இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35

  • மாஸ்கோ: சர்வதேச அளவில் போர் விமானங்களைப் பற்றி பேசும்போது, அமெரிக்காவின் F-35 மற்றும் ரஷ்யாவின் சுகோய்-57 (Su-57) ஆகிய விமானங்களை ஒப்பிட்டுதான் பேசப்படும். ஆனால் உண்மையில் அமெரிக்காவுக்கு தண்ணி காட்டுவது ரஷ்யாவின் மிக்-35 தான் என்று சர்வதேச வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட விமானத்தை இந்தியா தவறவிட்டிருக்கிறது.

    Advertisement

    ரஷ்யாவின் புகழ்பெற்ற 'மிக்-29' (MiG-29) போர் விமானத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியே இந்த மிக்-35. இது ஒரு 4++ தலைமுறை (4++ Generation) மல்டிரோல் போர் விமானமாகும். ரஷ்யா இதனை 5 தலைமுறை விமானங்களுக்கு இணையான தொழில்நுட்பம் கொண்டது என்று கூறினாலும், சர்வதேச வல்லுநர்கள் இதனை 4++ பிரிவிலேயே சேர்க்கின்றனர்.

    Advertisement

    F-35-க்கு சவாலாகக் கருதப்பட்டது ஏன்?

    அமெரிக்காவின் F-35 விமானத்திற்குப் போட்டியாக, குறைந்த செலவில் அதிக செயல்திறன் கொண்ட ஒரு விமானத்தை உருவாக்க ரஷ்யா திட்டமிட்டது. அதன் விளைவாக உருவானதே மிக்-35.

    எதிரி நாட்டு விமானங்களை வெகு தொலைவிலேயே கண்டறியும் அதிநவீன ரேடார் (AESA Radar) வசதி இதில் இருக்கிறது. மிக்-29-ஐ விட அதிக சக்தி வாய்ந்த RD-33MK என்ஜின்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இது புகையை மிகக் குறைவாகவே வெளியிடும்.

    அப்கிரேட் வெர்ஷன்

    அதேபோல வான் இலக்குகள் மட்டுமின்றி, தரை மற்றும் கடல் இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளை ஏந்தும் திறன் கொண்டது. இதை விட பெரிய பிளஸ் பாயிணிட் என்னவெனில், மற்ற நவீன போர் விமானங்களுடன் ஒப்பிடும்போது, இதன் பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு என்பதுதான்.

    Advertisement

    தவறவிட்ட இந்தியா

    இவ்வளவு சிறப்புகள் இருந்தும், மிக்-35 ஏன் உலக அரங்கில் ஜொலிக்கவில்லை என்பதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ரஷ்ய விமானப்படையே மிக்-35-ஐ விட சுகோய்-35 (Su-35) மற்றும் சுகோய்-57 (Su-57) ஆகிய விமானங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.

    எனவே, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த விமானத்தை வாங்க ஆர்வம் காட்டினாலும், இறுதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை. அதேபோல ரஷ்யா தனது பாதுகாப்பு நிதியை சுகோய் ரக விமானங்களின் மேம்பாட்டிற்கே அதிகம் செலவிட்டதால், மிக்-35 தயாரிப்பு வேகம் குறைந்தது.

    சிம்ம சொப்பனம்

    ஆனால் இப்போது, உக்ரைன் போரின் பின்னணியில் ரஷ்யா தனது வான்படையை வலுப்படுத்தி வரும் சூழலில், மிக்-35 மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த விமானங்கள் ரஷ்யப் படையில் உள்ளன.

    Advertisement

    ஆக.. அமெரிக்காவின் F-35-க்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மிக்-35, இன்று ரஷ்யாவின் 'மறக்கப்பட்ட ஒரு பொக்கிஷமாக' வரலாற்றில் தடம் பதித்துள்ளது.

    English Summary

    India: When discussing fighter jets on the global stage, the conversation usually centers on a comparison between America's F-35 and Russia's Sukhoi-57 (Su-57). However, international experts maintain that it is actually Russia's MiG-35 that poses a formidable challenge to the United States. India has missed out on acquiring such an aircraft.