மெக்கா, மதீனாவில் விழுந்த ஏவுகணை சிதைவுகள்.. ஹவுதிக்கள் கடும் தாக்குதல்! சவுதியில் எகிறும் டென்ஷன்

  • ரியாத்: சவுதி அரேபியாவை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சிக்குழு மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹவுதிக்கள் ஏவுகணைகளை ஏவிய நிலையில், அவற்றை நடு வானிலேயே சவுதியின் வான் தடுப்பு அமைப்புகள் தாக்கி அழித்தன. எனினும் விமானத்தின் சிதைவுகள் மெக்கா மற்றும் மதினா ஆகிய நகரங்களை நோக்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    சவுதியை குறி வைத்து தாக்குதலை ஹவுதிக்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்களும் சவுதி அரேபியா செல்லும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

    Advertisement

    ஏமனில் உள்நாட்டு போர் தீவிரம்

    ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ளது. ஏமன் அரசு படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சி குழுவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. ஏமன் நாட்டில் நடக்கும் இந்த உள்நாட்டு போரில் அரசு படைக்கு ஆதரவாக சவுதி அரேபியா உள்ளது. ஏமன் அரசு படைக்கு ஆயுத உதவி , நிதி உதவிகளை செய்து வருவதால், சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சிக்குழு கடும் கோபத்தில் உள்ளது.

    மெக்கா மதீனாவிற்கு ஹவுதிஸ் குறி? முதல்முறையாக வான்வழி தாக்குதல் வார்னிங்! சவுதியில் பதற்றம்
    Advertisement

    ஹவுதிகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. ஏமனில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சவுதி அரேபியா மீதும் ஹவுதி கிளர்ச்சிக்குழு தாக்குதல் நடத்தி வருகிறது. சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டதால், சவுதியில் உள்ள நகரங்களுக்கு இயக்குவதை இந்திய விமான நிறுவனங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சவுதி மீது மீண்டும் தாக்குதல்

    இப்படியாக மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், சவுதி அரேபியாவை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சிக்குழு மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹவுதிக்கள் ஏவுகணைகளை ஏவிய நிலையில், அவற்றை நடு வானிலேயே சவுதியின் வான் தடுப்பு அமைப்புகள் தாக்கி அழித்தன. எனினும் விமானத்தின் சிதைவுகள் மெக்கா மற்றும் மதினா ஆகிய நகரங்களை நோக்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement
    கண் பார்வையை பறிக்கும் ஒளி! அதிகாலையில் சவுதியில் விழுந்த ஏவுகணைகள்.. ஹவுதி வெறியாட்டம்

    இது தவிர, சவுதி அரேபியாவில் உள்ள எண்ணய் கட்டமைப்புகள் மற்றும் விமான நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஹவுதிக்கள் கூறியுள்ளனர். யான்பு பகுதியில் உள்ள சவுதி அராம்கோ எண்ணெய் உற்பத்தி நிலையம், ராபிக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ரியாத், தம்மாம் மற்றும் நஜ்ரான் விமான நிலையங்கள், கமீஸ் முஷைத் பகுதியில் உள்ள விமானப்படைத் தளம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதிக்கள் கூறிய நிலையில், சவுதி அரேபிய அதிகாரிகள் இதனை உறுதி செய்யவில்லை.

    Advertisement

    இந்தியர்கள் விழிப்புடன் இருக்குமாறு

    சவுதியை குறிவைத்து தாக்குதலை ஹவுதிக்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்களும் சவுதி அரேபியா செல்லும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

    மெக்கா மசூதியை தகர்க்கும் பயங்கர சதி முறியடிப்பு.. தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறல்!

    ரியாத், தம்மாம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்களை ஹவுதி கிளர்ச்சிக்குழு தாக்கியதால் அந்த நாட்டில் விமான போகுவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் தலைநகரான சானாவில் சவுதி அரேபியா நடத்திய வான் வழி தாக்குதலில் 16 பேர் கொல்லப்படனர். இதன் தொடர்ச்சியாகவே சவுதியில் எண்ணைய் அமைப்புகள் விமான நிலையங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சிக்குழுவினர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    English Summary

    Houthis rebel group has launched another attack targeting Saudi Arabia. The Houthis fired missiles, which were intercepted and destroyed in mid-air by Saudi air defense systems. However, reports indicate that debris from the projectiles fell toward the cities of Mecca and Medina.