பக்கூ: அர்ஜர்பைஜான் நாட்டின் மக்கள் தொகையில் 96% இஸ்லாமியர்கள் இருக்கின்றனர். ஆனாலும் மதச்சார்பற்ற நடைமுறைக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், பள்ளிகளில் ஹிஜாப் உள்ளிட்ட மதச்சார்பு கொண்ட ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அர்ஜர்பைஜான் அரசு, தனது பொதுக் கல்வி முறையின் மதச்சார்பற்ற தன்மையை வலுப்படுத்துவதற்காக கடந்த ஜூலை மாதம் பொதுக் கல்வி சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது.
இதன் தொடர்ச்சியாக செப்.21 அன்று அமைச்சரவை நிறைவேற்றி தீர்மானம் எண் 309ன் படி பள்ளி சீருடை விதிகளுக்கு மாறான மற்றும் மதச்சார்பற்ற கல்விக்கு எதிரான கூடுதல் ஆடைகளை மாணவர்கள் அணியத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விதிகளில் ஹிஜாப் என்ற வார்த்தை நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த புதிய சீருடை விதிமுறைகளின் மூலம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர மறைமுகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் மேலோட்டமாக பார்த்தால் ஓகே போலத்தான் தோன்றும். ஆனால், அந்நாட்டில் 96% மக்கள் இஸ்லாமியராக இருக்கிறார்கள். எனவே இந்த சட்டம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. 96% இஸ்லாமியர்களில் 65% பேர் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். 35% சன்னி பிரிவை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 4% மக்கள் கிறிஸ்தவர்கள், யூதர்கள்,பஹாய்கள் மற்றும் பிற மத சமூகங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே இந்த புதிய சட்டத்தை எதிர்த்து மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியிருக்கின்றனர். ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாததைத் தொடர்ந்து பல இடங்களில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிஜாப் அணியும் மாணவிகளை மீண்டும் பள்ளியில் அனுமதிக்க கோரி சக மாணவர்கள் போராடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அஜர்பைஜானுக்கு பக்கத்தில் ஈரான் உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகள் பழமைவாத சிந்தனை கொண்ட நாடுகளாகும். ஆனால், அஜர்பைஜான் அப்படி கிடையாது. அஜர்பைஜான் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் 18ன் படி, அஜர்பைஜான் மதச்சார்பற்ற அரசு ஆகும். அரசுக்கும் மதத்திற்கும் தொடர்பு கிடையாது. எனவே அரசு நடத்தும் பள்ளிகளில் மத அடையாளத்துடன் கூடிய ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதன் மூலம் பக்கத்து நாடுகளில் இருந்து பழமைவாத சிந்தனை இங்கும் பரவிவிடக்கூடாது என்பதில் அஜர்பைஜான் அரசு உறுதியாக இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்தியாவும் மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு நாடு என்பதுதான்.அரசின் நோக்கம் இதுதான்