இந்திய பொருட்கள் தான் வேண்டும்.. பாகிஸ்தானில் அதிகரித்த டிமாண்ட்.. தடைக்கு நடுவேயும் வர்த்தகம் 69% உயர்வு.. எப்படி?

  • இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடைக்கு நடுவேயும் கூட பாகிஸ்தான் தொடர்ந்து நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி தடைக்கு நடுவேயும் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 69 சதவீதம் வரை நம் நாட்டின் பொருட்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது.

    Advertisement

    நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை. குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 25 அப்பாவிகள் பலியாகினர்.

    Advertisement

    இந்த சம்பவத்தை தொடர்ந்து 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. 3 நாள் போரை தொடர்ந்து பாகிஸ்தான் நம்மிடம் பணிந்தது. இதையடுத்து 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை கைவிடப்பட்டது.

    இருப்பினும் மோதல் தொடர்ந்து வருகிறது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தால் பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அட்டாரி - வாகா எல்லை பகுதி மூடப்பட்டதோடு, பாகிஸ்தானியர்கள் நம் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதேபோல் பாகிஸ்தானுடனான அனைத்து வகையான வர்த்தகம் நிறுத்தப்பட்டது. மேலும் இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துவதாக பாகிஸ்தானும் அறிவித்தது.

    பாகிஸ்தானை எடுத்து கொண்டால் நம் நாட்டில் இருந்து அதிகளவில் மருந்துகள் செல்லும். பாகிஸ்தானியர்களின் உயிர்களை காப்பதில் நம் நாட்டின் மருந்துகள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதுதவிர பிளாஸ்டிக், பெட்ரோலியம், டை, ஆர்கானிக் கெமிக்கல்ஸ், ரப்பர், காபி, டீ, காய்கறிகள், உணவு தானியங்கள், நறுமண பொருட்கள், பால்பொருட்கள் உள்ளிட்டவை அதிகமாக செல்லும். இதனால் இந்த பொருட்களின் ஏற்றுமதி தடைப்பட்டது.

    Advertisement

    ஆனால் தற்போது ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. வர்த்தக தடையால் பாகிஸ்தானில் இருந்து நம் நாட்டிற்கு எந்த பொருட்களும் ஏற்றுமதியாகவில்லை. அதேவேளையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம் தடை செய்யப்பட்டு இருந்தாலும் கூட நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் அதிகளவில் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது.

    அதன்படி நடப்பு நிதியாண்டான 2026-27ல் முதல் காலாண்டில் (ஏப்ரல், மே, ஜூன்) மாதத்தில் மட்டும் 61.74 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் ரூ.5,876 கோடி) மதிப்பிலான இந்திய பொருட்கள் பாகிஸ்தானுக்கு சென்றடைந்துள்ளது.
    இது முந்தைய 2025-26 நிதியாண்டில் முதல் காலண்டை ஒப்பிடும்போது 69 சதவீதம் அதிகமாகும். ஏனென்றால் 2025-26ம் நிதியாண்டில் நம் நாட்டில் இருந்து பாகிஸ்தானக்கு மொத்தம் 3,478 கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதியாகி இருந்தது. ஆனால் தற்போது அதன் ஏற்றுமதி மதிப்பு ரூ.5,876 கோடியாக அதிகரித்துள்ளது.

    Advertisement

    இது தடைக்கு நடுவேயும் பாகிஸ்தானில் இந்திய பொருட்களுக்கான டிமாண்ட்டை காட்டுகிறது. அதேவேளையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே வாகா - அட்டாரி எல்லை வழியாக தான் வர்த்தகம் நடக்கும். தற்போது அந்த எல்லை முழுவதுமாக மூடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து எப்படி பாகிஸ்தானுக்கு பொருட்கள் செல்கிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில தான் புவிசார் அரசியல் நிபுணர்கள், ''இந்தியா - பாகிஸ்தானுக்கு நேரடியாக எந்த பொருட்களையும் ஏற்றுமதி செய்யாமல் இருக்கலாம். ஆனால் 3வது நாடுகள் வழியாக பாகிஸ்தான், இந்திய பொருட்களை வாங்கியிருக்கலாம். ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் இலங்கை நாடுகளின் வழியாக இந்திய பொருட்களை பாகிஸ்தானியர்கள் வாங்கி பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

    English Summary

    India - Pakistan Trade: Trade between India and Pakistan is currently prohibited. However, startling information has emerged revealing that, despite this ban, Pakistan continues to purchase and use goods produced in our country. Furthermore, even with the ban in place, the volume of our country's goods reaching Pakistan has increased by 69 percent compared to the previous year.