பாக்சரை தூக்கி வீசி புரட்டி எடுத்த ரோபோ.. மனிதனுடன் சண்டையிட்ட டெர்மினேட்டர்.. திகிலூட்டும் வீடியோ

  • சான் பிரான்சிஸ்கோ: மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையே சண்டை நடந்தால் எப்படி இருக்கும்? இப்படியொரு கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வித்தியாசமான ஒரு போட்டி நடத்தப்பட்டுள்ளது. சுமார் 6 அடி உயரம் கொண்ட மனித உருவிலான ரோபோவுக்கும், பாக்சர் ஒருவருக்கும் இடையே நடந்த இந்த சண்டை தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    Advertisement

    சமீப காலமாகவே ரோபோ மற்றும் ஏஐ தொடர்பான ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் தீவிரமாக நடந்து வருகிறது. மனித வடிவிலான ரோபோவை உருவாக்கி, அதன் மூலம் வேலைகளை செய்வது, போர்களில் அவற்றை பயன்படுத்துவது என பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், ரோபோக்களை வைத்து சில வினோதமான சம்பவங்களும் நடந்து வருகிறது.

    Advertisement

    பாக்சிங்

    அப்படியொரு வினோதமான சம்பவம் தான் இப்போதும் நடந்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 6 அடி உயரம் கொண்ட மனித உருவிலான ரோபோவுக்கும், பாக்சர் ஒருவருக்கும் இடையே நடந்த இந்த சண்டை நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    அமெரிக்காவை சேர்ந்த ரோபோடிக்ஸ் நிறுவனமான REK சார்பில் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த ரோபோ தானாக முடிவெடுக்காது. இதை ரிமோட் மூலம் தொலைவில் இருந்து மனிதர்களையே இயக்கியுள்ளனர். ஒருவருக்கொருவர் போட்டியிடும் வகையிலான விர்ச்சுவல் ரியாலிட்டி காம்பாட் கேமை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த போட்டி நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    என்ன நடந்தது!

    இந்த சண்டையில் இன்ஃப்ளூயன்சரும் கண்டென்ட் கிரியேட்டருமான பிராங்கி லாபென்னா பங்கேற்றார். அவருக்கு எதிராக தான் மனித உருவிலான ரோபோ களமிறக்கப்பட்டது. சண்டை தொடங்குவதற்கு முன்பு அந்த ரோபோ, ரிங் முழுவதும் நடந்து சென்று வார்ம்-அப் செய்வது போல எல்லாம் பில்டப் கொடுத்துள்ளது. பின்னர் போட்டி தொடங்கியதும் லாபென்னா ரோபோவை நோக்கி பல குத்துகளை விட்டார்

    அதற்கு ரோபோவும் பதிலடி கொடுத்தது. குத்துகள், சக்திவாய்ந்த உதைகள் என ரோபோவும் அடி வெளுத்து வாங்கியுள்ளது. குறிப்பாக, சில தருணங்களில் ரோபோவின் உதைகள் லாபென்னாவை ரிங்கின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தூக்கி வீசுவது போல இருந்தது. இதன் மூலம் அந்த ரோபோ எவ்வளவு வேகமாக நகர்ந்து தாக்க முடியும் என்பது தெளிவாக தெரிகிறது.

    Advertisement

    முதல் சண்டை

    உண்மையான பாக்சருக்கும் ரோபோவுக்கும் இடையே நடக்கும் முதல் சண்டையாக இது இருக்கிறது. மேலும், இந்த போட்டி தொடர்பான கூடுதல் வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது. இந்த வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த REK, "பாக்சர் VS டெர்மினெட்டர் ரோபோ இடையேயான முதல் போட்டி. இதன் மூலம் வரலாறு படைத்துவிட்டோம்" என பதிவிட்டார்.

    இதையடுத்து இந்த வித்தியாசமான சண்டை சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எதிர்காலத்தில் மனிதர்களால் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் ரோபோக்கள் குத்துச்சண்டை அல்லது எம்எம்ஏ போன்ற போட்டிகளில் இடம்பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக நெட்டிசன்களும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    Advertisement

    நெட்டிசன்கள்

    நெட்டிசன் ஒருவர், "ஒரு உண்மையான பாக்சர் இதற்கு எதிராக எப்படி செயல்படுவார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறது. ஒரு தொழில்முறை வீரர் இதைவிட சிறப்பாக செயல்படுவார் என நினைக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "இன்னும் 5 ஆண்டுகளில் ரோபோக்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான சண்டைகள் UFCயின் ஒரு பகுதியாக இருக்கலாம்" என பதிவிட்டுள்ளார்.

    மனித உருவ ரோபோவின் ஆக்ரோஷத்தை டெர்மினேட்டர் படத்துடன் ஒப்பிடப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஒரு வீடியோவில், எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் இருந்த மனித உருவ ரோபோவை வாடிக்கையாளர் ஒருவர் தள்ளியதாக கூறப்பட்டது. அதன்பிறகு அந்த ரோபோ அந்த நபரை நோக்கி நகர்ந்து, உதைக்க முயன்றது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஊழியர்கள் உடனடியாக தலையிட்டு ரோபோவை அணைத்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Six-foot humanoid robot fought a boxer in a unique match held in San Francisco(மனிதருக்கும் ரோபோவுக்கும் இடையே நடந்த மோதல்): Human vs Humanoid Robot Boxing latest news in tamil.