சுனாமி போன்ற அலை.. உலக வரலாற்றில் இல்லாத வேகம்.. அமெரிக்காவை தாக்கும் ஃபுளோரன்ஸ் புயல்!


நியூயார்க்: அமெரிக்காவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் புயலாக ஃபுளோரன்ஸ் புயல் உருவெடுத்து இருக்கிறது.

அமெரிக்காவின் முக்கியமான மாகாணங்கள், நகரங்களில் எல்லாம் இந்த புயல் வீச உள்ளது. இதனால் மக்கள் இப்போதே அவர்களது இருப்பிடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த புயல் மிக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

அங்கு உள்ள ஐந்து விதமான படைகளும் இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நிறைய உயிர் இழப்புகள் ஏற்படும் என்று இப்போதே கணிக்கப்பட்டுள்ளது.

மோசம்

50 வருடங்களில் இல்லாத புயல்

இந்த ஃபுளோரன்ஸ் புயல் அமெரிக்காவில் இதுவரை ஏற்பட்ட புயல்களிலேயே பெரியது ஆகும். உலக வரலாற்றில் இதுதான் பெரிய புயலாக இருக்கும் என்று வானிலை மையங்கள் தெரிவிக்கிறது. 1989ல் ஏற்பட்ட ஹியூகோ புயல் மற்றும் 1984ல் ஏற்பட்ட டயானா புயலை விடவும் இது மோசமான புயல் ஆகும். கடந்த 50 வருடங்களில் உலகில் எங்கும் இப்படி புயல் வீசியது இல்லை என்கிறார்கள்.

எவ்வளவு வேகம்

வேகம் எவ்வளவு

இந்த ஃபுளோரன்ஸ் புயல் இப்போதே பல இடங்களில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறது. இது கரையை கடக்கும் போது 225 கிலோ மீட்டர் வேகத்தில் மணிக்கு வீசும் என்று கூறப்பட்டுள்ளது. இது 5 வது ரக புயல் ஆகும். இதுதான் மிகவும் மோசமான ரகம் என்று கூறப்பட்டுள்ளது. சமயங்களில் இதன் வேகம் மணிக்கு 250 கிலோ மீட்டர் கூட ஆக வாய்ப்புள்ளது.

எங்கு

எங்கு எல்லாம் வரும்

இந்த ஃபுளோரன்ஸ் புயல் வடக்கு கரோலினை தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு 5வது ரக புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புயல் விர்ஜினியா, மேரிலேண்ட், வாஷிங்டன் டிசி, தெற்கு மற்றும் வடக்கு கரோலினா ஆகிய பகுதிகளை மோசமாக தாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அங்கு எல்லாம் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை

மழை வெள்ளம்

இதனால் ஃபுளோரன்ஸ் புயல் மட்டும் இல்லாமல் மழையும் அதிக அளவில் பெய்ய உள்ளது. சுமார் 64ல் இருந்து 80 செமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் திடீர் என்று ஏற்படும் மேக வெடிப்பு மற்றும் தீவிர மழை காரணமாக வெள்ளம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. விர்ஜினியா, மேரிலேண்ட், வாஷிங்டன் டிசி, தெற்கு மற்றும் வடக்கு கரோலினாவை சுற்றியுள்ள கடல்களில் எல்லாம் சுனாமிக்கு நிகரான அலை அடிக்கும், அத்தனை உயரத்தில் அலை அடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வெளியேற்றம்

மக்கள் வெளியேற்றம்

இதனால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 15 லட்சம் பேர் ஃபுளோரன்ஸ் புயல் காரணமாக விர்ஜினியா, மேரிலேண்ட், வாஷிங்டன் டிசி, தெற்கு மற்றும் வடக்கு கரோலினா பகுதிகளில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். இன்னும் தொடர்ச்சியாக மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அங்கு செல்லும் சாலைகள் அனைத்தும் வெளியே செல்லும் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது.

எப்படி

எப்படி இருக்கிறது

இந்த புயல் குறித்து நாசா நிறைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதேபோல் வானிலை ஆராய்ச்சி மையங்கள் இந்த காற்று எப்படி செல்லும் என்றும் கூறியுள்ளது. இது பார்க்கவே பதற வைக்கும் வகையில் உள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Florence Hurricane: USA gonna face its worst Hurricane ever in the history.