சீனா: சவப்பெட்டிக்குள் கேட்ட முனகல் சத்தம்.. திறந்து பார்த்ததுமே வெலவெலத்த குடும்பம்! என்ன நடந்தது

  • பெய்ஜிங்: உயிரே போய்விட்டது என்று கருதி சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டார் அந்த பாட்டி.. ஆனால், திடீரென கண்விழித்து வெளியே வந்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது இல்லையா? சீனாவில் அப்படித்தான் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிஜமாகவே நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விவரத்தை அங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!

    Advertisement

    சீனாவின் ஹெபெய் மாகாணம், சாங்ஜோவ் பகுதியைச் சேர்ந்தவர் அந்த 70 வயது பாட்டி.. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூளையில் ரத்தம் உறைவு நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார்... இது போதாதென்று அவருக்குப் கேன்சர் பாதிப்பும் தீவிரமாகவே இருந்தது.

    Advertisement

    சவப்பெட்டியில் பாட்டி

    நிலைமை சீரியஸாகி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இனிமேல் சிகிச்சை பலனளிக்காது என்று டாக்டர்கள் கைவிரித்துவிடவும், உறவினர்கள் பாட்டியை வீட்டிற்கு அழைத்து வந்து, கடைசி நாட்களில் பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 8ம் தேதி பாட்டியிடம் எவ்வித அசைவோ, சுவாசமோ தென்படவில்லை. அவரது உடலும் மரத்துப்போய் இருந்தன.. மூச்சுகூட இல்லை என்பதால், அவர் இறந்துவிட்டதாகக் குடும்பத்தினர் முடிவு செய்தனர்..

    வெளியூரில் உள்ள சொந்தக்காரர்களுக்கும் சொல்லி அனுப்பப்பட்டது.. அவர்கள் அனைவரும் திரண்டு வந்து, கடைசி அஞ்சலியை செலுத்த வேண்டும் என்பதற்காக, பாட்டியின் உடலை அதுவரை பாதுகாக்க முடிவு செய்தனர்.. இதற்காக மின்சாரத்தால் இயங்கும் ஏசி சவப்பெட்டியை வரவழைத்து அதில் பாட்டியை வைத்து பூட்டினார்கள்..

    Advertisement

    ஆடிப்போன உறவினர்கள்

    மறுநாள் அதாவது செப்டம்பர் 9ம் தேதி, சவப்பெட்டியின் அருகே நின்று கொண்டிருந்த அவரது மருமகள் திடீரென ஏதோ ஒரு விசித்திரமான சத்தத்தைக் கேட்டார். சவப்பெட்டியின் உள்ளே இருந்து மிக லேசான முனகல் சத்தம் வருவதையிம் கேட்டுப் பதறிப்போனார். உடனடியாக உறவினர்களை அழைத்துச் சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அனைவரும் ஆடிப்போய்விட்டனர்! ஆம், போட்டி உயிருடன் சுவாசித்துக்கொண்டிருந்தார்.

    பதறியடித்து அவரைச் சவப்பெட்டியில் இருந்து வெளியே எடுத்தனர். செப்டம்பர் 11 அன்று உறவினர்கள் அனைவரும் வந்து பார்த்தபோது, மூதாட்டி மெல்லக் கண்விழித்துப் பார்த்தார்.

    ஆனால், அவரால் பேசவோ, சொட்டு தண்ணீரைக் கூட குடிக்கவோ முடியவில்லை. அந்த அளவுக்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. ஆனால், கண்விழித்த அடுத்த இரண்டு நாட்களில் அதாவது செப்டம்பர் 11 இரவு அந்த பாட்டி மறுபடியும் நிஜமாகவே இறந்துவிட்டார்.

    Advertisement

    டாக்டர்கள் தந்த விளக்கம்

    அதற்குள் "இறந்தவர் எப்படி மீண்டும் உயிருடன் வந்திருக்க முடியும்?" என சோஷியல் மீடியாவில் கேள்விகளும் சந்தேகங்களும் கிளம்பின., அதற்கு மருத்துவ நிபுணர்கள் அளித்துள்ள விளக்கம் தான் மிக முக்கியமானது!

    "மருத்துவ மொழியில் இது Apparent Death அதாவது "தோற்ற மரணம்" என்று அழைக்கப்படுகிறது. தீவிரமான நோய் பாதிப்பு இருக்கும்போது, ஒருவரின் இதயம் மற்றும் சுவாசத் துடிப்பு வெளி உலகிற்குத் தெரியாத அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும்... மனிதர்களின் சாதாரண பார்வைக்கு அவர் இறந்துவிட்டது போலத் தோன்றினாலும், உடலுக்குள் லேசான உயிர் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல், குடும்பத்தினர் சவப்பெட்டியை உடல் உறையும் அளவுக்கு (deep-freezing) வைக்காமல், சாதாரணக் குளிர்ச்சியூட்டும் நிலையில் வைத்திருந்ததால் பாட்டியால் சில மணி நேரங்கள் மூச்சுவிட முடிந்துள்ளது" என்கிறார்கள்.

    மொத்தத்தில், மருத்துவமனைக்கு சென்று முறையான மரணச் சான்றிதழ் பெறாமல், உறவினர்களே அவசரத்தில் முடிவெடுத்தது தான் இந்தத் தவறுக்கு முக்கியக் காரணமாகவிட்டது.. அத்துடன் மனிதர்களின் மரணம் குறித்த விழிப்புணர்வையும், உரிய மருத்துவப் பரிசோதனையின் அவசியத்தையும் உலகிற்கு சொல்லியிருக்கிறது...!!!

    English Summary

    China: Humming Sound From Coffin.. Family Opens It and Gets Shocked! What Happened?