பெய்ஜிங்: கடந்த 14 மாதங்களுக்கு முன்னர் சீனா டாங்ஃபெங்-61 (DF-61 ICBM) எனும் அணு ஆயுதத்தை காட்சிப்படுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது சீனா இந்த ஆயுதத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவின் எந்த நகரத்தை வேண்டுமானாலும் சீனாவால் தாக்க முடியும்.
இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, கடந்த 14 மாதங்களுக்கு முன்னர் பொதுவெளியில் அறிமுகப்படுத்தியிருந்தது சீனா! ஆனால், 14 மாதங்களுக்கு பிறகு தற்போது.. அந்த ஆயுதத்தை பயன்பாட்டுக்கு இணைத்திருப்பது சர்வதேச ராணுவ நிபுணர்கள் இடையே விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
காரணம், எந்த ஒரு ஆயுதமும்.. அதுவும் குறிப்பாக அணு ஆயுதத்தை அவ்வளவு சீக்கிரமாக பயன்பாட்டில் யாரும் இணைக்க மாட்டார்கள். சீனாவின், அரசு ஊடகமான சிசிடிவி, கடந்த 5ம் தேதி வெளியிட்ட செய்தியில் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறது. இந்த ஏவுகணை வழக்கமான போர் பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பதை செய்திகள் தெளிவாக காட்டுகின்றன. DF என்பது சீரீஸ். இதற்கு முன்னத் DF 49 அணு ஆயுத ஏவுகணையை சீனா அறிமுகப்படுத்தியது. அத்துடன் ஒப்பிடும்போது, DF - 61 மிக வேகமாக ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த வெற்றி கொண்டாட்ட அணிவகுப்பின்போது.. காற்றில் இருந்து ஏவப்படும் ஜேஎல் 1, நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஜெஎல் 3, மற்றும் தரையிலிருந்து ஏவப்படும் டி எப் 31 பிஜே ஆகியவற்றுடன் இதுவும் காட்சிப்படுத்தப்பட்டது. இது சீனாவின் அணுசக்தி முப்படையின் வலிமையை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதை பெரிய ட்ரக்குக்குள் வைத்து.. சாலை மூலம் எங்கு வேண்டுமானாலும் கொண்டுபோக முடியும். பதுங்கு குழிகளில் வைக்கப்படும் ஏவுகணைகளை விட இது இதற்கு பாதுகாப்பு அதிகமாகும். எதிரிகளால் அவ்வளவு சீக்கிரத்தில் இதைக் குறி வைத்து தாக்கி விட முடியாது. ராணுவ விஷயத்தில், சீனா பல்வேறு தொழில்நுட்ப விவரங்களை ரகசியமாக வைத்திருக்கும். அதேபோல இந்த ஏவுகணை குறித்த விவரங்களையும் சீனா ரகசியமாகவே வைத்திருக்கிறது. இதற்கு முந்திய டிஎஃப் 41 ஏவுகணை, 15,000 கிலோமீட்டர் தூரம் வரை பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஏவுகணை.. சுமார் 18,000 கிலோமீட்டர் வரை பாயக்கூடியது. இதன் மூலம் அமெரிக்காவின் எந்த பகுதியும் சீனாவால் தாக்க முடியும். அதேபோல இது மூன்று நிலைகளை கொண்ட.. திட எரிபொருள் ஏவுகணையாக இரு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில இதை நீண்ட காலம் தயார் நிலையில் வைத்திருக்க முடியும். ஆபத்து காலங்களில்.. சில நொடிகளில் இதை ஏவி விட முடியும். ஒரே ஏவுகணையில், பல இலக்குகளை தனித்தனியாக தாக்கும் திறன் இருப்பது தான் இந்த ஏவுகணையின் சிறப்பு. இது மூன்று முதல் 10 அல்லது 8லிருந்து 14 அணு ஆயுத போர் கணைகளை ஒரே நேரத்தில் சுமந்து செல்லலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றர். குறைந்த நேரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது மற்றும் அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டிருப்பது, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு அலர்ட்டாக பார்க்கப்படுகிறது.