ஹீரோவான இந்திய பைலட்.. இஸ்ரேல் காட்டும் அன்பு.. உயரிய விருது அறிவித்த அதிபர்

  • டெல்அவிவ்: துபாய் - டெல்அவிவ் விமானத்தில் நடுவானில் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து இருந்தாலும் கூட விமானத்தை கடத்தும் முயற்சியை முறியடித்தார் இந்திய விமானி ஸ்மித் மச்சார். அவரை ஹீரோவாக உலகமே கொண்டாடும் நிலையில் இஸ்ரேல் நாட்டின் அதிபர், அவருக்கு உயரிய விருது அறிவித்துள்ளார்.

    Advertisement

    ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு கடந்த 30ம் தேதி 'ஃப்ளைதுபாய்' என்ற விமானம் புறப்பட்டுசென்றது. 174 பயணிகளும், பைலட்டுகள் 2 பேர் உட்பட 6 விமான பணியாளர்கள் இருந்தனர். இந்திய பைலட் ஸ்மித் மச்சார் மற்றும் ஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமி ஆகியோர் விமானத்தை இயக்கினர்.

    Advertisement

    ஜோர்டான் வான்வெளியில் பறந்தபோது தொழுகை நடத்துவதாக கூறிய ஹமிம் அல் ஹமாமி, ஸ்மித் மச்சாரை தலையில் தாக்கினார். காக்பிட்டில் உள்ள அவசரகால கோடரியை எடுத்து இரக்கமே இல்லாமல் கொலைவெறி தாக்குதல் நடத்தினார். இதில் ஸ்மித் மச்சார் நிலைக்குலைந்து போனார்.

    "என் நண்பன் சாகக்கூடாது".. ஜூலை பிளானை ஒத்திவைத்தது ஏன்? சாவுக்கு அஞ்சாத ஓமன் பைலட்டின் மறுபக்கம்

    இருப்பினும் ஸ்மித் மச்சார் போராடி காக்பிட் கதவை திறந்ததால் பயணிகள் துணை விமானி ஹமிம் அல் ஹமாமியை சிறை பிடித்தனர். பிறகு விமானத்தில் பயணித்த வேறு 2 பைலட்டுகள் விமானத்தை சவுதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் தரையிறக்கினர். படுகாயமடைந்து இருந்தாலும் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரின் துரித செயல்பாடு தான் விமானத்தையும், அதில் பயணித்த 180 பேரின் உயிரையும் காப்பாற்றியது. இதனால் ஸ்மித் மச்சாரை அனைவரும் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர்.

    Advertisement

    குறிப்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஸ்மித் மச்சாரிடம் வீடியோ காலில் பேசி ஹீரோ என்று பாராட்டினார். அதுமட்டுமின்றி நாட்டின் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடியடன் வந்து தீபச்சுடரை ஏற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு அடுத்தப்படியாக இஸ்ரேல் நாடு ஸ்மித் மச்சாருக்கு உயரிய விருதை அறிவித்துள்ளது.

    அதெப்படி துபாய் - இஸ்ரேல் விமானத்தில் கூடுதலாக 2 பைலட் பயணித்தது ஏன்? Deadheading தெரியுமா? பின்னணி

    அதன்படி ஸ்மித் மச்சாருக்கு அந்த நாட்டின் வீரச்செயலுக்கான (Presidential Award for Civilian Heroism)அதிபர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இஸ்ரேல் நாட்டின் அதிபர் ஐசக் ஹெர்சாக் அறிவித்துள்ளார்.

    Advertisement

    அதுமட்டுமின்றி ஸ்மித் மச்சாரை விமானத்தை மீட்டவர்கள், சிகிச்சை அளித்த டாக்டருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இஸ்ரேல் நாட்டின் பயணிகளான தாலி மானஸ், ஸ்விகா மானஸ், யானிவ் ஹயூன், டாக்டர் ஷோட்டா முசயேவ், அசாஃப் ராஜுவான் மற்றும் ஓர் பார்டிலோவ் ஆகியோருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டாக பிளந்த மண்டையோடு.. இந்திய பைலட்டின் மூளை பாதிக்க வாய்ப்பு - அவசர ஆபரேஷனின் ஷாக் பின்னணி

    இதுபற்றி இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கூறுகையில், ''இன்று நாம் கவுரவிக்கும் இஸ்ரேல் வீரர்களுடன் சேர்ந்து இந்தியாவை சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கேப்டன் ஸ்மித் மச்சாரின் அசாத்தியமான துணிச்சல், துணிச்சல், வீரம் மற்றும் சிறந்த தொழில்அணுகுமுறை ஆகியவை பெரும் விமான விபத்தை தடுக்க உதவியுள்ளது. அவர் உடல்நலம் தேறியதும் இஸ்ரேல் மக்களின் சார்பாக அவருக்கு 'இஸ்ரேல் அரசின் வீரச்செயலலுக்கான அதிபர்' விருது வழங்கப்படும். இந்த விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்'' என்றார்.

    English Summary

    Indian pilot Smit Machchhar thwarted an attempted hijacking on the Dubai-Tel Aviv flight, despite sustaining severe injuries during an attack by Omani co-pilot Hamam Al-Hamami mid-air. While the world hails him as a hero, the President of Israel has announced a prestigious award for him.