கள், அவனுடைய குரலைக் கேட்டு உதவிக்கு வந்திருக்கிறார்கள்.. சிறிய சாப்பாடு பொட்டலத்தையும், குளிருக்காக போர்வையையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்கள். பதிலுக்கு அவர்களுக்குத் தேவையான "ஹெட்லைட்"களை சிறுவன் கொடுத்தானாம்.

    சிறுவனின் ஆசை என்ன தெரியுமா

    அதற்குள் மீட்பு ஹெலிகாப்டரும் அங்கு வந்துள்ளது.. ஆனால், பாறைச் சுவர் மிகவும் அருகில் இருந்ததால் ஹெலிகாப்டரால் சிறுவனுக்கு நேராக அருகில் செல்ல முடியவில்லை. அதனால் 2 மீட்புப் பணியாளர்களை மேலே இறக்கியுள்ளனர். அவர்கள் கயிறு மூலம் சிறுவனிடம் சென்று, அவனை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்ற பிறகு ஹெலிகாப்டரில் தூக்கி மீட்டுள்ளனர். மாலை 6.30 மணியளவில் சிறுவன் பத்திரமாக மீட்டனர்..

    இந்த அனுபவத்துக்குப் பிறகு, இனிமேல் மலையில் எந்த வழியாக போக வேண்டும் என்ற சந்தேகம் வந்தால், சத்தியமாக ஏஐயை பயன்படுத்த மாட்டேன் என்று பதறி சொல்கிறான் சிறுவன். .ஆனால், அதைவிட சுவாரஸ்யம் என்ன தெரியுமா? எதிர்காலத்தில் கனடாவின் இளம் வயது எவரெஸ்ட் சிகர ஏறுபவராக வேண்டும் என்பதுதான் இந்த 16 வயது சிறுவனின் கனவுகளில் ஒன்றாம்..!!

    English Summary

    Canada Boy’s Hiking Dream.. Followed AI’s Route Up the Mountain.. Then He Saw Something at the Top