பிரான்சில் மீண்டும் வன்முறை.. போராட்டக்காரர்களை விரட்டியடித்த போலீசார்! கண்ணீர் புகை குண்டு வீச்சு

  • பாரிஸ்: பிரான்ஸில் கடந்த சில வாரங்களாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் நேற்று தலைநகர் பாரிசை நோக்கி 1.10 லட்சம் பேர் பேரணியாக வந்தனர். பாரிசை நெருங்கிய போது, போராட்டக்கார்கள் - போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டது. நிலமை மோசம் அடையாமல் இருக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்கார்களை போலீசார் விரட்டியடித்தனர்.

    Advertisement

    விலைவாசி உயர்வு, பள்ளி நிதி பற்றாக்குறை உள்ளிட்டவற்றிற்கு எதிராக பிரான்சில் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக இதனால், பிரான்சில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    Advertisement

    1.10 லட்சம் பேர் பேரணி

    போராட்டத்தை ஒடுக்க பிரான்ஸ் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் போராட்டம் நாளுக்குள் நாள் தீவிரம் அடைந்து வருவது பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு பெரும் தலைவலியை கொடுத்து வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசை நோக்கி சனிக்கிழமை சுமார் 1.10 லட்சம் பேர் பேரணியாக வந்தனர்.

    இந்தியா முதல் பிரான்ஸ் வரை.. 13 நாடுகளில் 101 டீம்கள்! சர்வதேச போராட்டங்களை ஒருங்கிணைக்க நெட்வொர்க்?

    அவர்களை போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விரட்டியடித்தனர். கடந்த வாரம் ஏற்பட்டதை போல வன்முறை வெடிக்காமல் இருக்க பிரான்ஸ் போலீசார் 70 ஆயிரம் பேர் தலைநகரில் குவிக்கப்பட்டனர். போலீசார் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    Advertisement

    பாதுகாப்பு படையினர் குவிப்பு

    ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. பாரிஸில் உள்ள முக்கிய அருங்காட்சியகங்கள், கலாசார மையங்கள் மற்றும் கடைகள் தலைநகரில் மூடப்பட்டன. கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி பிரான்சில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பொது சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.

    பற்றி எரியும் பிரான்ஸ்.. வன்முறையில் இறங்கிய 5 லட்சம் பேர்.. என்ன தான் பிரச்சனை?

    பல இடங்களில் கொள்ளை சம்பவமும் நடபெற்றது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றைய போராட்டத்திற்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை நடைபெற்ற போராட்டம் தொடர்பாக 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் சிறுவர்கள் ஆவர்.

    Advertisement

    இமானுவேல் மேக்ரானுக்கு நெருக்கடி

    நேற்று நடைபெற்ற போராட்டம் துவக்கத்தில் அமைதியாக நடைபெற்றாலும் பேரணியின் இறுதிக்கட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. கற்களை வீசியும் மற்றும் பட்டாசுகளை கொளுத்தியும் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அதிரடிப்படை போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் அதிநவீன வாகனங்களை பயன்படுத்தி பதிலடி தாக்குதல் நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

    Students Protest LIVE: டெல்லியில் மீண்டும் மோதல்; கண்ணீர் புகை குண்டு வீச்சு – இண்டர்நெட் துண்டிப்பு

    பிரான்சில் வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு போராட்டம் வலுத்து வருவது அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    France: As protests in France have intensified over the past few weeks, 110,000 people marched toward the capital, Paris, on Saturday. Clashes broke out between the protesters and the police as they neared the city. To prevent the situation from escalating further, the police dispersed the protesters by firing tear gas and using water cannons.