மாஸ் காட்டும் சீனா.. ஸ்டெல்த் மட்டுமல்லாது 'பீஸ்ட்' மோட் தொழில்நுட்பத்தையும் இணைத்து புது சாதனை!

  • பெய்ஜிங்: சீன விமானப்படையில் உள்ள J-20 ரக விமானம் 5ம் தலைமுறையை சேர்ந்ததாகும். இது ரேடார்களின் கண்களில் சிக்காமல் மறைந்திருந்து தாக்கும் ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த விமானம் ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன் மட்டுமல்லாது.. பீஸ்ட் மோட் முறையிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    பீஸ்ட் மோட் எனில்.. லாரி போல ஆயுதங்களை சுமந்து செல்லும் முறையாகும். இப்படி வெளிப்படையாக ஆயுதங்களை சுமந்து செல்லும்போது.. ரேடாரில் சிக்க வாய்ப்பு அதிகம். இருந்தாலும், பீஸ்ட் மோடுக்கு மாற்றும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டிருப்பது பரவலாக கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    இந்த விமானம் ரேடார் அலைகளில் சிக்காமல் இருக்க, ஏவுகணைகளை விமானத்தின் இறக்கை பகுதியில் மறைத்துக் கொண்டு செல்லும் அளவுக்கு வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் 4ம் தேதி அன்று விமானத்தின் புகைப்படம் ஒன்று பரவலாக ஷேர் ஆகியிருந்தது. அதில், விமானத்தின் இறக்கைக்கு அடியில் உள்ள வெளிப்புற பகுதிகளில்.. ஜோடியாக 8 PL-15 ரக நீண்டதூர ஏவுகணையை இந்த விமானம் சுமந்து கொண்டு பறந்தது தெளிவாக தெரிந்தது.

    இப்படி ஏவுகணைகளை வெளியில் தெரியும்படி சுமந்து செல்லும் போது.. விமானத்தின் மறைந்திருக்கும் திறன் பெருமளவில் குறைந்து, ரேடார்களின் எளிதாக சிக்கிவிடும். இருப்பினும்.. சீனா ஸ்டெல்த் திறனை தியாகம் செய்துவிட்டு, விமானத்தின் தாக்குதல் ஆற்றலை அதிகரிக்க முடிவு செய்துள்ளதை இந்த படம் காட்டுவதாக சர்வதேச ராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    அதாவது வான்வழிப் போர் என்று வந்து விட்டால்.. ஆரம்ப கட்டத்தில் மட்டுமே ஸ்டெல்த் திறன் பயன்படும். எதிரிகளின் வான் பாதுகாப்பு மற்றும் ரேடார்களை தாக்க மட்டுமே ஸ்டெல்த் திறன் தேவை. பின்னர் எதிரிகளுடன் நேரடியாக மோதும் சூழல் வந்து விட்டால், அதிகப்படியான ஏவுகணைகளை விமானம் சுமந்து செல்ல வேண்டும்.

    பொதுவாக ஸ்டெல்த் வகையில் உருவாக்கப்படும் விமானங்கள், இப்படி அதிக திறன் கொண்ட எடை கொண்ட ஏவுகணைகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்காது. இருப்பினும் சீனாவின் இந்த விமானம்.. ஏவுகணை லாரியை போல செயல்பட்டு, வான்வெளியில் முழு ஆதிக்கத்தை செலுத்த பீஸ்ட் மோடுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது சுமந்து செல்லும் ஏவுகணைகள் 150 முதல் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை கூட துல்லியமாக தாக்க முடியும்.

    Advertisement

    இந்த விமானங்களில் ஆரம்பத்தில் ரஷ்ய என்ஜின்கள் தான் பயன்படுத்தப்பட்டன. ஆனால், புதிய வேரியன்ட்களில் சீனாவின் சொந்த தயாரிப்பு என்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது அதிக உந்துவிசையை வழங்கி.. ஒலியை விட அதிக வேகத்தில் செல்ல உதவும். சீனா இப்படியாக இதுவரை 500க்கும் மேற்பட்ட விமானங்களை உருவாக்கி இருக்கிறது. 2035 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 1000 உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆயிரம் சொன்னாலும்.. சீனாக்காரன் மூளைக்காரன்தான்.

    English Summary

    China: The J-20 aircraft in the Chinese Air Force belongs to the fifth generation. It is built with stealth technology, allowing it to remain undetected by radar while launching attacks. Surprisingly, however, the aircraft is designed not only for stealth operations but also to function in "beast mode."