இன்பன் உதயநிதி பட்டம் பெற்ற இங்கிலாந்து கல்லூரி எதற்கு பேமஸ்.. படிக்க எவ்வளவு செலவாகும்?

  • லண்டன்: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேரனும், திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி, இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் நகரில் அமைந்துள்ள லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றுள்ளார். தனது பேரனின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே திமுக தலைவர் இங்கிலாந்து சென்றுள்ளார். அந்த இன்பன் உதயநிதி படித்து பட்டம் பெற்றுள்ள லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை உலகின் பல்வேறு நாட்டு மாணவர்கள் விரும்பி வந்து படிக்கும் இடமாக உள்ளது. அங்கு கல்வி கட்டணம் மற்றும் வசதிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

    Advertisement

    இன்பன் உதயநிதி ஸ்டாலின் இங்கிலாந்தில் படிக்கும் லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகம் என்பது, இங்கிலாந்திலேயே விளையாட்டுத் துறை சார்ந்த படிப்புகளுக்கு பெயர் பெற்றது. இந்த பல்கலைக்கழகம் 'கார்னகி ஸ்கூல் ஆஃப் ஸ்போர்ட்' உலகப் புகழ் பெற்றது என்கிறார்கள் கல்வியாளர்கள். அதேபோல் விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மேலாண்மை படிப்புகளில் உலக அளவில் டாப் ரேங்கிங்கில் இருக்கும் கல்லூரியாகும்.

    Advertisement

    வேலைவாய்ப்பு

    அதேபோல் கல்வியாளர்கள் பகிரும் இன்னொரு முக்கியமான விஷயம் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்டது. லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களில் 94% பேருக்குப் படிப்பை முடித்த உடனேயே வேலை கிடைக்கிறது. அதேபோல் உயர்கல்வி வாய்ப்பும் கிடைத்துகிறது என்று கல்வியாளர்கள் புகழ்கிறார்கள்.

    கல்வி முறை எப்படி இருக்கும் தெரியுமா

    லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை பாடத்திட்டங்கள் அனைத்தும் வெறும் தியரியாக இருக்காது.. மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கல்வி முறைக்கு அங்கு வேலையே இல்லை, முழுக்க முழுக்கத் தொழில்துறைக்குத் தேவையான நேரடிப் பயிற்சியாகவே கல்வி வடிமைக்கப்பட்டுள்ளது. இங்கு படிக்கும் மாணவன், படித்து முடித்த உடன் தேவையான தொழில்முறை திறனை முழுமையாக பெற்று சிறந்து விளங்குவார் என்கிறார்கள் கல்வியாளர்கள். அதாவது ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணர்ந்து அதற்கு அப்படியே மாற்றமாக கல்வி முறை லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகம் மாற்றி உள்ளது.

    Advertisement

    லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் டாப் கோர்ஸ்கள்

    பிசினஸ் & மேலாண்மை (MBA & Business Management)

    தரவு அறிவியல் & கணினி அறிவியல் (Data Science & Computing)

    கலை மற்றும் ஊடகத் துறை (Art, Design & Media Studies)

    தி கார்டியன் தரவரிசையின்படி லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் மீடியா மற்றும் ஃபிலிம் ஸ்டடீஸ் படிப்புகள் இங்கிலாந்தில் தரவரிசையில் சிறப்பான இடத்தில் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகம் உலகத்தரம் வாய்ந்தது. இங்குள்ள ஆய்வக வசதி சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய விரும்பும் இடமாக இருக்கும். குறிப்பாக 'லீட்ஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்' கட்டிடம் உலகப்புகழ் பெற்றது.

    Advertisement

    கல்வி கட்டணம்

    அதேபோல் லண்டனை ஒப்பிடும் போது, இங்கிலாந்தின் லீட்ஸ் நகரம் மாணவர்களுக்கான வாழ்க்கைச் செலவு குறைவு தான். பாதுகாப்பான நகரமும் கூட. இங்கு படிக்க விரும்பினால், தாராளமாக யார் வேண்டுமானாலும் கல்வி தகுதி மற்றும் கல்வி கட்டணம் செலுத்தக்கூடிய தகுதி இருந்தால் படிக்கலாம். கல்வி கட்டண விவரங்களை பார்க்கலாம்.

    இளங்கலை படிப்புகளில் பெரும்பாலான படிப்புகளுக்கு ஆண்டிற்கு தோராயமாக ₹21 லட்சம் வரை) இருக்கும். முதுகலை படிப்புகளுக்கு பெரும்பாலான படிப்புகளுக்கு (MSc, MA) ஆண்டிற்கு தோராயமாக 23 லட்சம் வரை இருக்கும் எம்பிஏ (MBA - 20 மாதங்கள்) படிப்புக்கு ஒட்டுமொத்தக் கட்டணம் 25 லட்சம் இருக்கும்.

    Advertisement

    2 கோடி வேண்டும்

    ஆனால் வாழ்க்கை செலவுகள் தனியாக இருக்கும். அதாவது அன்றாட செலவுகள் அங்கு தனியாக இருக்கும். அதற்கு மாதம் செலவுக்கு 1.60 லட்சம் தேவைப்படும். மொத்தமாக ஒரு ஐந்து வருடம் படித்து முடிக்க தோராயமாக வாழ்க்கை செலவு மட்டும் 96 லட்சம் தேவைப்படும். அதேபோல் கல்வி கட்டணம் மட்டும் ஐந்து வருடத்திற்கு ஒரு கோடி அளவிற்கு வரும். ஒருவர் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து சென்று உதயநிதி படித்த கல்லூரியில் படித்து முடிக்க ஒட்டுமொத்தமாக 2 கோடி ரூபாய் அளவிற்கு செலவாகும். அவர்களின் விமான கட்டணம், மற்ற தனிப்பட்ட செலவுகள் எல்லாம் சேர்த்தால் இன்னும் கூடுதலாக வரும்.

    English Summary

    United Kingdom : Leeds Beckett University, where Inban Udhayanidhi ( son of Udhayanidhi stalin) completed his studies, is a popular destination for students from around the world. In this post, we will look at the tuition fees and facilities offered there.