பாகிஸ்தான் உள்ளே வந்தால்.. காலை வெட்டுவோம்! பகிரங்க எச்சரிக்கை கொடுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

  • சனா: ஏமனிலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதியை தாக்கி வருகின்றனர். இதற்கிடையில் சவுதிக்கு ஆதரவாக வருகிறோம் என்று பாகிஸ்தான் உள்ளே நுழைந்தால்.. மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இது பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    ஏமன்.. குட்டி நாடுதான். ஆனால் போர்களுக்கும், உள்நாட்டு குழப்பங்களுக்கும் பெயர் பெற்றது. இங்கு கடந்த 2014ம் ஆண்டு சவுதி ஆதரவு பெற்ற ஆட்சியை, ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் வீழ்த்தின. அப்போது முதல் ஈரான் ஆதரவு படைகளுக்கும், சவுதி ஆதரவு படைகளுக்கும் இடையே ஏமனில் சண்டை நடந்து வருகிறது.

    Advertisement

    இந்த சண்டையின் ஒரு பகுதியாகத்தான்.. தற்போது சவுதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த தொடங்கியிருக்கின்றன. இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அதாவது சவுதி மீது தாக்குதல் நடத்தினால்.. சப்போர்ட்டுக்கு பாகிஸ்தானும், துருக்கியும் வரணும். கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி போடப்பட்ட 'மெக்கா' ஒப்பந்தத்தில் இப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஒப்பந்தம் போட்டா.. சொன்ன வாக்கை காப்பாத்தணும் இல்லையா? ஆனால், பாகிஸ்தான் காப்பாற்றவில்லை.

    ஒரு நாலு நாளைக்கு முன்னாடி புனித தலமான மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ராக்கெட்டை ஏவியிருந்தனர். இந்த தாக்குதலை சவுதி தடுத்துவிட்டது. ஆனால், ஒப்பந்தத்தில் சொன்னது மாதிரி.. பாகிஸ்தானும், துருக்கியும் இந்நேரம் ஹவுதிக்கு எதிராக இறங்கியிருக்கனும். இன்னைக்கு வரைக்கும் அப்படி எதுவும் நடக்கல. இந்த விஷயத்தில், ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. அதாவது பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் போடுவதும்.. கடைசி பந்தியில் பாயாசத்துக்கு வெயிட் பண்ணுவதும் ஒன்னுதான். ஏனெனில் ரெண்டும் பலன் தராது.

    Advertisement

    நிலைமை இப்படி இருக்கையில், ஹவுதி ஒருபடி மேலே போய் பாகிஸ்தானுக்கு பகிரங்க வார்னிங் கொடுத்திருக்கிறது. சவுதிக்கு ஆதரவாக பாகிஸ்தானோ, துருக்கியோ தங்கள் படைகளை ஏமனில் நிறுத்தினால்.. அல்லது ராணுவ ரீதியாக தலையிட்டால், அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு கடுமையான ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி மூத்த அதிகாரி முகமது அல்-புகைதி எச்சரித்துள்ளார்.

    மேற்கத்திய நாடுகளின் கப்பல்கள் மற்றும் பிற டார்கெட் மீது ஹவுதி நடத்திய அட்டாக் குறித்து பேசிய அவர், எல்லைக்குள் நுழைந்தால் காலை வெட்டுவோம் என்று வார்னிங் கொடுத்திருக்கிறார். இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை.

    Advertisement

    ஏற்கெனவே அசிங்கப்பட்டு நிற்கும் பாகிஸ்தான், தற்போது ஹவுதி கிளர்ச்சியார்களால் ரொம்பவும் அவமானத்தை சந்தித்திருக்கிறது. ஏமன் மக்களின் நிலை குறித்து பாகிஸ்தான் மக்களும், துருக்கி மக்களும் கவலை கொள்கின்றனர். எனவே இந்த விஷயத்தில் இரு நாடுகளும் நடுநிலை வகிக்க வேண்டும். எங்களுக்கு இந்த ரெண்டு நாடுகளிடமும் நேரடியாக பகை இல்லை. ஆனால், எல்லை விஷயம் என்று வந்துவிட்டால்.. கருப்பு விடாது பாத்துக்கோங்க என்று ஹவுதி தலைவர் காட்டமாக பேசியிருக்கிறார். இந்த விஷயத்தில் பாகிஸ்தான் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    Houthis warn Pakistan: Houthi rebels from Yemen have been attacking Saudi Arabia. Meanwhile, the rebels have warned that if Pakistan intervenes in support of Saudi Arabia, it will face severe consequences. This has dealt a major setback to Pakistan.