10 நிமிடம் லேட் ஆகியிருந்தாலும் க்ளோஸ்.. ஃப்ளைதுபாய் விமானத்தை சுட்டு வீழ்த்த ரெடியாக இருந்த இஸ்ரேல்

  • டெல் அவிவ்: ஃப்ளைதுபாய் காக்பிட்டில் நடந்த தாக்குதலுக்கு பிறகு, விமானம் தொடர்ந்து டெல் அவிவ் நோக்கி சென்றிருந்தால் அதை வானிலேயே சுட்டு வீழ்த்தவும் கூட இஸ்ரேல் தயாராக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் திடீரென உயரம் இழந்ததோடு காக்பிட் தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் இஸ்ரேலை குறிவைத்த தாக்குதலாக இருக்கும் என சந்தேகித்த இஸ்ரேல் படைகள், விமானத்தை சுட்டு வீழ்த்தவும் ரெடியாக இருந்ததாக கூறப்படுகிறது.

    Advertisement

    கடந்த செப்டம்பர் 30ம் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி ஃப்ளைதுபாய் விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தின் துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, தலைமை விமானி ஸ்மிட் மச்சார் மீது தாக்குதல் நடத்தி, விமானத்தை விபத்திக்குள்ளாக்க முயன்றார். இதனால் நடுவானில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு வழியாக பைலட் ஸ்மித் மச்சார் மற்றும் பயணிகள் சிலர் இணைந்து அந்த துணை விமானியை கட்டுப்படுத்தினர்.

    Advertisement

    என்ன நடந்தது!

    இதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேநேரம் இந்த தாக்குதல் நடந்த போது விமானம் வெறும் 30 விநாடிகளில் சுமார் 16,000 அடி உயரம் வரை சரிந்தது. அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் விமானம் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற எமர்ஜென்சி சிக்னலும் அந்த விமானத்தில் இருந்து வந்தது. மேலும், விமானத்தின் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இஸ்ரேலுக்கு ஏற்பட்டது.

    அப்போது அந்த விமானத்தை நடுவானில் சுட்டு வீழ்த்தக்கூட இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவின் சிபிஎஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது அப்போது விமானிகளை தொடர்புகொள்ள முயன்றதாக இஸ்ரேல் விமானப்படை முயன்றதாகவும் ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து திட்டமிடப்பட்டிருந்த அவசரக்கால நடவடிக்கை முறை செயல்படுத்தப்பட்டது.

    Advertisement
    ப்ளைதுபாய் விமானத்தை காப்பாற்றிய கொசு.. பைலட் ஸ்மித் "மச்சார்" பெயரின் சுவாரஸிய பின்னணி

    போர் விமானங்கள்

    விமானத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டதுடன், இஸ்ரேல் வான்வெளியும் மூடப்பட்டது. போர் விமானங்களும் உடனடியாக புறப்பட்டன. சில நிமிடங்களில் அந்த பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த ரெடியாக இருந்தது. அப்போது தான் விமானம் தனது பாதையை மாற்றி சவுதி அரேபியாவை நோக்கி செல்வது தெரியவந்தது. மேலும், விமானம் அவசரமாக தரையிறங்குவதற்காக அது சவுதி அரேபியாவின் தபுக் நோக்கி செல்வதும் உறுதி செய்யப்பட்டதால், இஸ்ரேல் போர் விமானங்கள் திரும்ப அழைக்கப்பட்டதாக சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. இதற்கு நடுவே சவுதி அரேபியாவும் தனது போர் விமானங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

    Advertisement

    என்ன நடந்திருக்கும்!

    விமானம் தொடர்ந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி சென்றிருந்தால், இஸ்ரேல் போர் விமானிகள் முதலில் அதனை அணுகி இருப்பார்கள். பயணிகள் விமானத்திற்கு மிக அருகே பறந்து, காக்பிட்டில் என்ன நடக்கிறது என்பதை நேரடியாக கண்காணித்திருப்பார்கள். விமானம் உண்மையில் கடத்தப்பட்டதா என்பது இதன் மூலம் தெளிவாக தெரிய வந்திருக்கும்.

    விமானத்தை மோத வைக்கும் திட்டம் தோல்வி! நடுவானில் முடிவை மாற்றிய ஓமன் துணை விமானி.. வெளிவந்த ஷாக்

    கடத்தல் உறுதி செய்யப்பட்டு, காக்பிட்டில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றால், இந்த விவகாரம் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் பிரதமரின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். இறுதியாக விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிடும் அதிகாரம் பிரதமரிடமே இருந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து வந்திருந்தால், டெல் அவிவை அடைவதற்கு முன்பே அதை இடைமறித்து அழிக்க இஸ்ரேல் ரெடியாகவே இருந்துள்ளது.

    Advertisement

    ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்

    இஸ்ரேல் இதையெல்லாம் செய்து கொண்டிருக்க.. நடுவானில் சினிமாவை மிஞ்சும் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன. துணை விமானியின் தாக்குதலில் படுகாயமடைந்த தலைமை விமானி ஸ்மிட் மச்சார், தனது கடைசி சக்தியை பயன்படுத்தி காக்பிட் கதவை திறந்திருக்கிறார். இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் தலையிட்டு துணை பைலட் ஹமாம் அல்-ஹம்மாமியை கட்டுப்படுத்தினர். விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஓய்வில் இருந்த 2 விமானிகளும் பின்னர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.

    English Summary

    After an attack inside a Flydubai cockpit caused the aircraft to lose altitude and lose communication(ப்ளைதுபாய் தாக்குதலில் நடந்த துயரம்): Flydubai Cockpit Attack latest news in tamil.