துணை விமானி சொன்னதை அப்படியே நம்பியே ஸ்மித் மச்சார்! நடுவானில் நடந்ததை ஓபனாக பகிர்ந்த இந்திய பைலட்

  • துபாய்: துபாயில் இருந்து டெல் அவிவ் புறப்பட்ட பிளை துபாய் விமானத்தை, துணை விமானி கடத்த முயன்ற நிலையில், அதனை துணிச்சலாக முறியடித்த இந்திய விமானி ஸ்மித் மச்சார் தற்போது படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையில் இருக்கும் ஸ்மித் மச்சார், விமானத்தில் நடைபெற்ற சம்பவம் பற்றி அங்குள்ள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது விமானத்தில் நடுவானில் நடைபெற்ற சம்பவம் பற்றி பேசியுள்ளார்.

    Advertisement

    துபாயில் இருந்து டெல் அவிவ் நகருக்கு சென்ற பிளை துபாய் விமானத்தை துணை விமானி, ஹமாம் அல் ஹாம்மாமி கடத்தி விமானத்தை மோத வைக்க திட்டமிட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த மாதம் 30 ஆம் தேதி இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.

    Advertisement

    உயிரை பணையம் வைத்து காப்பாற்றினார்

    பிளை துபாய் விமானத்தின் விமானி ஸ்மித் மச்சார் தனது உயிரை பணையம் வைத்து 174 பயணிகளையும் காப்பற்றினார். ஹமாமியால் கோடாரியால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய போதும், காக்பிட் அறையை திறந்துவிட்டு பயணிகள் உதவியால் விமானத்தை பத்திரமாக சவுதி அரேபியாவில் ஸ்மித் மச்சார் தரையிறக்க உதவினார்.

    ஸ்மித் மச்சார் பேட்டி

    படுகாயங்களுடன் சவுதி அரேபியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சார், ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஸ்மித் மச்சார் கூறியிருப்பதாவது: -

    காசாவிற்காக உயிர் தியாகம்.. விசாரணையில் ஓமன் துணை விமானி வாக்குமூலம் - பகீர் தகவல்
    Advertisement

    துணை விமானியாக இருந்த ஹம்மாமி பிரார்த்தனை செய்ய இருப்பதாக கூறினார். இதனால் பின்புறம் திரும்பி பார்க்கவில்லை. காக்பிட் அறை சிறியது என்றாலும், பிரார்த்தனை செய்ய போவதாக கூறியதால், நான் திரும்பி பார்க்க முயற்சிக்கவில்லை. எனது கணினியில் நேரத்தை செக் செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது பின் தலையில் பலமாக தாக்கப்பட்டேன்.

    சுயநினைவை இழந்து..

    என்ன பொருளால் தாக்கப்பட்டேன் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் அடிக்கடி சுயநினைவை இழந்து மீண்டும் நினைவு திரும்பும் நிலையில் இருந்தேன். விடுப்பில் இருந்த விமானிகள், விமானத்தை பத்திரமாக சவுதி அரேபியாவில் தரையிறக்கினர்' என்றார். விமான தாக்குதல் சம்பவத்தை முறியடித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த விமானி ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.

    Advertisement
    பயங்கரவாதியாகவே மாறிட்டார்..ஓமன் துணை விமானி விமான விபத்துக்கு தயாரானது எப்படி? உறைய வைக்கும் தகவல்

    இந்திய பிரதமர் மோடி அவரை வீடியோ காலில் அழைத்து பேசி பாராட்டினார். இஸ்ரேலும் ஸ்மித் மச்சாரின் தியாகத்தை பாராட்டி அவருக்கு நாட்டில் குடிமக்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருது அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கும் ஸ்மித் மச்சார் உடல் நலம் தேறி வரும் நிலையில், பேட்டி அளித்துள்ளார்.

    துணை விமானியிடம் விசாரணை

    விமான கடத்தல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கபட்ட நிலையில், சவுதி அரேபியாவில் விமானம் தரையிறக்கப்பட்டதும் துணை விமானி ஹம்மாமி கைது செய்யப்பட்டு இருந்தார். விமானத்தில் இஸ்ரேலியர்கள் பயணம் செய்த நிலையில் ஓமன் நாட்டை சேர்ந்த அந்த துணை விமானி, விமானத்தை மோத வைக்கும் சதித் திட்டத்துடன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    Advertisement
    டெல்லி விமானத்தை கடத்த முயற்சி? ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்! பின்னணி

    ஹம்மாமியிடம் தற்போது அமீரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சதி தொடர்பாக ஓமன் துணை விமானி தங்கியிருந்த அதே குடியிருப்பில் வசித்து வந்த மாலத்தீவை சேர்ந்த இரண்டு துணை விமானிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    English Summary

    Indian pilot Smith Machar, who courageously thwarted an attempt by the co-pilot to hijack a Flydubai flight bound for Tel Aviv from Dubai, is currently undergoing treatment for severe injuries. In an interview with a local media outlet, Machar recounted the incident that took place while the aircraft was in mid-air.