ஈரான் மிரட்டல்.. இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு..கதிகலங்கி நிற்கும் அமெரிக்க நிறுவனங்கள்!

  • ஈரான் ஹார்முஸ்-ஐ கைப்பற்றியது மூலம் கச்சா எண்ணெய் சந்தையை மொத்தமாக முடக்கியிருக்கும் வேளையில் அடுத்த நெருக்கடியை உலக நாடுகளுக்கு கொடுக்க தயாராகியுள்ளது. கச்சா எண்ணெய்-க்கு எப்படி ஹார்முஸ் முக்கிய வழித்தடமாக இருக்கிறதோ, அதேபோல் இண்டர்நெட் இணைப்பும், தினசரி பல்லாயிரம் கோடி நிதி பரிமாற்றம், ஈகாமர்ஸ், டிஜிட்டல் சேவைக்கும் ஹார்முஸ் முக்கிய வழித்தடமாக உள்ளது.

    Advertisement

    உலக இணைய போக்குவரத்தின் மிக முக்கியமான பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கடல் அடியில் பதிக்கப்பட்ட இணைய கேபிள்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது ஈரான். இந்தக் கேபிள்கள் சாதாரண கம்பிகள் அல்ல. இவை கடல் அடியில் ஆழமாக பதிக்கப்பட்ட பைபர் ஆப்டிக் கேபிள்கள். இந்தக் கேபிள்கள் வழியாகத்தான் உலகம் முழுவதும் இணையப் போக்குவரத்து நடைபெறுகிறது.

    Advertisement

    வாட்ஸ்ஆப் மெசேஜ் பரிமாற்றத்தில் துவங்கி கூகுள் சர்ச், ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகள், யுபிஐ பணப் பரிமாற்றங்கள், பங்குச் சந்தை வர்த்தகம், கிளவுட் சேவைகள், சர்வதேச வணிகத் தகவல்கள் என அனைத்தும் இந்தக் கேபிள்கள் வழியாகவே செல்கின்றன.

    ஈரானின் புதிய அறிவிப்பு

    ஈரான் ராணுவ பிரிவின் செய்திதொடர்பாளர் இப்ராஹிம் ஜோல்பகாரி (Ebrahim Zolfaghari) எக்ஸ் தளத்தில் செய்த பதிவின் படி " இனி ஹார்முஸ் வழியாக செய்யும் SUBSEA கேபிள்களுக்கு கட்டணம் விதிப்போம்" என்று அறிவித்தார். ஈரான் அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் இந்த எச்சரிக்கையை உலக நாடுகளின் இண்டர்நெட் நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளது.

    Advertisement

    மேலும் ஈரான் தரப்பில் கூறுகையில் "இந்த கட்டணத்திற்கு ஈரானுடன் ஒத்துழைக்க மறுத்தால் வளைகுடா பிராந்திய இணைய தடைகள் ஏற்படும். இதனால் இணைய சேவைகள் பாதிக்கப்படும். ஆன்லைன் வணிகம் தடைபடும். பணப் பரிமாற்றங்கள் நின்று போகும்" என்றும் தெரிவித்துள்ளன.

    "எங்கள் நீர்ப் பகுதி வழியாக இணைய கேபிள்கள் சென்றால் கட்டணம் செலுத்த வேண்டும். எங்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும்." மேலும், அந்தப் பகுதியில் கேபிள்களை பழுது பார்க்கும் மற்றும் பராமரிக்கும் உரிமையை இனி ஈரானிய நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு

    இந்த விவகாரம் கச்சா எண்ணெய் தாண்டி மிகவும் முக்கியமானது என்பதற்கு முக்கிய காரணம் உள்ளது. இந்தியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளை ஐரோப்பாவுடன் இணைக்கும் பல முக்கிய இண்டர்நெட் கேபிள்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் செல்கின்றன.

    Advertisement

    இதில் குறிப்பாக AAE-1, FALCON, Gulf Bridge போன்ற கேபிள்கள் ஒவ்வொரு வினாடியும் பல்லாயிரக்கணக்கான ஜிகாபைட் தகவல்களை எடுத்துச் செல்கின்றன. இந்தக் கேபிள்கள் சேதமடைந்தாலோ, தடைபட்டாலோ அல்லது போக்குவரத்து தடைபட்டாலோ பல நாடுகளில் இணைய வேகம் கணிசமாகக் குறையும். குறிப்பாக இந்தியாவுக்கான இண்டர்நெட் வர்த்தகமும், தகவல் பரிமாற்றமும் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    சாதாரண மக்களுக்கு என்ன பாதிப்பு?

    இன்றைய உலகம் இணையம் வாயிலாகவே இயங்கி வருகிறது. தினமும் காலையில் எழுந்து போனில் மெசேஜ், ஈமெயில் பார்ப்பதில் துவங்கி, அலுவலக படி, உணவு ஆர்டர், இரவு தூங்கும் போது டூம் ஸ்ரோலிங் வரையில் இண்டர்நெட் தான் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

    Advertisement

    இந்த நிலையில் ஈரான் SUBSEA இண்டர்நெட் கேபிள்களை துண்டித்தாலோ அல்லது இணைப்பை கட்டுப்படுத்தினாலோ இணைய வேகம் குறையும். வீடியோக்கள் தடைபடும். ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் தாமதமாகும். வங்கி பரிவர்த்தனைகள் சிக்கலாகும். கூகுள், அமேசான், மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்) உள்ளிட்ட செயலிகள், கிளவுட் சேவைகள், ஏஐ சேவைகள் என அனைத்தும் பாதிக்கப்படும். சர்வதேச இணையத்தை நம்பி வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும்.

    அமெரிக்க தடைகள் காரணமாக புதிய சிக்கல்

    இந்த விவகாரத்தில் மிகப் பெரிய சிக்கல் ஒன்று உள்ளது. பல உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை என்பதால் ஈரான் திட்டமிட்டு அமெரிக்கா நிறுவனங்களை பாதிக்கும் வகையில் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    Advertisement

    எனவே, கூகுள், அமேசான், மெட்டா போன்ற நிறுவனங்கள் ஈரான் கோரும் கட்டணத்தை செலுத்தினால் அமெரிக்க சட்டத்தை மீறும் நிலை ஏற்படும். கட்டணம் செலுத்தவில்லை என்றால் வர்த்தகம் பாதிக்கும். இதை எப்படி சமாளிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

    உலக இணையத்துக்கு பெரிய அபாயம்

    இணைய மற்றும் சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், பிரச்சினை வெறும் கட்டணம் மட்டும் அல்ல. ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்தால், திட்டமிட்டு கூட இந்தக் கடல் அடியில் உள்ள கேபிள்களை ஈரான் முடக்கும் அபாயம் உள்ளது. இதனால் பல நாடுகளில் இணைய சேவை முழுமையாக தடைபடும்.

    உலக இணைய போக்குவரத்தில் சுமார் 99 சதவீதம் கடல் அடியில் உள்ள இந்தக் கேபிள்கள் வழியாகவே செல்கிறது. எனவே, இந்தப் பகுதியில் ஏற்படும் சிறிய பிரச்சினையும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்களையும் வணிகங்களையும் பாதிக்கும்.

    English Summary

    Iran has declared it will impose fees on major undersea fibre-optic cables passing through the Strait of Hormuz and wants only Iranian companies to handle repairs and maintenance, raising serious concerns over global internet traffic control. ஈரான் ஹார்முஸ் நீரிணையில் செல்லும் கடலுக்கு அடியில் உள்ள இணையக் கேபிள்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.