Brunei: புருனே சுல்தான் வசிக்கும் தங்க மாளிகை! உலகிலேயே மிகப் பெரிய வீடு! வீட்ல என்னென்ன இருக்கு?

  • டெல்லி: புருனே சுல்தான் ஹசனல் போல்கியாவின் 80ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் புருனே அரண்மனை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

    Advertisement

    இந்தோனேஷியாவில் உள்ள புருனேவை 1888ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்கள்தான் ஆட்சி செய்தனர். 1984 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றது.

    Advertisement

    இந்த நாட்டின் சுல்தானாக ஹசனல் போல்கியா இருந்து வருகிறார். இங்கு மக்கள்தொகை என்பது 4.50 லட்சம் ஆகும். உலகிலேயே மிகப் பெரிய வீட்டில் புருனே சுல்தான் வசித்து வருகிறார்.

    இந்த வீடு குறித்து பார்க்கலாம். இந்த மாளிகையின் பெயர் இஸ்தானா நூருல் இமான் ஆகும். புருனே சுல்தானாக முடிசூட்டியதும் போல்கியா, இந்த மாளிகையில் இருந்து வருகிறார்.

    இந்தியாவில் குஜராத்தில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனையை விட இது பெரியது. குஜராத் அரண்மனை 8 லட்சம் சதுரஅடிதான். ஆனால் புருனே சுல்தானின் மாளிகை 22 லட்சம் சதுர அடி ஆகும். இது கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

    Advertisement

    இந்த மாளிகையின் பெரும்பகுதி தங்கத்தால் ஆனது. இங்கு 7000 ஆடம்பர வாகனங்கள் உள்ளன. அதிலும் ரோல்ஸ் ராய்ஸ் மட்டும் 600 உள்ளன. லாம்போ கார், ஜாக்குவார், மெக்லாரன் உள்ளிட்ட ரக கார்களும் உள்ளன.

    தங்க முலாம் பூசப்பட்ட குடையுடன் கூடிய காரும் உள்ளது. இந்த கார்களை பராமரிக்க 110 கேரேஜ்கள் உள்ளன. சுல்தானுக்குச் சொந்தமான மிருகக் காட்சி சாலையில் 30 வங்காளப் புலிகளை வைத்துள்ளார்.

    இந்த மாளிகையின் மதிப்பு மட்டுமே ரூ 11,600 கோடி ஆகும். சுல்தானின் சொத்து மதிப்பு ரூ 2.49 லட்சம் கோடி ஆகும். அதில் கார்கள் மட்டும் 5 பில்லியன் டாலர் மதிப்பு என சொல்கிறார்கள். இந்த மாளிகையில் 257 பாத்ரூம்கள் உள்ளன. அறைகளின் எண்ணிக்கை 1,788 ஆகும். 5000 விருந்தாளிகள் தங்கும் அளவுக்கு ஹால் இருக்கிறது, 110 கார்கள் நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் வசதி, 5 நீச்சல் குளங்கள், ஹெலிபேட், 1500 பேர் அமர்ந்து தொழுகை நடத்தும் அளவுக்கு மசூதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

    Advertisement

    இந்த மாளிகை 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மாளிகையை லியோனார்டோ லாக்சின் என்பவர் வடிவமைத்தார். துபாய் புர்ஜ் கலிபாவை கட்டிய குவான் சியூதான் இந்த மாளிகைக்கு உள் அலங்காரம் செய்துள்ளார். தங்கம், மார்பிள் கொண்டு இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமிய மற்றும் மலாய் மரபுகளின் கலவையாக இந்த அரண்மனையின் கட்டடக் கலை உள்ளது. இந்த அரண்மனை சுல்தான் போல்கியாவின் 80 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இவரது இந்த மாளிகை 40 ஆண்டுகளுக்கு முன்பே 12 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.