இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு


  • பெய்ஜிங்: பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'கேப்டன் அமெரிக்கா: தி வின்டர் சோல்ஜர்' கதையில் வரும் ஹைட்ரா அமைப்பு ஒரு ரகசிய அல்காரிதத்தை உருவாக்கும். அது மக்களின் டிஜிட்டல் வரலாற்றை ஆய்வு செய்து எதிர்காலத்தில் அரசுக்கு எதிராக யார் திரும்புவார்கள் என்று கணிக்கும். தற்போது அந்த அறிவியல் புனைவு சீனா மூலம் நிஜமாகியுள்ளது. சீனாவின் டெக் நிறுவனம் ஒன்று ஏஐ மூலம் இயங்கும் ஒரு அதிநவீன கண்காணிப்பு சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது.

    Advertisement

    சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தினாலும், அதன் பின்னணியில் இருக்கும் கண்காணிப்பு நடவடிக்கைகள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே பார்க்கப்படுகின்றன. இந்த சாப்ட்வேரிலும் கூட அதே சிக்கல்தான். கியுட்ஜ் (Geedge) என்ற சீன நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    எதிர்காலத்தைக் கணிக்கும்

    இது சாதாரண கண்காணிப்பு டூல் அல்ல. ஒரு நபர் எதிர்காலத்தில் போராட்டத்தில் ஈடுபடுவாரா அல்லது அரசுக்கு எதிராகச் செயல்படுவாரா என்பதை இது முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை செய்யும் வல்லமை கொண்டது. இந்தத் தொழில்நுட்பம் ஒரு நபரின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை மிக நுணுக்கமாகக் கண்காணிக்கிறது. ஒருவரின் ஷாப்பிங் முறைகள், சமூக ஊடகப் பதிவுகள், அவர்கள் செல்லும் இடங்கள் மற்றும் அவர்கள் பழகும் மனிதர்கள் ஆகிய டேட்டாவை ஏஐ அல்காரிதம் பகுப்பாய்வு செய்கிறது. இதன் மூலம் அவர்களின் எதிர்காலச் செயல்பாடுகள் கணிக்கப்படுகின்றன.

    Advertisement

    குறிப்பாகப் போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு அடிக்கடி செல்பவர்கள் அல்லது அரசுக்கு எதிரான கருத்துக்களைப் பகிர்பவர்களை இந்த டூல் குறிவைக்கிறது. அவர்களின் மனநிலை என்ன... அரசியல் சார்பு எப்படி இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு அவர்கள் எந்த நேரத்தில் வீதிக்கு வந்து போராடுவார்கள் என்பதைப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இந்த சாப்ட்வேர் ரகசியமாகத் தெரிவித்து விடும்.

    ஏஐ கேமரா

    சீனாவில் ஏற்கனவே பல இடங்களில் முகத்தை வைத்து ஆளை அடையாளம் காணும் ஏஐ கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால் இந்த புதிய ஏஐ நுட்பம் அதை எல்லாம் காலி செய்துவிட்டு அடுத்த லெவலுக்கு செல்கிறது. இது தனிமனிதச் சுதந்திரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. குற்றம் செய்வதற்கு முன்பே ஒருவரைக் குற்றவாளியாகக் கருதும் போக்கை இது உருவாக்குவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    இந்தத் தொழில்நுட்பம் சாதாரணமாக ஒருவரின் முகத்தை மட்டும் அடையாளம் காண்பது கிடையாது. மாறாக மக்களின் அன்றாட பிஹேவியரல் பேட்டர்ன் எனப்படும் நடத்தை முறைகளை மிகத் துல்லியமாக ஆய்வு செய்கிறது. ஒரு தனிநபரின் சமூக வலைத்தளச் செயல்பாடுகள் முதல் அவர் எந்த மாதிரியான உணவகங்களுக்குச் செல்கிறார் என்பது வரை அனைத்துத் தரவுகளும் இதில் சேகரிக்கப்படுகின்றன.

    எல்லாவற்றையும் கணிக்கும்

    வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் பிரட் வி பென்சன் இது குறித்து ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். கியுட்ஜ் நிறுவனத்தின் ஆராய்ச்சிக் குழு வெறும் தகவல்களை மட்டும் சேகரிக்கவில்லை என்று அவர் கூறுகிறார். ஒரு குடிமகன் அடுத்து என்ன செய்வார், யாருடன் இணைவார் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு ஒரு வரைபடத்தை அந்த நிறுவனம் உருவாக்குகிறது. கையிருப்பில் உள்ள டேட்டாவை வைத்து ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனி சுயவிவரங்களை இந்த ஏஐ மென்பொருள் உருவாக்குகிறது. நீங்கள் யார், உங்களின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை இந்த கம்யூட்டர் முடிவு செய்கிறது.

    Advertisement

    அமெரிக்கா

    இந்த ஆய்வுகள் அமெரிக்காவின் சிப் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் காரணமாகச் சற்று மந்தமடைந்தது. ஏஐ தொழில்நுட்பத்திற்குத் தேவையான அதிநவீன கம்ப்யூட்டர் சிப்களை வழங்குவதற்கு பைடன் நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனால் என்விடியா போன்ற நிறுவனங்களின் அதிநவீன சிப்கள் சீனாவுக்குள் நுழையவில்லை. இதனால் ஆய்வுகள் சற்று தாமதமடைந்தது. ஆனால் தற்போது அமெரிக்க அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சீனாவிற்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளன.

    டிரம்பின் பெய்ஜிங் பயணத்திற்குப் பிறகு சில அதிரடி மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. என்விடியா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட சிப்கள் இனி சீனாவிற்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிகாரிகள். இது சீனாவின் ஏஐ கண்காணிப்பு தொழில்நுட்பத்திற்கு மேலும் வலுசேர்க்கும் என அஞ்சப்படுகிறது..

    English Summary

    Chinese tech firm Geedge has developed an advanced AI surveillance tool that analyzes behavioral patterns to predict anti-government protests(சொந்த மக்களை கண்காணிக்கும் சீனா): China AI technology Track Citizens Future Actions.